வடக்கு, கிழக்கு தமிழர்களை தனிமைப்படுத்த கூட்டமைப்பு முயற்சி – திஸ்ஸவிதாரண

thissa.jpgஇலங் கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படு த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களெனவும் அவர் கூறினார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தாயக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. தமிழ் கடும் போக்காளர்களாக இருக்கும் இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றார்.

உண்மையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு பங்குபற்றவில்லை. ஏனென்றால் புலிகள் அவர்களைத் தடுத்தனர். ஆனால் புலிகள் இப்போது அரங்கில் இல்லை. இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுதந்திரமான அரசியல் கட்சியாக தேர்தலில் நிற்கிறது. இது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் அரசியல் தீர்வு யோசனையை அவர்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு முன்வைக்கலாம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

 • Ajith
  Ajith

  My dear leftist comrade Mr. Vitharane,
  May I ask you few question?
  Which party you belong to? What was the policy of your party regarding resolving tamil issue until now?
  What happened to the propasals you submitted after four years of all party conference?
  Don’t you know the aspirations of tamils that were given by in all elections up to now?
  Who and What are the obstructions to achieve tamils aspiration?
  Don’t you think that India and China are International countries? Why you all are running to get orders from China and India?
  Didn’t you know you isolated tamils from other communities in 1958 (Read Colvin R De Silva’s word: Two languages One Country; One Language Two Countries)

  You are part of the community that is responsible for genocide of tamils in Sinhala Sri Lanka.

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  இலங்கைத் தமிழர்களை இந்தியக் கைக்கூலிகளாகவும், சிங்களவரைச் சுரண்டிப் பிழைப்பவர்களாகவும் காட்டி வளர்க்கப்பட்ட இடதுசாரியம், தனது அடுத்த ஆயுதம் தாங்கிய ஜே.வி.பி. இளஞர்கள் மூலமும் ‘அஞ்சாம் வகுப்பினை’ இந்திய விஸ்தரிப்புவாதமாக விரிவடைந்தது. ஆளும் கட்சிகளின் ஆதரவகளான இலங்கை இடதுசாரிகள் அந்நிய நாடுகளின் பிச்சைப் பணத்தில் பொருமித்துப் போனார்கள். இன்றைக்கும் மேற்கத்தைய எடுபிடிகளாக தமிழர்களை சித்தரிக்க முயல்வது சிங்கள பௌத்த பேரினவாத தொடர் வெளிப்பாடே. வாதாடி விழுந்த, போராடித் தொலைந்த தமிழர்கள் இன்னும் அறிவிலி வாழ்க்கை வாழ்ந்து போகட்டும்.

  தேசக்கனவாளர்கள் ‘நிலை கழண்ட வீட்டில் போய் பால் காச்சுகிற’ மாயக்கதைகள் கேட்டு மகிழட்டும்.

  Reply
 • Rohan
  Rohan

  //அதேநேரம் அரசியல் தீர்வு யோசனையை அவர்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு முன்வைக்கலாம் என்றார்.//

  அவனவன் சாகக் கிடக்கையில் இந்த மனிதர் ஜோக்கடிக்கிறார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு பிரதிநிதிகள் அமர்ந்து எழுந்த கதிரைகளுக்கு இருந்த மதிப்புக் கூடக் கிடையாது.

  Reply
 • thurai
  thurai

  விடுதலைப் போரை நடத்திய புலிகழும், உலகத் தமிழர் பேரவையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலகப் பிரச்சினையாக்கி அதில் லாபமடைகின்றனர். இவர்களிற்கு ஈழத்தில் ஒரு நாள் உணவிற்கு வேலை தேடும் ஒரு தனி மனிதனின், த்மிழனின் பிரச்சினை பிரச்சினையாக ஒரு போது தெரியப்போவதில்லை. ஆனால் சிங்களவ்ர் ஏதோ தமிழரைத் தமிழர் ஆழ்வதைப் பறித்து விட்டார்கள் என்பதே பிரச்சினை.

  தமிழரைத் தமிழர் ஆழ்வதற்கு உருமை கொடுக்கு முன்பே அமைப்புகளிடையே நடந்த பழிவாங்கல்கள் கூறவேண்டியதில்லை. இப்போ அரசியல் வாதிகளின் ஒற்றுமை பற்ரி எழுத வேண்டியதில்லை. இதுக்கெல்லாம் காரணம் தமிழரில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையை எதிநோக்குவோரும், தமிழருள் தமிழரால் உருமைகள் ப்றிக்கப்பட்டோரும் வாய் மூடிக் கொண்டிருப்பதே காரண்ம்.

  ஈழத் தமிழரின் விடுதலை பற்ரிப் பேசுவோரும்,அரசியல் பேசுவோரும் உல்லாச அரசியல்வாதிகழும், பொழுது போக்கு விடுதலைப் பேச்சாள்ர்க்ழுமேயாகும்.

  துரை

  Reply