நடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.
இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.