உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

Boat Refugees_03இந்தோ னேசியக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளின் அவலம் முடிவின்றித் தொடர்கின்றது. உலகமே நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கின்ற வேளையில் கடலில தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த அகதிகள் மறக்கப்பட்டு உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த சாமூவேல் ஜேக்கப் (29) என்ற இளைஞர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் உயிரிழந்தார். இவ்வாறான மிக மோசமான படகு விபத்து ஒன்றில் 200 வரையானவர்கள் மரணமடைந்த சம்பவம் கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுதினம் பொக்ஸிங் டே அன்று இத்தாலியில் இடம்பெற்றது. தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் மரணமாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள். இதுவே தமிழ் அகதிகளுக்கு இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது.

தற்போது எரிமலை மையமாகவும் சுனாமியின் மையமாகவுமுள்ள இந்தோனேசியக் கடலில் 250 அகதிகள் சாதாரண படகில் தவிக்க விடப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் உலகமே கொண்டாடுகின்ற நத்தார் புதுவருடத்தையொட்டி இவர்களை மனிதாபிமான முறையில் அணுக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

Boat Refugees_03ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

இந்த அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி இந்தோனேசியாவில் தரையிறக்குவதை ஒரு தீர்வாக இந்தோனெசிய அதிகாரிகள் கொண்டுள்ளனர். ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு ஒறுதி மொழியை இந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது. இதே காலப்பகுதியில் ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 78 தமிழ் அகதிகள் தரையிறங்க மறுத்தனர். அவர்களது தஞ்ச விண்ணப்பங்கள் சில வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்தனர். தற்போது அவர்கள் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மேர்க் இந்தோனேசியத் துறைமுகப் பகுதியில் தத்தளிக்கும் அகதிகள் வரும் ஜனவரி 10 மூன்றாவது மாதத்தை கடலில் கழித்து உள்ளனர். அவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • thurai
  thurai

  ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுப்பதற்கு புலிகளைவிட யாருக்கும் உருமை கிடையாது என உலகமெங்கும் மிரட்டியவர்கள் புலியின் ஆதரவாளர்கள்.

  ஈழத்தமிழரை பிறந்தமண்ணில் சிங்கள இராணுவத்திற்கு பலிகொடுத்தும், நடுக்கடலில் தவிக்கவும் விட்டுவிட்டார்கள். இதோடு நின்றுவிடாமல் இலங்கையில் போய் தேர்தல் பிரச்சாரமும் செய்கின்றார்கள்.

  இதுவரை துரோகிகள் என்று பிறருக்கு மரணதண்டனை கொடுத்த புலிகளின் மானமுள்ள செயலா இது? அல்லது தமிழரின் மானத்தை உலகிற்கு விற்று வாழ்பவர்களா புலிகள்.

  துரை

  Reply
 • raalahaami
  raalahaami

  எதுவும் இருந்த இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமாக இருக்கும் அல்லவா. எதற்கு இந்த வீண் அவதி. இலங்கையில் தற்போது எவ்வித பிரச்சினையும் இல்லையே. இன்று தமிழருக்கு பிரச்சினையே அலெக்ஸ்தான்.

  Reply