குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் – ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு

ranilmahinda.jpgஇராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து முக்கியமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று  சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து அவரது மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்காக உயர் நீதி மன்றம்  இன்று ஏற்று எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    //இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார்//
    இதை சொல்ல ஒரு ஜனாதிபதி வேண்டுமா?? ஆட்டோகாரனை கேட்டாலே போகும் ஊருக்கு வழி சொல்வது போல் சொல்லிபுடுவானே;

    //கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து முக்கியமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது//
    ஜயோ ஜயோ போனதே அதுக்குதான் சாமி;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    ஸ்ரீலங்காவில் குற்றம் நிரூபிக்கபடாமல் விட்டால் விடுவிக்கப்படவேண்டும் என்பது ஒரு புதினமான விடயம்.
    பழக்கதோசத்தில சொல்லிப்போட்டார, பாவம் விட்டுத்தள்ளுங்கள் !

    Reply