அவர்கள் வரும்போது..
கொங்கோ தேசம், வெறும் ஜனநாய குடியரசு
என்ற பெயரோடு வாழ்ந்தது.
வீதிகள், ரயில் பாதைகள், வைத்தியசாலைகள்,
வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம்
கட்டித்தருவேன் என்றார்கள்.
கட்டாந்தரையாக இருந்த தேசம் நிமிர்ந்தது.
பதிலாக, மண்ணில் புதையுண்டு கிடக்கும்
மூலவளங்களை சுரண்டிச்சென்றார்கள்.
இருபது வருடங்கள் கடந்து விட்டன.
ஒன்பது பில்லியன் டொலர்கள்,
நாற்பது பில்லியன்களாக திறைசேரியில் குவிந்தது.
இப்போது, தரைக்கு மேல் கொங்கோவில் கட்டடங்கள்.
மண்ணுக்கு கீழே, ஒன்றுமே இல்லை.
வெற்றுப் பூமியில் கோபுரங்கள்தான் மிச்சம்.
சுரண்டிய சீனா உலக வல்லரசு.
இதைத்தான் சீனத்துப் பொதுவுடைமை என்று சொல்வார்களோ!
இப்படியும் நடக்கலாம்…..
கற்பனையல்ல நிஜம்.
NANTHA
இரண்டு கொங்கோ இருக்கிறது. நீங்கள் எந்த கொங்கோ பற்றி சொல்லுகிறீர்கள்?
chandran.raja
இதயச்சந்திரனின் தப்பான பேச்சு. முழு ஆபிரிக்காவையும் ஐரோப்பியர்களும் அமெரிக்காவும் ( பெல்ஜியம் பிரான்ஸ் ஜேர்மனி ஸ்பானியா
இங்கிலாந்து இத்தாலி போன்ற நாடுகள் தமக்குள் உடன்பாடு வைத்து பங்கு போட்டார்கள் ) உலகமாகயுத்தத்திற்கு முன்பும் பின்பும் சுரண்டி எடுத்தார்கள் என்பதை விட வேர்ருடன் புடுங்கி எடுத்தார்கள் என்பதே உண்மை. இதையெல்லாம் தாங்கள் சுலபமாக மறந்துவிட்டு சீனாவை வம்புக்கு இழுக்கிறீர்கள். எப்படியிருந்த சீனா எப்படி வந்தது என்பதில் கேள்விகளும் விவாதங்களும் நிறையவே இருக்கிறது. மக்கள்சீனம் என்ற நாடு பணவலிமையால் மேல்லோங்கி வருகிறது. இது 1945 ற்கு ஏற்பட்ட ஒழுங்குமுறையின் பிரதிபலிப்பே!.
உங்கள் “கொங்கோ சுரண்டல்” கண்டு பிடிப்பை சீனாநாட்டிற்கெதிராக திருப்பாதீர்கள். முடிந்தால் சர்வதேசநிதி மூலதனத்திற்கெதிராக திருப்புங்கள். அதுவே சுரண்டலுக்கெதிரான வழியைத் திறக்க வைக்கும்.