8வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 6 வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.
யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார். சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தோல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தோல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின்படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.
சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.
ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை “தேசிய” அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.
ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.
போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.
வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
sekaran
மகிந்தவுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்கிற கோபத்தில் வடகிழக்கு தமிழ் மக்கள் சரத்துக்கு வாக்களித்தார்களா? அத்தனை முட்டாள்களா அவர்கள்? சிவாஜிலிங்கத்துக்கு போட்டிருக்கலாம். விக்ரபாகுவுக்கு போட்டிருக்கலாம். என் கருத்து என்னவென்றால் வாக்களிக்காத 80 வீதமானவர்கள் யாருக்கு போட யோசித்திருப்பார்கள் என்பதே. 20 ஐ வைத்துக்கொண்டு 80 ஐ எப்படி கணக்கிட முடியும்? வாக்களிக்க ஆர்வமின்மை, அடிப்படை வசதிகள் போதாமை, ஜனநாயகம் பற்றிய தெளிவின்மை (வெளிநாட்டு மோகமும் இதில் உண்டு. சமாதானம் வந்துவிட்டால் அது போய்விடுமே.) இப்படி நிறையவே உண்டு. மகிந்த அரசு எல்லாவற்றிலும் அவசரப்பட்டு, யுத்தம் முடிந்த கையோடு வன்னி மக்களின் புனர்வாழ்வு பற்றி அலட்டிக்கொள்ளாமல், மாநகராட்சி தேர்தல் என்று தேவையில்லாமல் குழப்பியதும் இதில் அடக்கம்.
அடுத்து நுவர எலியா மாவட்டத்தில் மட்டுமா மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்? அப்படியானால் பதுளை,ரத்னபுரி, கேகாலை, மாத்தளை என்று அவர்கள் பரந்து வாழும் இடங்களிலும் மகிந்த மண் கவ்வியிருக்க வேண்டுமே?
கட்டுரையாளர் ஒரு மேலோட்டமான ஒப்புமையை முன் வைத்திருக்கிறார். அது தெரியும் அம்சம். தெரியாத, அனுமானிக்க முடியாத விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
மாயா
//அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.
சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.//
தமிழர்களது வாக்குகள் எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியென்பது அனைவரும் அறிந்தது. அடுத்து தமிழ் மக்களது வாக்குகள் தமிழர் கட்சிகளது இனவாதத்துக்கு அடிமைப்பட்டு , அளித்த வாக்குகள். இவை இம்முறையும் தொடர்ந்துள்ளது. ஆனால் முன்னை விட அதிகமான வாக்குகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்திருப்பதை உணர முடியும். சந்திரிகாவின் ஆசனத்தில் கூட மகிந்தவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
சம்பந்தர் என்னவோ தமது ஆதரவாளர்கள் இன்னும் இருப்பதால்தான் சரத் பொண்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் வார்த்தை ஜாலங்களை வீசியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. தமிழர்களது வாக்குகள் மகிந்தவுக்கு எதிராக , சரத்துக்கு விழும் என இருந்த நிலை உணர்ந்து தளம் மாறியதே கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதமாகும். இவர்கள் சரியான நிலையில் உள்ளவர்களானால், ஒரு சிங்களவருக்கு , அதுவும் புலிகளை அழிப்பதற்கு தலைமை தாங்கிய சரத்துக்கு ஆதரவளிக்காமல் , ஒரு தமிழ் வேட்பாளருக்கு இவர்கள் ஆதரவளித்திருந்தால் , இவர்களை சரியானவர்களாக கணக்கெடுத்திருக்கலாம். அதனடிப்படையில் இவர்கள் தூசுக்கு கூட கணக்கெடுக்க முடியாதவர்கள்.
தற்போது சரத் பொண்சேகா , நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படியான ஒருவரை நம்பி வாக்களித்த மக்களை நம்பி வேதனைப்படுவதைத் தவிர வேறு என்னதான் சொல்ல முடியும்?
BC
பெரும் பான்மை வட கிழக்கு தமிழர்கள் இனவாதம், போர் வெறி மயக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அமைதி வாழ்க்கையை விரும்பும் தமிழர்கள் தான் பாவம்.
புலிபினாமிகளுக்கு ஓரே மகிழ்ச்சி ஒரு புலிபினாமி கட்டுரை எழுதுகிறார்.
`இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழமே எமக்கானது என்று நாங்கள் இங்கு வாக்களிக்க, சிங்கள தேசத்துடன் நீங்கள் நல்லிணக்கம் செய்துவிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம். வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை என்று நாங்கள் முழங்க, சிறீலங்கா, சிறீலங்கா என்று நீங்கள் கோசமிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம்.
சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை 80 விழுக்காடு தமிழீழ மக்கள் புறக்கணித்தார்கள் என்ற செய்தி பரவிய பொழுது எங்கள் இதயங்களில் பட்டாம்பூச்சி சிறகு விரித்துப் பறந்தது. ஆட்சி மாற்றத்தை நீங்கள் விரும்புவது உண்மைதான். ஆனால் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆட்சியை அல்லவா நீங்கள் விரும்புகின்றீர்கள்! அந்தப் பெருந்தலைவனின் வழியில் போராடும் புலிகளுக்காக அல்லவா நீங்கள் வான்றீர்கள்!“
தமிழ்வாதம்
தேர்தல் முடிவுகள் ஒன்றை மட்டும் துல்லியமாக வெளிப்படுத்தி விட்டது.
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வேறு வேறாகப் பயணிக்க விரும்புகிறார்கள் என்பதே.
chandran.raja
தமிழ்வாதத்தின் கருத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும். முற்றுமுழுதான உண்மையே! இது சரியானதோ நியமானதோ அல்ல. புலம்பெயர் தமிழர்கள் தான் யதார்த்தை காண தயங்குகிறார்கள் என்றால் ஈழத்தில் குடியிருப்பவர்களும் அந்த நிலையே!.இதுவொரு முடிவுகாண முடியாத சிக்கலான பிரச்சனை ஆகிவிடும் போல்உள்ளது.
யுத்தத்தை யாரும் விரும்புகிறார்களா?என்று கேள்வி கேட்டால் இல்லையென்பதே பதிலாக வரும். ஆனால் அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளும் முடிவுகளும் யுத்தத்தை சார்ந்ததாகவே இருக்கிறது. இனிவரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் தமிழ்மக்கள் உதவாக்கரைகளையே தெரிவு
செய்யப் போகிறார்கள்.இதன் பின்புலம் உண்மையில் என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை. இதை புரிந்தவர்கள் தேசம்நெற் வாசகர்கள் யாராவது இருக்கிறார்களா? முடிந்தால் அதுவே இனத்தை சொந்த இனத்தை அழிவில்லிருந்து காப்பாற்றும் நடவடிக்கையாகும். காலதாமதம் ஆக்காதீர்கள்.
Ragi
Again the “revenging Policy” failed for tamils.
“Tamils” would have voted unanimously for Bahu since he accepted the “self determination of Tamils”.
By voting for him, Tamils could have proved the world ( by voting in this election, that is the only thing they could have achieved )
1. Our focus is/was one and not changed
2. our unity
3. Tamils are not racists. If they voted for Sivaji then it is more like4 a communal wave.
4. Still be in a position negotiate to who ever comes to power.
Even if Tamils wanted teach a leason to MR, then TNA would have said in PUBLIC ” Without Sarath this war would not have been WON in this ugly fassion with destruction to Tamils. So Tamil may not vote for Sarath. BUT we let the Tamils decide it. …”
In this way,
1. Tamils would have voted to Sarath ( hatred of MR )
2. Any comunal minded Sinhalese also would have voted to Sarath
3. MR would not have the chance to canvas against Sarath on Tamils
mano
சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த சிங்கள மக்கள் எல்லோரும் யு.என்.பி.க்காகவோ அல்லது யுத்த வெற்றி நாயகன் என்று நினைத்தோ வாக்களிக்கவில்லை. தமது பொருளாதார நெருக்கடிக்கான காரணம் இந்த அரசாங்கம் இதை அகற்றிவிட்டால் இன்னொரு அரசாங்கத்தை தெரிவு செய்வோம் என்ற எண்ணமே பிரதானம். இதே காரணம் தமிழர்களுக்கு இல்லை என்று நினைப்பது தப்பு. கிழக்கு மாகாணத்தின் மாகாணசபையின் நிலை இன்னொரு காரணம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு ஒரு காரணம். மற்றொரு முட்டாள்தனமான சுயநலம்> வெளிநாட்டுக்கு சென்று குடியேறமுடியாமல் போய்விடுமோ? எமது உறவினர்களை திருப்பி அனுப்பிவிடுவார்களோ? இதுவும் காரணம்.
இன்னொன்று புலம்பெயர் தமிழர்களின் பிரசாரம்> அவர்கள் புலித் தமிழர்களா அல்லது வெறும் தமிழர்களா? தெரியவில்லை. ” மகிந்த ஆட்சியில் சீனா இலங்கையை ஆக்கிரமித்துவிடும் அல்லது இந்தியா ஆக்கிரமித்துவிடும்”
மகிந்தவுக்கு வாக்களித்தவர்கள் சிலர்> இவர்கள் தமிழ் பிரதேசத்தில் ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைகள் சிக்கலின்றி தொடரவேண்டும். இந்த யுத்தம் முடிந்துபோனதற்கு மகிந்தவே முக்கியம். நாங்கள் ஏ-9 பாதையால் போய் வருகிறமே. கனவிலும் நினைத்துப் பார்க்காதவை நடந்திருக்கிறதே” என்று நிம்மதியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம் தமிழ் மக்களிடம்> அதாவது வாக்களித்தவர்களிடம் கூட இல்லை. சம்பந்தனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் சரத் பொன்சோகாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். டக்ளஸை ஏற்றுக்கொண்டவர்களும் மகிந்தவுக்கு வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள்.
கட்டுரையாளரின் மேலோட்டமான பார்வை சில தவறான கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.
nathan
(தற்போது சரத் பொண்சேகா இன நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படியான ஒருவரை நம்பி வாக்களித்த மக்களை நம்பி வேதனைப்படுவதைத் தவிர வேறு என்னதான் சொல்ல முடியும்)
மாயா அவர்களே நீங்கள் கூறியது போல் மக்கள் வேதனையுடனும் துன்பத்துடனும் வாழ்தால்தானே வெற்று வார்தைகளாலும் வீரப் பேச்சுக்களாலும் தெடர்ந்தும் தங்கள் எம்.பி கதிரையில் இருக்கலாம்தானே
BC
//யுத்தத்தை யாரும் விரும்புகிறார்களா?என்று கேள்வி கேட்டால் இல்லையென்பதே பதிலாக வரும்.//
இது கூட புலிகள் அங்குள்ளவர்களின் மண்டைக்குள் புகுத்திய விடயமாகும். வெளிநாட்டு நிருபர் புலியை பேட்டி எடுப்பார் அப்போ புலி சொல்லும் யுத்தத்தை நாங்கள் யாரும் விரும்ப வில்லை என்று ஆனால்….கொலை செய்வதும் குண்டு வைப்பதும் தான் தொழில்.
மூடதனமான நம்பிக்கைகளை கட்டிபிடித்து காப்பாற்றுபவர்கள் தான் எங்கள் ஆட்கள்.
chandran.raja
இந்த நேரத்தில் இன்னுமொரு விஷயத்தை நினைவுகூரவேண்டும். மகிந்தா ராஜபக்சா ஒரு முறை சொன்னார்; “தமிழ்மக்கள் என்ன கேட்கிறார்களே அதையெல்லாம் என்னால் கொடுக்க முடியாது. அவர்களுக்கு எது தேவை என்பதை நான் அறிவேன்” இதன் அர்த்தத்தை மேல்லோட்டமாகப் பார்க்கும் போது அகங்காரம் ஆணவம் மிக்க வார்த்தைகளாகவே தோன்றும். உண்மையில் அது அப்படியில்லை. ஆழமான இந்த கருத்து ஜனாதிபதி தேர்தலுக்கு பலமாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. தேர்தலுக்கு பின் உண்மையாவதை நிரூபித்து நிற்கின்றன.
சுகந்திரகட்சியுடன் ஒத்துழைக்காதவர்களே தமிழ்மக்களிடம் அநேகமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஜனாதிபதி தேர்தல் இனம்காட்டி நிற்கிறது. நாளை பாராளுமன்றத் தேர்தலிலும் பெருமளவு மாற்றம் இல்லாமல் இதுவே நடக்கப்போகிறது. தமிழ்மக்களுக்கு அதிகாரம் கிடைத்தால் அவற்றை ஏகாதிபத்திய சக்திகளுக்கு விற்று இலங்கையை மட்டுமல்ல கிழக்காசியாவை குட்டிச்சுவராக்கி விடுவார்கள். இந்தபிற்போக்கு சமூகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டால் ஏழைப்பிள்ளைகள் தற்கொலை படையாகவும் சயினைட்டையும் கடிச்சு சாக பிரபாகரன் தன் பிள்ளைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாக இருந்தது போல் ஆகாதா? தமிழர்களே! (தேசம்நெற் வாசகர்களே) இதற்கு தகுதியான பதிலை வழங்குங்கள்
ANBU
இலங்கையின் பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வுதான் நடைமுறைக்கு வரக்கூடியாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு மாறான ஏற்பாட்டால் பயன் விளையாது என்பதை மறந்துவிடக்கூடாது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் ராஜ பட்ச தெரிவித்தார்
Thank you Mr.Douglas Devananda, Mr.Siththarathan
rasaththi
வடகிழக்கு தேர்தல் முடிவுகள் பற்றி பலரும் துள்ளிக்குதிக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த இலங்கைத்தீவிலுமே மகிந்தா கூட்டணி முன்னேற்றதையே கண்டுள்ளது. தெற்கில் மடங்காகவும் வடகிழக்கில் சிறிய அளவிலதான் என்பதுமே உண்மை. வடகிழக்கில் கடந்த பாரளமன்றத்தேர்தலில் ஐதேக -முஸ்லிம் காங்கிரஸ் -கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் இந்த தேர்தலில் குறைந்திருக்கிறது. கூட்டணி 22 ஆசனங்களைக் கைப்பற்றமுடியாது. டக்ளசுக்கு இன்னம் ஒரு ஆசனம் கூடியிருக்கிறது. மட்டக்களப்பில் சுந்தந்திரக்கட்சி வளற்சி கண்டிருக்கிறது. மகிந்தா நம்பிக்கைக்குரிய தலைவராக தனதுஅடக்கமான பேச்சுகளின் மூலம் நிரூபித்து வருகிறார். புலம்பெயர்தேசத்திலிருந்து இதுவரையில் புலி ஆதரவாளர்களின் அறிவவளங்கள் மட்டும்தான தமிழ்மக்களைச் சென்றடைந்தது. ஆனால் கண்டது அழிவைத்தான். மாற்றுக்கருத்தாளர்களுக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம். சமூகத்தில் அக்றையுள்ளவர்கள் வெறும் குழுவாதம் தனிநபர் காழ்ப்புகளைத் தவிரத்து ஈழத்தமிழ்மக்களுக்காக ஏதாவது செய்யமுற்சிப்பது நல்லது
மாயா
//chandran.raja on January 28, 2010 8:03 pm மகிந்தா ராஜபக்சா ஒரு முறை சொன்னார்; “தமிழ்மக்கள் என்ன கேட்கிறார்களே அதையெல்லாம் என்னால் கொடுக்க முடியாது. அவர்களுக்கு எது தேவை என்பதை நான் அறிவேன்” //
இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ :
“இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். – வீரகேசரி //
இது யதார்த்தம். பொய்யுரைத்து மக்களை மடையர்களாக்குவதை விட , யதார்த்தம் உணர்ந்து , அதை பேசி ஆட்சிக்கு வருவது மேல். அந்த நேர்மை மகிந்தரின் பலம். மகிந்தவால் தமிழருக்கு ஏதாவது கிடைத்தால் ஒழிய, வேறு எவராலும் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தக் கப்பலிலாவது தமிழர்கள் ஏறுவார்களா என பார்க்கலாம்? இல்லையென்றால் புலிகள் விரும்பும் அகதி முகாம்கள்தான் இருக்கிறதே?
தவிர புலிகள் விரும்பிய சரத் கூட்டுக்குள் பிரச்சனை தொடங்கி விட்டது. இதோ:
//”ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.”- ஐதேகட்சி//
இலங்கை வாழ் தமிழர்கள் (புலம் பெயர் புண்ணாக்குகள் அல்ல) இனியாவது தமது தலைவிதியை தீர்மமானிக்க செயலாற்ற வேண்டும். வெளிநாட்டு தமிழர்களது சொற் கேட்டு தமிழர் நடு ரோட்டுக்கல்ல, கோவணத்தோடு நிற்கின்றனர். இது இனியும் தொடரலாது.