அரசுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்துக்கு ஆதரவாக இன்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் பெரும்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஜனாதிபதியின் வெற்றியை குறைத்து மதிப்பிட்டு ஏளனம் செய்யும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள 80 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் பெருந்தொகையான பொது மக்களும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *