க. பொ. த. உயர்தர முதலாம் ஆண்டு மாணவர் களுக்காக நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை 20 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கிறது. முன்னர் அறிவிக்கப்பட்டதன்படியே குறிப்பிட்ட தினத்தில் பரீட்சைகள் நடைபெறுவதுடன் நாடு முழுவதுமுள்ள 843 பரீட்சை நிலையங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கும் உரிய அனுமதி அட்டைகள் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிபர்களிடமிருந்து அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.