அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: ரணில்

ranil.jpgஅமைதி யான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களை உரிய முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • kamal
    kamal

    சனல் 4 ல் வெளியான வீடியோ இராணுவம்தான் செய்தது என்று உறுதியானபோதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதவாறு பேரினவாத அரசுகள் நாடகமாடி முடித்துவிட்டனர் என்பதற்கு ரணிலின் இந்த அறிக்கை சாட்சி.

    வன்னியில் யாழில் குண்டுவெடிப்பு பிக்கு கொலை இன்னும்சிலர் காயம் சில இடங்களில் ஊரடங்கு என்பதை எல்லாம் மறைத்து தேர்தல் அமைதியாக நடந்தது என்று அறிக்கை விட்டுள்ளார்.

    தமிழர் மகிந்தாவா ரணிலா என அடிபட்டுக் கொண்டிருங்கோ. அவர்கள் சிங்களவர்கள் என்பதுள் ஒன்றாக உள்ளார்கள். சிங்களவன் மோட்டுச் சிங்களவன் சொல்லிச் சொல்லி தமிழர் மோட்டுத் தமிழரானதுதான் மிச்சம்

    Reply