இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக மீண்டும் பிபிஸி!

bbc.jpgஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வொலிபரப்பு தொடர்பாக இன்றுகாலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிஸி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஸியின் ஒலிபரப்பு நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது உள்நாட்டு மோதல்கள் அனைத்தும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிபிஸியின் ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *