புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் நடைபெற ஏற்பாடு

prabakaeans-father.jpgஜனவரி 6ல் காலமான காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் அவரின் பூர்வீக நிலமான வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை இவரது இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 86 வது வயதில் காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளார் உறுதி செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் ஜனவரி 9ல் வல்வெட்டித்துறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என திரு வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உறவினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். திருமதி வேலுப்பிள்ளையினதும் அவர்களுடைய கனடாவில் உள்ள மகளினதும் விருப்பத்திற்கு இணங்க இறுதிக்கிரியைகளை தான் மேற்கொள்ள உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இவற்றுக்கு முன்பாக மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி தான் கேட்டுள்ளதாகவும் இறுதிக் கிரியையை குடும்பத்தினர் விருப்பத்தின்படி மேற்கொள்ள அரசு சம்மதித்து உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

வேலுப்பிள்ளையின் மரணத்தை அடுத்து அவரது மனைவியை விடுதலை செய்ய அரசு சம்மதித்து உள்ளதாகவும் தெரியவருகின்றது. இறுதிக்கிரியைகளில் பங்குபற்றும் திருமதி வேலுப்பிள்ளை அதன் பின்னர் தனது மகளிடம் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

திரு வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தொடர்பாக யாழ் மாவட்ட பா உ எஸ் கஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ”தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது.” என வைகோ தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

._._._._._.

(இது புலிகளின் எப்பிரிவு என்பது குறிப்பிடப்படவில்லை.)

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010

இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    அவருடைய ஆத்மா சாந்தியடைய அஞ்சலிகள். நடந்த விஷயங்களை ஆராய்ச்சிப்படி அணுகும்போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பிரபாகரன் உட்ப்பட, முள்ளிய வாய்க்காலின் கடைசி சமயத்தில், “பலருடைய அழுத்தத்தையும் மீறி”, ராஜபக்ஷேவும், பாதுகாத்துவிட்டதாக ஒரு “கற்பனை செய்தி”. அதன்படி அவர்கள் அஞ்சலி செலுத்துவர்களாக!. இதைவிட மனிதாபிமானமான “கல்லில் நாறுரித்தல்” எனக்கு தெரியவில்லை!. இற்ந்த மக்களின் பழியை போராடியவர் மீது மட்டும் போட முடியாது!. வினாயகமூர்த்தி முரளிதரன் கூறியமாதிரி, போராடுவதற்கு அப்பாவி இளைஞர்களை “உசுப்பேத்திவிட்டு” போராட்டத்தில் பங்கெடுக்காமல், வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்துவிட்டு, போரட்டத்தை எள்ளி நகையாடியவர்கள்தன், இன்று “அரசியல் ஒப்பாரி வைக்க வருகிறார்கள்”. இதற்கு பிரத்தியேக விளக்கங்கள் உள்ளதா என்று ரத்தின ஜீவன் ஹூல்தான் கூறவேண்டும்!. மாற்றாந்தாய் – குழந்தை – சாலமன் கதையில், வருவது போல், எங்களுக்கு பிரபாகரன் எடுத்த அரசியல் முடிவுகள் “ராஜீவ் காந்தி, ஆனையிறவில் சரணடைந்த ராணுவத்தினர், மாவிலாறு, கிளிநொச்சி, முள்ளியவாய்க்கால்” போன்றவை யாருடைய “உசுப்பேத்தலினால்” என்பதிலிருந்து, பிரபாகரன் அரசியலிலிருந்து ஒதுங்கினால் நல்லது என்பதுதானே தவிர “கூண்டோடு கைலாசம்” என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது!. “சாவு வீட்டுக்கு வந்தால்” மனதாரதான் அழுவோமே தவிர, “உசுப்பேத்தியவர்கள் மாதிரி”, “பந்தலிலே பாவக்காய்…. போகையிலே பாத்துக்கலாம்,..போகையிலே பாத்துக்கலாம்…” என்று மூக்கை சிந்திப் போட மாட்டோம்!. கற்பனை உண்மையாக இருக்க வேண்டும் என்ற மனிதாபிமானத்தில், நிம்மதியடைகிறேன்!.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இவரின் ஆத்மா சாந்தியடைந்து மகன் குடும்பத்துடன் மறுவாழ்வு பெற்று இன்புற்றிருக்க ஆண்டவனைப் பிராத்தித்திப்போம். மகனைப் பெற்று மனிதன் பெருமைப்பட்டதை விட துன்பப்பட்ட காலமே கூட. இருந்தாலும் தமிழ் உணர்வாளராக இவர் இருந்தற்கு பலசான்றுகள் உண்டு. பாவம் சாகுங்காலத்தில் கடசி மகனுடன்தான் இருக்கவேண்டும் என்று முள்ளிவாய்காலில் வந்து நின்ற மனிதன். நானறிந்த மட்டில் நல்ல நேர்மையான கடவுள் பக்தியுள்ள ஒரு நல்ல மனிதரை இந்த மண் இழந்திருக்கிறது.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    வேலுப்பிள்ளை அவர்கள் எனது மாமனார் வீட்டிற்குப் பக்கத்தில் நீர்கொழும்பில் வாழ்ந்தவர்.பிரதேசக் காணி அதிகாரியாகக் கடமை புரிந்தவர்.இது அனைவரும் அறிந்ததே.இங்கு எனது மாமனாரின் தகவலின்படி:வேலுப்பிள்ளை அவர்கள் ஊழலற்ற அதிகாரியாகவே இயங்கியவர்.எவரது பெயரிலும் அரச காணிகளை மடக்கிப்போடாதவர் என்று கூறுகிறார் மாமா.கூடவே வேலுப்பிள்ளை அவர்கள் “நடந்த பாதைப் புல் சாயாது”என்றும் கூறுகிறார்.இது எனக்கு ஆச்சரியமாகத்தாம் இருக்கிறது.

    ஏனெனில் எனது உற்ற உறவினரும் காணி அதிகாரியாக இருந்தவர்.கொல்பிட்டியில் மாடாமாளிகைகட்டி வாழ்ந்தார்.தீவுப்பகுதி பூராக அவருக்குக் காணிகள் புதிது புதிதாகச் சொந்த மாகியது.எல்லோம் காணி அதிகாரியான அவருக்கே வெளிச்சம்.

    இத்தோடு வேலுப்பிள்ளை அவர்களை ஒப்பிடும்போது மனிதர் ஊரார் சொத்துக்கு ஆசையற்றே இருந்திருக்கிறார்.ஆனால் அவரது மகன் பிரபாகரன் ஊரார் சொத்துக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆசைகொண்டு அனைத்தையும் சுருட்டி ஆருக்காகவே வினை செய்து மாண்டுபோனார்.என்றபோதும் அத்தகையவருக்கு தந்தையானாலும் அவரது பாத்திரத்தை வைத்து-கடந்த காலத்தில் ஊழற்கறைபடியாத அவரது பணியை வைத்து அவரது இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Reply
  • Varatharajan
    Varatharajan

    சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவராகப்பணியாற்றிய திரு ராஜபக்ஸ நான் அதன் தமிழ்நிகழ்சசி அதிகாரியாகப்பணியாற்றியவேளை எனக்கும் அங்கிருந்த சில சிங்கள அதிகாரிகளுக்கும் ஒருமுறை சொன்னார். “பிரபாகரனின் தகப்பனார் வேலுப்பிள்ளையுடன் நான் பணியாற்றினேன். நல்ல ஒரு உத்தியோகத்தர். அப்படியான உத்தியோகத்தர்களை இப்போ நாம் காணமுடியாது. எங்களுக்கெல்லாம் ஆலோசனை தருவார். நல்ல மனுசன். சிங்கள மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.(அதற்கு சில உதாரணங்களையும் சொல்லி அங்கிருந்த சிங்கள அதிகாரிகளை ஆச்சரியத்துடன் தலைவர் சிரிக்க வைக்கிறார்…) அப்படிப்பட்ட அந்த நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு மகன் பிறந்தது அவருடன் பணியாற்றிய எம்மவருக்கெல்லாம் ஆச்சியம்தான்…!”-இப்படி ஐரிஎன் னின் தலைவர் சொன்னதை இவ்விடத்தில் பகிரலாம் என எண்ணுகிறேன்.

    Reply
  • Sivam
    Sivam

    வேலுப்பிள்ளை என்ற முதியவர் பனாகொடை இராணுவ முகாமில் மரணமானது ஸ்ரீலங்கா அரசு, எதிர் கட்சிகள், TNA , புலியின் அணைத்து கன்னைகள் மற்றும் புலி எதிர்ப்பு ஜனநாயக வீரர்கள் அனைவரினரதும் அவமான அரசியலின் சாட்சியாகும்.

    இவரை போன்று இன்னும் சிறையில் வைக்கப்படிருக்கும் முதியோர்களை பற்றியோ அல்லது சிறையில் மரணமாகியோர் பற்றியோ ஒருவரும் வாய் திறப்பதில்லை. மகிந்தா ஐயா A9 பாதையினை திறந்தது பற்றியும், பொன்சேகா துரை செய்யவிருக்கும் வித்தைகள் பற்றியும் மயக்கத்தில் இருக்கும் இவர்களிக்கு, வேலுப்பிள்ளையின் மரணம் பிரபாகரனின் கொடுமைகளை மீண்டும ஒருமுறை சொல்லி தங்களை திருப்திப்படுத்திக் கொள்ள ஒரு அரிய சந்தர்பம்.

    சிலர் பிரபாகரன் என்ற கொடியவனை பெற்ற நல்ல மனிதன் என்றும், உயிரோடு இருந்த காலத்தில் மகனை பற்றி நல்ல கருத்து வைத்திருக்கவில்லை என்றும் திருப்திபடுகின்றனர். சிலர் இந்த நல்ல மனிதனுக்கு எப்பிடி ஓர் கொடிய மகன் பிறந்தான் என்று இந்து மதக் கோட்பாடுகளில் ஏதோ பிழை இருக்கின்றதோ என்று மனம் கலங்குகின்றனர்.

    வேலுப்பிள்ளை மகனின் ஆட்சி கொடிகட்டிய காலத்தில் எப்படி இருந்தார் என்பது பற்றி எவரும் என்னவும் இனி சொல்லலாம். பகிரங்கமாக புலிகளின் அரசியலை ஆதரிததாகவோ அல்லது எதிர்த்ததாகவோ தெரியாது. ஆனால் இன்று மட்டும் வெளிவந்த தகவல்களில் இருந்து இந்த முதியவர் ஒன்றை மட்டும் செய்யவில்லை. செத்த நாய்க்கு காலால் அடிக்கவில்லை. அதன் மூலம் தனது உயிரை பாதுகாக்க முயலவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நான் அறிந்தவரையில் திரு வேலுப்பிள்ளை அவர்கள் நேர்மையான மனிதர். மகன் செய்த கொடுமைகளுக்காக ஒரு நல்ல மனிதர் நிச்சயம் வேதனைப்பட்டிருப்பார். அவரின் நல்ல மனது போலவே படுக்கையில் கிடந்து துயரப்படாமல், விரைவாக காலன் அவர் உயிரையும் பறித்துக் கொண்டான். அவரின் ஆத்மா சாந்தியடையும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அப்பப்பா…. பின்னூட்டங்களில் அனுதாபம் ஆறாக வழிந்தோடி சுனாமி வந்துவிடுமோ என்னும் நிலை வந்திருக்கிறது. மஹிந்தா சொன்னார்…மாமா சொன்னார்..புல்லுச்சாயாது….என என்னவெல்லாமொ சொல்லுகிறார்கள்.
    ஆனால் இதே மஹிந்தா இவரை ஏன் ராணுவக்காவலில் வைத்திருந்தார் என சொல்லி இருக்கலாமே? திசைநாயகம் எழுதிய ரிப்போட்டுகளை கொண்டு சென்று வினியோகித்த மஹிந்தா அவரை 10 வருடங்களின் பின்னர் உள்ளே போட்டது மாதிரித்தான் இதுவும். இவரையாவது விடுங்கள் இன்னும் எத்தனை வயதானவர்கள் இருக்கிறார்களோ? ஒருவேளை தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர்களை நல்லூர் அழைத்துச் சென்று சமாதானப்புறா பறக்கவிடுதல் போல் விடுவார்களோ?

    Reply
  • lamba
    lamba

    இயற்கை மரணம் என்று சொன்னால் இல்லை அது கொலை என்று ‘மாற்றுக்கருத்து’ வராமல் இருக்கே என்று பார்த்தேன். அறிக்கையாயே வந்திட்டுது.

    அதுசரி பிரபாகரன் தகப்பனுக்கு அனுதாபம் தெரிவிக்கவில்லையா??

    Reply
  • பல்லி
    பல்லி

    //நான் அறிந்தவரையில் திரு வேலுப்பிள்ளை அவர்கள் நேர்மையான மனிதர்//
    உன்மைதான் பார்த்திபன் இவர் பல இடங்களில் மகனால் அவமானபட்ட சம்பவங்களும் உண்டு; ஆனால் எந்த காலத்திலும் தேசியதலையின் அப்பா என்பதால் சுகவாழ்வு வாழ்ந்ததாய் நான் அறியவில்லை, இருப்பினும் ஒரு வயோதிபர்(யாராக இருந்தாலும்) இப்படியான இறப்பு கவலைக்குரியதே, இதையும் புலியும் சிங்கமும் அரசியலாக்காமல் இருந்தால் சரி, இதுகிடையில் சிவாஜி அண்ணை அவரது உடலை தரும்படி கேட்டதாய் ஒரு செய்தியும் உண்டு;
    யாரும் ஒரு வயோதிபரின் உடலை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்; அவரது ஆத்மாவுக்கு பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இதுகிடையில் சிவாஜி அண்ணை அவரது உடலை தரும்படி கேட்டதாய் ஒரு செய்தியும் உண்டு…/

    அவர் கேட்கவில்லை. மாறாக கனடாவில் வாழும் பிரபாகரனின் சகோதரி தனது தகப்பனாரின் உடலை அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பேற்று இறுதிக்கிரியை செய்யுமாறு கேட்டதனால் சிவாஜிலிங்கம் உடலைப் பொறுப்பேற்று வல்வெட்டித்துறை கொண்டு செல்ல உள்ளதாகவும் ‘விரிவான’ செய்தி வந்தது. இதற்குத் தேவையான சத்தியக்கடதாசி ஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரி முன்னிலையில் இறந்தவரின் மகள் கைச்சாத்திட்டு சிவாஜிலிங்கத்துக்கு அனுப்பப்பட்டாலே செல்லுபடியானதாகும்.

    Reply
  • rohan
    rohan

    சரி – இவர் அந்திக்கிரியைகள் அரசியல் மயப்படுத்தப்படுமா? அனுமதிகள் தடை செய்யப்படாதவிடத்து எத்தனை பேர் அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வர்? அது அரசுக்கு எதிரான – அல்லது புலிகளுக்கு ஆதரவான நிலைமையின் உணர்வு வெளிப்பாடாகக் கொள்ளப்படலாமா?

    Reply
  • uththamapuththiran
    uththamapuththiran

    உதெல்லாம் ஓவர். திரு. வேலுப்பிள்ளை போல பலர் செத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். பிரபாகரன் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத கவனம் அக்கறைதான் இந்த அஞசலிகள்.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மகளிடமோ டென்மார்க்கிலுள்ள அவரது மகனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

    இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

    இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று, நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

    அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

    விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

    கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    Reply
  • மேளம்
    மேளம்

    காலமான அந்த முதியவருக்கு மேளம் குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • Varatharajan
    Varatharajan

    ஒருவருடைய கருத்தைப்பற்றிக் கருத்துச் சொல்ல முன்னர் அதனை நன்கு வாசித்துத் தெளிவடைந்த பின்னர் சொல்லுவது நல்லது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிற்றரசன் வன்னியை ஆண்டகாலத்தில் வழியெல்லாம் பிணம். மக்கள் தங்கள் உறவினரை புதைப்பதற்கு ஒருவெள்ளைத் துண்டையே தேடித் திரிந்தார்கள். தாய் தகப்பன் சிறுவர் சிறுமியர் பாலகன்கள் அடங்குவர். தமிழ் இனத்தின் சோக வரலாறின் ஒரு பதிவாக அடங்கியொடுங்கியது.
    முப்பது வருடம் ஒருஇனம் தனது தலைமையை தேடமுடியாதவாறு தமதுவாழ்வை நிச்சியப்படுத்த முடியாதவாறு புலம்பெயர் சுயநலமியது சிந்தனையும் அவர்களது பொருளாதாரப் பலமுமே இந்த இக்காட்ட நிலையை உருவாக்கியது என்பது அறிவாளிகளின் கருத்து.

    வேலுப்பிள்ளை வாழ்ந்த காலத்தில் கடமை தவறாத கண்ணியமான மனிதராகவே கணிக்கப்படுகிறார். அப்படித்தான் அவரைப் பற்றி அறிந்தவர்கள் கருத்துரைக்கிறார்கள். மகன் சிற்றரசனாக இருந்த போதிலும் அதைப் பயன்படுத்தி எந்த சுகபோகத்தையும் அனுபவித்தவராகத் தகவல் இல்லை.
    நீதி நேர்மை என்று சொன்னால் எமது சமூகத்தில் ஒருசில ஆசியர்களை அரசாங்க உத்தியோகஸ்தரையே காணமுடியும். அந்த வரிசையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் ஒரு மனிதன். வேலுப்பிள்ளையின் மகனே பிரபாகரன். அவர்களுக்கு இருந்த உறவுகளும் அப்படிப்பட்டதே! இதையாரும் அரசியல்மயப்படுத்த முயற்சித்தால் அது முட்டாள்கள் செய்கிற காரியமாகவே முடிவடையும். உதாரணத்திற்கு பிரபாரனையும் அவரை நம்பியவர்களையும் சொல்லலாம். இருவருக்கும் வேறு அர்த்தத்தில் முடிச்சுப் போடுபவர்கள் அரசியல் பிழைப்புக்கு வழிதேடுபவர்களே!

    திருவேங்டம் வேலுப்பிள்ளைப் போல் பலபத்துப்பேர் விலாசம் இல்லாது காற்றில் கரைந்து போனார்கள். இருந்தாலும் அவர்மனம் சாந்தியடைய எனது அஞ்சலிகள்.

    Reply
  • Anonymous
    Anonymous

    இறந்த உடனே இயற்கை மரணம் என்று அறிவித்தது எப்படி? மருத்துவர் அறிக்கை, மருத்துவர் பெயர் ஏதாவது வெளிவந்ததா?

    பிரபாகரன் இறந்ததை அரசு அறிவித்த போது, அந்த சகோதரங்கள் உடலை அடக்கம் செய்ய ஏன் கேட்கவில்லை? சிவாஜி இலங்கையில் இல்லாததாலா?

    ‘தேசியத் தலைவரின்’ தந்தையை, சிவாஜியின் மூலம் வல்வெட்டித்துறைக்குள் நங்கூரம் இடுவது ஏன்? யாருடைய அரசியலுக்கு காவு கொடுக்கப்பட்ட இறப்பிது?
    சிவாஜிக்கு வாக்கெடுக்க வந்த மகிந்த சிந்தனையா? சம்பந்தர் உங்கள் தெரிவில் விழுந்த சம்பவமா இது? ஒன்னுமே புரியல்லேப்பா!!

    Reply
  • lio
    lio

    பிரபாகரன் இறந்ததை அரசு அறிவித்த போது அந்த சகோதரங்கள் உடலை அடக்கம் செய்ய ஏன் கேட்கவில்லை? சிவாஜி இலங்கையில் இல்லாததாலா? //

    அந்தநேரம் தாய் தகப்பன் உயிரோடை இலங்கையில் இருந்தாங்களே!!

    Reply
  • Sampanthan
    Sampanthan

    பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜியிடம் ஒப்படைப்பு

    பிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர் இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென்மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.

    திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வவுனியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது – பிரபாகரனின் தாயும் விடுவிப்பு

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரது பூதவுடலை தாம் இன்று படையினரிடம் இருந்து பொறுப்பேற்று வவுனியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நாளை காலை பூதவுடலை, ஏ 9 வீதியின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்சென்று வல்வெட்டித்துறையில் உள்ள, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது வீட்டில், அஞ்சலிக்காக வைத்த பின்னர், நாளை மறுநாள் 12 மணியளவில், ஊரணி மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

    இதேவேளை, தமது வேண்டுகோளின் பேரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயும் இராணுவ காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    Reply
  • Puthiyavan Rasiah
    Puthiyavan Rasiah

    திரு. வேலுப்பிள்ளை அவர்களதும் அவரைப் போலவே பிரபாகரனுக்கு சொந்தமில்லாத காரணத்தால் அறியாமலே புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்குமா என் குடும்பத்தின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Dear readers,
    tamil people,particularly Jaffna people have just started to reap the benfits of the post Prabhaharan period.I have read father of VP, ws a good man and an honest public servant.I have been told my friends in vadamaradchy that the temple administered by the father Velupillai has not permitted the lower caste tamils equal worshipping rights in the temple.Is it true.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இறந்த முதியவருக்கு எமது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

    Reply
  • மாயா
    மாயா

    அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.

    பிரபாகரனின் தந்தையாரது ஓய்வுதியத்தை , அவரது மனைவி வல்லிபுரம் பார்வதி பெயருக்கு கிடைப்பதற்கு வழி செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    Reply
  • rohan
    rohan

    பிரபாகரனின் தந்தையாரது ஓய்வுதியத்தை , அவரது மனைவி வல்லிபுரம் பார்வதி பெயருக்கு கிடைப்பதற்கு வழி செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது என்ற தகவலுக்கு நன்றியுடையோம். ஆனால், அவர் வேலுப்பிள்ளை பார்வதி என்றில்லாது ஏன் வல்லிபுரம் பார்வதியாக இருக்கிறார்? அரசு ஏன் பிரபாகரனின் தந்தையாரின் ஓய்வூதியம் என்று சொல்கிறது? முறைப்படி, திரு வேலுப்பிள்ளையின் ஓய்வூதியம் திருமதி வேலுப்பிள்ளைக்குப் போகிறது என்பது தான் சரியான அறிவிப்பு. அது கூட, பென்ஷன் அல்ல – விதவைகள் அனாதைகளுக்கான கொடுப்பனவு என்பதே சரியான பதம்.

    இதே அரசு தான் சரத் பொன்சேக பிரபாகரனின் குடும்பம் தேர்தல் நிதி தந்தால் பெற்றுக் கொள்வேன் என்று சொன்னதை ஒரு பிரசார உதவியாகப் பயன்படுத்தியது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன்,
    நீஙகள் தெரியாத விடயங்களைத் தெரிந்து கொண்டு கருத்தெழுதலாமே. கணவனின் இறப்பிற்குப் பின் கணவனின் பென்ஷன், மனைவிக்கு அவரின் இறபபுவரை கிடைக்கும். அது பென்ஷன் தானேயொழிய, விதவைகள் அனாதைகளுக்கான கொடுப்பனவு அல்ல. கணவனின் இறப்பிற்குப் பின் மனைவிக்கு அந்தப் பென்ஷன் பணம் தானாகக் கிடைத்து விடாது. சில அத்தாட்சிகள் சமர்பித்தே, அந்தப் பென்ஷன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும்.

    அடுத்து சரத் பொன்சேகா பிரபாகரன் குடும்பம் என்று குறிப்பிடவில்லை. வெளிநாட்டுப்புலிகள் தேர்தல் நிதி தந்தாலும் பெற்றுக் கொள்வதாகவே சொன்னார். ஒரு பக்கம் எஞ்சியிருக்கும் சில புலிகளால் தனது உயிருக்கு ஆபத்தென்று கூறி, அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று நீதிமன்றில் மனுக் கொடுத்தவிட்டு, அதே புலிகள் நிதி தந்தால் ஏற்றுக் கொள்வேனென்று புலம்புவது யாரை ஏமாற்ற??

    Reply
  • மாயா
    மாயா

    //அவர் வேலுப்பிள்ளை பார்வதி என்றில்லாது ஏன் வல்லிபுரம் பார்வதியாக இருக்கிறார்? – rohan //

    பார்வதியது அடையாள அட்டை உங்களிடம்தான் இருக்கிறது என்பது அரசுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்கள் கொடுத்துள்ள பெயர் பொய்தான் என்பதை உடன் அரசுக்கு அறிவியுங்கள் rohan .

    Reply
  • BC
    BC

    //பார்த்திபன்- கணவனின் இறப்பிற்குப் பின் கணவனின் பென்ஷன், மனைவிக்கு அவரின் இறபபுவரை கிடைக்கும்.//

    நான் நினைக்கிறேன் அது தமிழீழத்திற்கு தான் பொருந்தும் என்று அவர் நம்புகிறார். சிங்கள அரசு கொடுப்பது அனாதைகளுக்கான கொடுப்பனவு என்று கருதுகிறாரோ!

    Reply
  • rohan
    rohan

    //றோகன்,நீஙகள் தெரியாத விடயங்களைத் தெரிந்து கொண்டு கருத்தெழுதலாமே. கணவனின் இறப்பிற்குப் பின் கணவனின் பென்ஷன், மனைவிக்கு அவரின் இறபபுவரை கிடைக்கும். அது பென்ஷன் தானேயொழிய, விதவைகள் அனாதைகளுக்கான கொடுப்பனவு அல்ல.//

    மிக்க நல்லது.
    ஒருவர் பணியில் இருக்கும் போது விதவைகள் அநாதைகள் (முன்னரே மனவி இறந்து விட்டிருந்தால் பிள்ளைகள் இச்சொல்லால் சுட்டப்படுவர்) கொடுப்பனவுத் திட்டம் என்ற நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வர். இந்த நிதியத்திலிருந்து தான் பணி புரிந்தோரின் விதவைகளுக்கானதும் பிள்ளைகளுக்கானதுமான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. பென்ஷன் என்ற பொதுச் சொல் அவ்வப்போது வசதிக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், விதவைகளுக்கான கொடுப்பனவு என்பதே சரியான பதமாகும்.

    கணவரின் இறப்புக்குப் பின்னர் அவரது பென்ஷன் மனைவிக்கு அவரது இறப்பு வரை கிடைக்கும் என்பது தவறு. பென்ஷனிலும் விதவைகளுக்கான கொடுப்பனவிலும் ஒரு முதிர்வு நிபந்தனை வேறு இருக்கிறது.

    எனக்குத் தெரிந்த விடயங்கள் பற்றிச் சொன்னாயிற்று. பிழைகளை ஒப்புக் கொள்கிற பக்குவமும் எனக்குண்டு. இலங்கையின் தூதரக இணையத் தளத்தில் பார்த்த விடயம் இது. http://www.slhclondon.org/pensions.html

    Reply
  • rohan
    rohan

    /இதே அரசு தான் சரத் பொன்சேக பிரபாகரனின் குடும்பம் தேர்தல் நிதி தந்தால் பெற்றுக் கொள்வேன் என்று சொன்னதை ஒரு பிரசார உதவியாகப் பயன்படுத்தியது/
    //அடுத்து சரத் பொன்சேகா பிரபாகரன் குடும்பம் என்று குறிப்பிடவில்லை. வெளிநாட்டுப்புலிகள் தேர்தல் நிதி தந்தாலும் பெற்றுக் கொள்வதாகவே சொன்னார். //

    இது எனது வார்த்தைத் தெரிவில் ஏற்பட்ட தவறு என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

    இதே அரசு தான் சரத் பொன்சேக பிரபாகரனின் ஆதரவு தந்தால் பெற்றுக் கொள்வேன் என்று சொன்னதை ஒரு பிரசார உதவியாகப் பயன்படுத்தியது, என்று தான் நான் சொல்ல விரும்பியிருந்தேன். பொன்சேக எந்த வித ஆதரவு (சப்போட் என்று ஆங்கிலத்தில் நான் வாசித்தேன்) என்பதை விளக்கவில்லை என்பதையும் கவனிப்பதும் பொருத்தம்.

    குறிப்பாக புலி ஆதரவாளர்களின் நிதி உதவியைக் கோரி அவர் பேசிய நேரடி வாசகங்களை நான் பார்க்கவில்லை. ஆனால் அரச ஆங்கிலப் பத்திரிகை என்ன சொல்லியிருக்கிறது என்றும் பார்ப்போம். ஆனால், அவர் பிரபாகரனின் பெற்றோரிடமும் நிதி பெறத் தயார் என்று சொன்னதாகவே இவர்களும் எழுதியுள்ளனர்.

    The worst ever confession by the General was that, he (Fonseka) would even accept funds from slain LTTE leader, Velupillai Prabakaran’s parents and other LTTE supporters to carry out his election campaign.

    Reply