நாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.
நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவினமான நிலையில் இருந்தனர், பலவந்தமாக இளைஞர் யுவதிகளை படையணியில் சேர்த்தனர், மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர், தமது சொந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் என்ற விடயங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வன்னியில் இருந்தும் வந்திருந்த போதும் புல்ம்பெயர்ந்த தேசங்களில் இருந்த புலிசார்பு ஊடகங்கள் இந்த உண்மைகளைக் கண்டுகொள்ள மறுத்தனர். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது விம்பங்களைக் கட்டமைத்தனர். அதனாலேயே மே 18 2009 காலையில் மக்கள் நித்திரையால் எழும்பியபோது ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது’ போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலர் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை.
இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் மிகப்பெரும் மனித அவலம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவதற்குப் பதில் தமது அரசியல் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே தகவல்களைச் சமைத்துக் கொண்டனர். இதன் மூலம் தாயகத்தில் இருந்து 6000 மைல்களுக்கும் அப்பால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு மாயையைச் சூழலை புலத்தில் உருவாக்கியது. இன்றும் பலர் அச்சூழலிலேயே வாழ்கின்றனர்.
தகவல்கள், தகவல்களின் நம்பகத்தன்மை, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பன பொதுத் தளங்களில் தகவல்களைப் பரிமாறுபவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு. விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களைக் கட்டமைப்பதும் உண்மைகளைத் திரிபுபடுத்துவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமானவை.
இன்றும் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். அந்த வரிசையில் தமிழரங்கம் பி இரயாகரனும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து:
“வட்டுக்கோட்டை தீர்மானம்”, “நாடு கடந்த தமிழீழம்”, “மே 18 இயக்கம்” .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.”
பி.இரயாகரன் Tuesday, 15 December 2009 11:22
வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், மே 18 இயக்கம் என்ற மூன்றையும் இரயாகரன் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.
மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை டிசம்பர் 9ல் மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன் என்ற தலைப்பில் தேசம்நெற்ல் வெளியாகி இருந்தது. ரொறன்ரோவில் டிசம்பர் 13ல் இடம்பெற்ற வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ‘விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை வியூகம் ஆசிரியர் தலைப்புக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மட்டுமல்ல ‘விடுதலைப் போராட்டமும் புலிகளும்’ என்ற பிரதான கட்டுரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
— On Mon, 14/12/09, Tamil Circle <tamil_circle@yahoo.no> wrote:
> From: Tamil Circle <tamil_circle@yahoo.no>
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
> கடுமையாக
> விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் – பார்வைக்கு
>
> தமிழரங்கம்
> இணையத்தளம் கருத்து
> மக்களைப் பற்றிக்
> கொண்டால் அது மாபெரும்
> சக்தியாக
> உருவெடுக்கும்
>
> www.tamilcircle.net
>
> வர்க்கம், அரசியல்,
> சாதியம், பெண்ணியம்,
> தேசியம், நிறம், மதம்,
> பண்பாடு, கலாச்சாரம்,
> இசை, சுற்றுச்சூழல் …
> என அனைத்து
> விடையங்களையும்
> இத்தளத்தில் நீங்கள்
>
> காணமுடியும்.
>
> மின்னஞ்சல் tamilcircle@tamilcircle.net
> tamil_circle@yahoo.no
அதாவது மே 18 இயக்கம் புலி சார்பானது என இரயாகரன் எழுதுவதற்கு முதல்நாளே வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனிடம் இருந்துள்ளது. tamil_circle@yahoo.no என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அப்படி இருக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், அமைப்புகளுடன் மே 18 இயக்கத்தையும் இணைத்து மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்று இரயாகரன் முத்திரை குத்துவது எதற்கு? இதற்கு இரு காரணங்கள் இருக்க முடியும்.
1. தவறான தகவல் : வழமை போல் இரயாகரன் எவ்வித உறுதிப்படுத்தலும் நம்பகத்தன்மையும் இல்லாத தகவலைக் கொண்டு மே 18 இயக்கம் – வியூகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2. தகவலை மறைப்பது : இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.
இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.
இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இரயாகரன் அறுதியிட்டு சரியென வெளியிட்ட செய்திகள் எப்படி முற்றிலும் தவறான செய்திகளாக அமைந்தது என்பது உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது. அதனால் தவறான தகவல்கள் அடிப்படையில் இராயாகரன் கட்டுரையை எழுதி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானது என இரயாகரன் எழுதியது தவறான செய்திகளின் அடிப்படையில் அல்ல. ஏனெனில் இரயாகரன் மே 18 இயக்கம் அதன் பின்னணி பற்றிய தகவல்களை அறிந்த ஒருவர். யூலை இறுதிப் பகுதியில் அரசியல் நட்பு சக்திகளுடன் உரையாடலை ஆரம்பிக்கு முகமாக ஐரோப்பா வந்த ரகுமான் யான் ஓகஸ்ட் 1ல் பாரிஸில் இரயாகரனைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தமிழரங்கத்தில் கட்டுரை எழுதிய இரயாகரன் பின்வரும் அழைப்பை நட்புசக்திகளுக்கு விடுத்தார். ”மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!? இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை.” இரயாகரன் தீப்பொறி அல்லது ரகுமான் யான் புலிகள் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றால் ஏன் இந்த விமர்சனத்தை அன்று வைக்கவில்லை.
மேலும் அன்று இரயாகரன் எழுதியது ”எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.’‘ இந்த வரிகளின் மூலம் இரயாகரன் தனது நோக்கத்தை அம்மணமாகத் தெரிவிக்கிறார். “Over time it’s going to be important for nations to know they will be held accountable for inactivity,You’re either with us or against us in the fight against terror.” நவம்பர் 6 2009ல் இதனைத் தெரிவித்தது வேறு யாருமல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ். இதே கருத்துப்படவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் நடந்து கொண்டார். தனது வழியே சரியானது என்றும் அந்தவழியில் பயணிக்காதவர்கள் தமிழ் தேசியத்தின் துரோகிகள் என்றும் சுட்டுக்கொன்றார். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது வழியில் பயணிக்காதவர்களை நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்கள் என்று வைகின்றார்.
தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000
”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”
2007 டிசம்பர் பிற்பகுதியிலும் 2008 ஜனவரியிலும் என்எல்எப்ரி யின் ஹற்றன் நஸனல் வங்கிக்கொள்ளை தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் பலரும் இரயாகரனிடம் கேள்வி எழுப்பினர். தன்னிடம் அவ்வாறான ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கே பொங்கியெழுந்து பல கட்டுரைகளை எழுதிய இரயாகரன் குறிப்பிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பாக எந்தப் பதிலையும் கூறவில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ”அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்று இரயாகரன் மிரட்டுகின்றார். இரயாகரனின் இந்த அரசியல் நேர்மையை என்னவென்பது.
இரயாகரனும் இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் மார்க்ஸிஸத்தில் புலிகள் அல்ல. இவர்கள் புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள்.
மே 18 இயக்கம் மீதும் ரகுமான் யான் மீதும் புலி முத்திரை குத்துவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது இரயாகரனுடைய முன்னைய கட்டுரை மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை ”எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.” என்று புல்லரித்துக் கொண்ட இரயாகரன் ரகுமான் யான் மே 18 இயக்கத்தை ஆரம்பிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் பல்டி அடித்துக் கொண்டார். ”கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.” என்று ஒரு குற்றச்சாட்டை போட்டு வைக்கின்றார். மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் என்று எழுதும் இரயாகரன் ”எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது.” என்று மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். ‘தமிழ் சமூகத்தில் ஆறறிவுள்ள ஒரே அரசியல் விலங்கு ‘அண்ணன் இரயா’ மட்டும் தான் என்பதனை இந்த தமிழ் சமூகம் அறிந்திருந்தால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒரு பட்டாசு வெடியுடனேயே முடித்திருக்கலாம்.’ என்ற கணக்கில் தான் இரயாகரன் தன்னைப் பற்றிய விம்பத்தைக் கட்டமைக்கின்றார்.
இராயாகரன் தன்னைப்பற்றிக் கொடுக்கும் மற்றுமொரு பில்ட்அப் ”இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன் சமூக விடயங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;….. எனது சொந்த உழைப்பில் தான் எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன். கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன்.”
இவற்றிலிருந்து மே 18 இயக்கம் புலிகள் சார்பான அமைப்பு என்ற இரயாகரனின் குறிப்பு இரயாகரன் மிகத் திட்டமிட்டு தனது அரசியல் விம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சேறடிப்பே என்ற முடிவுக்கே வர முடிகின்றது. சேறடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத இரயாகரன் தங்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்கள் இடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டுள்ளார். கட்டுரையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்புகைப்படம் அதில் பிரசுரிக்கப்பட்டது யாருக்கு ரகுமான் யானை காட்டிக்கொடுக்கும் முயற்சி? இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுத்தலே. ஒரு போராளி அவனுடைய சமூகத்தின் உடமை. அவனைக் காட்டிக்கொடுக்கின்ற உரிமையை இரயாகரன் எங்கிருந்து பெற்றார். இந்தக் காட்டிக் கொடுப்பு இரயாகரன் மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக்குகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த லண்டன் வந்திருந்த போது அவருடன் ஒரு நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தேன். அப்போது தனது தாடி பற்றி நகைச்சுவையாகத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த தனக்கு பிடல் கஸ்ரோ மீது மிகுந்த அபிமானம் என்றும் அவரளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர் போன்று தாடியை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இப்படி வாழ்க்கையில் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும். அப்படித்தான் இரயாகரனுக்கும் புரட்சி செய்ய முடியாவிட்டாலும் புரட்சிக்காரன் போல் இராணுவச் சீருடையும் தொப்பியும் அணிந்து செல்ல விருப்பம் மட்டுமல்ல டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ஸ்ரண்ட் காட்டுவதற்குப் படம் தேவைப்பட்டால் உங்களுடைய இந்தப் படத்தையே போட்டிருக்கலாமே. எதற்காக சம்பந்தப்படாத ரகுமான் யானின் படத்தை அவ்விடத்தில் போட வேண்டும். கீ போட் புரட்சியாளர்களுக்கு தலைமறைவு வாழ்வின் யதார்த்தத்தை அவ்வளவு இலகுவில் புரிய வைத்திட முடியாது.
எது எப்படியானாலும் இரயாகரனும் அவர் ஊறிய அதே குட்டையில் ஊறிய கீ போட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் தங்கள் வெற்றுக் கோசங்களால் மக்களை மட்டுமல்ல அவர்களுடைய மக்களையும் வென்றெடுக்க முடியாது. இவர்கள் தங்களை மாஓயிஸ்ட்டுக்கள் என்பதால் மாஓவின் மொழியில் காகிதப் புரட்சியாளர்கள் என்பதே வெகுபொருத்தமானது. இவர்கள் ”நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. ” என்று கட்டுரை எழுதுவதற்கே லாயக்கு. இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மீது விமர்சனம் வைப்பது ஒரு வகையில் பாலவர்ணம் சிவக்குமார் மீது கல் எறிந்ததற்குச் சமனாகும். இவர்களை அனுதாபத்துடன் அணுகுவதே முறை. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களிடம் வெள்ளைத் தாளையும் பேனையையும் கொடுத்து கீறச் சொல்வார்கள். வளர்ந்தவர்களுக்கு கீ போட்டைக் கொடுத்து எழுதச் சொல்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை மொழி உளவியல் நிபுணரிடம் கொடுத்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். இதனை ‘கீபோர்ட்-மார்க்ஸ்-சின்ட்ரம்’ என வகைப்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
குறிப்பு: நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது. ஒரு சிறு வேண்டுகோள் வழமையாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தொகுப்பாக வெளியிடுவது உங்கள் வழக்கம். அதனால் ஏற்கனவே நீங்கள் தேசம்நெற் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இனிமேல் எழுதப் போகின்ற கட்டுரைகளயும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முடியுமா என்று பாருங்கள். இப்பொழுது எனக்கு வாசிக்க நேரமில்லை. புத்தகமாக இருந்தால் வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு உந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். ஒத்துழைப்பிற்கு நன்றி.
sivam
///வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.///
1972 இன் வட்டுக்கோட்டை தீர்மானம் புலிகளினால் மீண்டும் புலன்பெயர் நாடுகளில் மட்டும் ஒரு அரசியல் கேள்வியாக்கப்பட்டிருப்பது பிரிவினை வாதத்துடன் தமிழ் மக்களை தொடர்சியாக கட்டிப்போடும் நோக்கத்தில் ஆகும். விசேடமாக இளம் தலைமுறையினரை பிரிவினை வாதத்திற்கு அறிமுகப்படுதுவதட்கு ஆகும்.
நாடு கடந்த அரசு, புலிகளின் அரசியல் இலங்கையில் அல்லது இந்தியாவில் தொடர்வதற்கான சாத்தியங்கள் இல்லாத போது, விசேடமாக மேலை நாட்டு அரசாங்கங்களின் தேவையினை நிறைவு செய்யும் ஒரு உபகரணமாக செயற்படுவதாகும்.
///மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது///
நான் வாசித்தளவில் தீப்பொறி அமைப்பு PLOT இயக்கத்தின் ஜனநாயக விரோத போக்குகள், இந்திய சார்பு அரசியல் என்பதை நிராகரித்தது. வட்டுக்கோட்டை தீர்மானத்தில் முன் வைக்கப்பட்ட தமிழீழ கோரிக்கை தீப்பொறி அமைப்பினால் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பாக எழுத்தில் எனக்கு தெரிந்தளவில் இல்லை.நான் வியூகம் இதழை வாசிக்கவில்லை.
1972 இன் வட்டுக்கோட்டை தீர்மானம், பிரிவினை வாத ஆவணம் தொடர்பாக மே 18 குழுவினரின் கொள்கை என்ன?
1972 இன் வட்டுகோட்டை தீர்மானம் தொடர்பான கொள்கை என்ன என்பதை மே 18 குழுவினர் மட்டுமல்ல இக் குழுவினரை எதிட்கும் ஸ்ரீ ரங்கன், ரயாகரன் இன்னும் பலரும் சொல்லித்தான் தீரவேண்டும். இந்த தீர்மானத்தின் அடித்தளத்தில் நடத்தப்படும் அரசியல் புலிகளின் அரசியலில் இருந்து வார்த்தைகளில் மட்டும் தான் வேறுபடுகின்றது.
PS: வியூகம் இதழை தேசம் இணையதளத்தில் வாசிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரும்படி வேண்டுகின்றேன்
saami
ஜான் மாஸ்டரிட்க்கும் வங்கி திருட்டுக்கும் என்ன சம்பந்தம்?. யாழ் .ஹட்டன் நேசனல் வங்கி திருட்டில், புளட் பங்குகொள்ளவில்லையே. அமைதியாக இருந்தால், ‘புதியதோர் உலகம்’ எழுதிய நோபேர்ட் என்ற தோழர் கோவிந்தனும் இந்த வங்கி விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுதி விடுவார்கள். சேறு பூச முன் உங்கள் கைகளை சுத்தமாக வைத்து இருங்கள். ஜான் மாஸ்டர் கனடாவிற்கு செல்ல முன், எங்கு இருந்தார் என்பதை ரயாகரன் அறிவாரா?. அவதூறு அரசியல் பொதுவாக நிறுவப்படும் ‘உண்மைகள்’ ஆகாது.
tamilcircle
/தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000
”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”/
புறமுதுகு பேசுவது தழிழரங்கத்தின் செயலல்ல. தமிழரங்கம் என்றும் எக்காலத்திலும் விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றது. எனவே தமிழரங்கத்துக்கு இப்படியான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைக்கு அடிப்படையே கிடையாது. இது தொடர்பில் நீங்கள் தொழில் நுட்பச் சான்றுகளை முன்வையுங்கள்.
மின்னஞ்சலின் ஹெடர் முழுவதையும் தந்தால் இது பற்றிய பரிசீலனைக்காக நாங்கள் மின்னஞ்சல் வழங்குநருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் வேண்டத்தகாத இந்த வீண்பழி சுமத்தும் தங்களுக்கு ஆதாரங்களுடன் அதனை மறுத்துரைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றோம்.
மற்றும்
/வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது /
என்ற தகவல் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்ற தகவலும் எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்குகின்றது.
shathis
ஹற்றன் நேசனல் வங்கி கொள்ளைப்பணம் தன்னிடம் இல்லை என்று சத்தியம் பண்ணி மறுத்த ரயாகரன் அசோக் போட்ட ஆதாரமான பூர்வமான கொடுக்குப்பிடியில் அகப்பட்டு தப்புவதற்கு மண்டையைபோட்டு குழப்பி தற்போது ஒரு ஒரு திடீர் பதிலை தன்ர தமிழ் அரங்கத்தில் மேடையேற்றியுள்ளார். அதாகப்பட்டது லட்சக்கணக்கான பணம் எல்லாத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த விஐpதரன் போராட்டத்திற்கு செலவளித்து விட்டாராம். அடேயப்பா எப்படி கணக்கு முடித்தார் பாருங்கள். புலிகள் ரயாகரனிடம் கணக்கு காட்ட ரியூசன் எடுக்கவேணும்.
rathan markandan
It appears there is a new syndrome which we call mahajana college syndrome from now on.
The old students of Mahajana – Aathavan( Peradenia Philosophy),Poet Cheran, A.Ravi, and Rayakaran all have deliberately fabricated truth for their self serving purposes. We should look into their personal and public life so that we can find that the absence of integrity and an element of sociopathic tendencies are very much prevail in them. All above were once the victims of LTTE and still they served the LTTE so well. Will the new generation of Mahajana boys take this into account while preparing for their centenary celebrations?
Kusumbo
எனக்கு ஒருவிசயம் பட்டும் இன்னும் சரியாகப் புரியவில்லை. எதை எழுத்தாலும் மாக்சிசத்துக்குள் போட்டு ஏன் ஐயா எல்லாத்தையும் புதைக்கிறீர்கள். மாக்சை விட யாருமே உலகத்தில் திறமையுடன் பிறக்கவில்லையா? இரயாகரன்! மாக்ஸ் சொன்னார் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்கிறீர்களே. நீங்கள் எப்ப எதைச் சொல்லப்போகிறீர்கள்? சமயவாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். அவர்கள் சொல்கிறார்கள் திருவள்ளுவர் சொன்னார் சிவன் சொன்னார் கீதை சொல்லியது குறான் பைபிள சொல்லுகிறது என்கிறார்கள். நீங்களோ மாக்ஸ் சொன்னார் லெனின் சொன்னார் மாவோ என்று நீங்கள் சொல்கிறீர்கள். பொருளாதாரம் மையப்படுத்துப்பட்ட இந்தத் தகவல் யுகத்தில் மாக்ஸ் லெனினுக்குப் பாடைகட்டிய பலகாலம் ஆகிவிட்டது என்று இன்னும் தெரியாமல் தகவல்தளம் நடத்துகிறீர்கள். இடதுசாரிகள் என்றால் என்ன கொம்பா?
பல்லி
//அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். //
ஆகா; அப்படியாயின் நீங்கள் மாற்று தளம் இல்லையா?
உங்க தளம் புலியின் நிழலா? என்ன விளாட்டு ரயா??
//. இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. :://
தேவையற்ற எதையும் மக்கள் வேண்டுவதில்லை என்னும் அடிப்படை அதுவும் இல்லையா??
//அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்//
இதோடா எப்போ?? நீங்க மாட்டியவுடனா?? மகிந்தா; சேகரா தோத்தார்கள் போங்க;
//. மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் //
இவர் எப்போது மக்களோடு ஓடி விளையாடினார் என தெரிந்து சொல்லவும்;
//மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். //
ஏழாவது அறிவு உள்ளதால் அப்படி சொல்லியிருப்பார், அவரது ஆறாவது அறிவு புலிகளிடம் அடைவில் உள்ளது என நினைக்கிறேன்;
//இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.// இது என்ன ஏழாவது அதிசயமா? ஆசைக்கு எழுதுகிறார் அதைபோய் கெடுக்கலாமா?
// ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை //
ரகுமான் திருகோனமலையில் இருந்தா வந்தார்; போகிறவழியில் பாத்துவிட்டு போயிருப்பார், அல்லது எடுத்துட்டு போன(அவர் கூற்றின்படி) கொடுத்துட்டு போக வந்திருப்பார்,
//டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம்//
சொல்லவே இல்லை; இவரா அவர்?
இது பல்லி;;;;
//மாஓயிஸ்ட்டுக்கள் //
ஜயோ ஜயோ நாம் பசிக்குது என்பதை இவர்கள் வயிற்றுக்குள் வலிக்குது பசியாக இருக்கலாம் என ஆயுள்வேத முறையில் பேசுவார்கள்: புலி இருக்கும்வரை யாரும் அரசியல் செய்யமுடியாது என்பதுக்கு 36 புத்தகம் கடன் வாங்கியாவது வெளியிடுவார்கள்; அதேபோல் இவர்களது பேச்சு; மச்சான் அந்த லெனின் நித்திரை தூக்கத்தில் எழுதிய விடிவு என்னும் புத்தகத்தில் 373ம் பக்கத்தில் கடசி இரு வரியை கவனித்தியா என பெருசாய் ஏப்பம் விடுவார்கள், பக்கத்து ஊருக்கு யாராவது வழிகேட்டால் அருகில் நிற்பவரிடம் கேக்க சொல்லும் அளவுக்கு இவர்களது விண்வெளி பயணம் நீளும்; இப்படி பல விடியல்கள் இருப்பதால் ….வெக்கமாய் இருக்கு;
//நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது.//
அதையே யாராவது ஒரு தெனிந்திய சின்னதிரை இயக்குனரை அனுகி அதை ஒரு தொடராய் இயக்கலாம், கற்றன் வங்கி பணத்தை ரகுமான் திருப்பி தந்தால்;
Kusumbo
ஐயோ! ஐயோ! பிரபாகரனும் புலிகளும் தமிழீழம் வேண்டாம் என்று தானே நோவே நாட்டின் மத்தியஸ்தத்தில் பேச்சு வார்த்தைக்குப் போனார்கள். இறுதிநாட்களில் பிரபாகரனும் புலிகளும் தமிழீழம் வேண்டாம் திம்புவே போதும் என்றார்கள் இறுதியில் திம்புவும் வேண்டாம் தமிழமக்களுக்குத் தருவதைத் தாருங்கள் என்றார்கள். தங்களை விட்டாலே போதும் என்று நின்றார்கள். இதெல்லாம் நடந்து முடிந்த பின்பும் தமிழீழம் என்று திரிபவர்கள் மண்டைக்குள் என்ன மண்ணாங்கட்டியா?
//1972 இன் வட்டுக்கோட்டை தீர்மானம் புலிகளினால் மீண்டும் புலன்பெயர் நாடுகளில் // என்னையா வட்டுக்கோட்டை 1972 என்கிறீர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் 1976ல் அல்லவா எடுக்கப்பட்டது. 1972ல் துரையப்பா சுடப்பட்டார். சிவம் ஒரே குழப்புக் குளப்புகிறீர்கள்.//புலிகள் ரயாகரனிடம் கணக்கு காட்ட ரியூசன் எடுக்கவேணும்.// போதியளவு கொடுத்துவிட்டோம் எங்களிடம் பணமில்லை ரியூசன் எடுக்க
sivam
Kusumbo on December 16, 2009 12:58 pm
நீங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 என்று சொல்வது சரி. குழப்பும் நோக்கத்தில் இல்லை. தவறாக எழுதியதற்கு மன்னிக்கவும். இது வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நான் சொல்லும் கருத்துக்களில் ஒரு வித்தியாசத்தையும் ஏற்ப்படுத்தாது
KUMAR
//புறமுதுகு பேசுவது தழிழரங்கத்தின் செயலல்ல. தமிழரங்கம் என்றும் எக்காலத்திலும் விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றது. எனவே தமிழரங்கத்துக்கு இப்படியான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைக்கு அடிப்படையே கிடையாது. இது தொடர்பில் நீங்கள் தொழில் நுட்பச் சான்றுகளை முன்வையுங்கள்//
தோழர் ரயா தமிழரங்கத்தில் எழுதுவதையெல்லாம் விமர்சனம் என்கிறார். இதைவிட உலகத்தில் வேறு நகைச்சுவை உண்டோ சொல்வீர்!. தோழர் ரயா புறமுதுகு பேசுவதையில்லையாம்! தமிழ் அரங்கத்தில் கொட்டிக் கிடக்கும் எல்லாம் என்ன?. புறணியும் புறமுதுகும் சூதும்தானே அவைகள் பேசுகின்றன. வெருட்டல் ஈமெயில் அம்பலத்துக்கு வராது என்ற தோழர் ரயாவின் நம்பிக்கையில் மண்விழுந்துவிட்டது. தோழர் ரயா மொத்தத்தில் ஒரு பிரபாகரன். சண்டித்தனம் அல்லது சரணாகதி. தன்பொட்டுக்கேடு அம்பலப்பட்டவுடன் வேண்டத்தகாத இந்த வீண்பழியாம். எப்படி கதையளக்கிறார் தோழர் ரயா. புலிகளின் பாணி தோழர் ரயாகரனின் பாணியாகிவிட்டது புகலிடத்தில்.
HG
“டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ”
இது எப்பநடந்தது ?? இரயா குழுவில் உள்ளவர்கள் யார் ?
Anonymous
ஜெயபாலன்! எனககொரு உண்மை தெரிந்தாக வேணும்!
> From: Tamil Circle
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
அனுப்புனரும் பெறுனரும் ஒரே முகவரியாக இருப்பதனால்,தனக்குத் தானே அனுப்பிய மின்னஞ்சல் உங்களுக்கு எவ்வாறு வந்தது?
BC
//Shathis-புலிகள் ரயாகரனிடம் கணக்கு காட்ட ரியூசன் எடுக்கவேணும்.//
இந்த உதாரணம் தவறு. புலிகள் தமிழர்களின் அளவு கணக்கற்ற பணத்தை சூறையாடி ஏப்பமிட்டவர்கள். ஹற்றன் நேசனல் வங்கி கொள்ளை பணத்துடன் புலிகள் மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை ஒப்பிட முடியாது.
// Kusumbo- சமயவாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்….. //
நல்ல ஒரு கேள்வி. எனக்கும் இந்த விடயம் புரியவில்லை.
rajan.R
தேசம் நெற் பழையபோக்கை விட்டு பரவாயில்லாமல்தானே ஓடிக்கொண்டிருந்தது? பிறகேன். கொஞ்சம் மதிப்புக்குரியராக வந்த பல்லியும் இப்படி ஆகிப்போவதில் கவலைதான்.
தமிழரங்கத்தின் கீழ்வரும்கூற்றுக்கு பொறுப்புள்ளவர்கள் பதில்சொல்லக் கடமைப்பட்டவர்கள். “புறமுதுகு பேசுவது தழிழரங்கத்தின் செயலல்ல. தமிழரங்கம் என்றும் எக்காலத்திலும் விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றது. எனவே தமிழரங்கத்துக்கு இப்படியான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைக்கு அடிப்படையே கிடையாது. இது தொடர்பில் நீங்கள் தொழில் நுட்பச் சான்றுகளை முன்வையுங்கள்.
மின்னஞ்சலின் ஹெடர் முழுவதையும் தந்தால் இது பற்றிய பரிசீலனைக்காக நாங்கள் மின்னஞ்சல் வழங்குநருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் வேண்டத்தகாத இந்த வீண்பழி சுமத்தும் தங்களுக்கு ஆதாரங்களுடன் அதனை மறுத்துரைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றோம்.”
தமழரங்கத்தின் வரட்டுத்தனபோக்கில் எவரும் உடன்படமுடியாது. அதற்காக தமிழரங்கத்தின் கேள்விகள் அனைத்துயுமே ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது எங்களின் பலவீனமும் எங்கள் நண்பர்களைக் காப்பாற்றும் வீண்முயற்சியும்தான்.
சாந்தன்
இரயாகரனின் வாதங்கள் வரட்டுத்தனமானவை என்பதே எனது கருத்துமாகும். இவ்வரட்டு வாதங்களை புலிஎதிர்ப்பாளர் மெளனமாக ‘ஆனந்தித்து, கைதட்டி’ வரவேற்று இருந்தகாலம் ஒன்றுண்டு. ஆனால் இன்று அவை அவர்கள் கழுத்துக்கு கத்தியாக வரும்போது கட்டுரை வரைகிறார்கள்! காலம் செய்த கோலம்!
ஆனாலும் அவர் மற்றைய மாற்று கருத்துகாரர் மீதும், புளோட்காரர் மீதும் வைக்கும் வினாக்கள் பதிலளிக்கப்பட வேண்டியவை என்பது எனது கருத்து. இதை நான் சார்ந்திருந்த புளொட் இயக்கத்திடம் பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஆனால் புலிகள் நேற்று பங்கருக்குள் என்ன செய்தனர், நாளை என்ன செய்வார்கள் என பேசுவதில் இவர்கள் கில்லாடிகள். மேலும் அவர் போலி என விளக்கும் மின்னஞ்சல் பற்றியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். மின்னஞ்சலை தேசத்துக்கு அனுப்பியவர் போலியானவர் என்று மின்னஞ்சல் முகவரிக்காரர் சொல்கிறார். எனவே தேசம் பொய்யான மின்னஞ்சல் காரரை அடையாளம் காட்ட வேண்டும்.
சாந்தன்
Anonymous
இவ்வகையான மின்னஞ்சல்கள் Spam வகையைச் சேர்ந்தன அல்லது ஒரு குழுமம் ஒன்றுக்குள் அனுப்பப்படனவாக இருக்கும். இது ஒன்றே தேசத்தை இந்த மினனஞ்சல் ஐயத்துக்கு உட்படுத்தி இருக்கவேண்டும்.
உ+ம் :from xyx xyx xyx
reply-to xyx xyx xyx@googlegroups.com
to xyx xyx xyx@googlegroups.com
இங்கே reply-to மற்றும் to இரண்டும் ஒன்றாக இருப்பதனை. இதனை நானே எனக்கு அனுப்பியதாக எடுக்கமுடியாது.
Spam வகை மின்னஞ்சல்கள் நீங்கள் பெற்றதேயில்லையா? ஆச்சரியம் தான். உங்கள் Spam கோப்புகளில் இருக்கும் தேடிப்பாருங்கள்.
பல்லி
//தேசம் நெற் பழையபோக்கை விட்டு பரவாயில்லாமல்தானே ஓடிக்கொண்டிருந்தது? பிறகேன். கொஞ்சம் மதிப்புக்குரியராக வந்த பல்லியும் இப்படி ஆகிப்போவதில் கவலைதான்.//
ராஜன் பல்லியின் கருத்து மீது வைத்த நம்பிகைக்கு நன்றி, எனது கருத்து சில வேளைகளில் நகைசுவயாக போகும்; அது நான் என்னையே சமாதானபடுத்தவே எழுதுவேன், இருப்பினும்; பல்லி தீப்பொறி மீது கடும் விமர்சனம் வைப்பேன், எனக்கு இந்த கடிதம் மைல் பற்றி கவலை இல்லை; சொல்லவேண்டிய விடயத்தை சுற்றி வளைத்து தாம் ஏதோ கண்டுபிடிப்பாளர் போல் எழுதுபவர்கள் மீது சிறிது வருத்தம்; அதனால் அவர்கள் எழுத்தை எனது பாணியில் விமர்சிப்பேன், அதையும் விட தீப்பொறி இருந்து ரயாவரை எமது மக்களுக்கு சூ காட்டியவர்கள்தான், ஆக இவர்கள் வண்டவாளங்களை எழுதுவதில் தவறேது; பல இடத்தில் தேசத்தையும் விமர்சித்துள்ளேன், மாற்றுகருத்தாளர்; புலி அனைவரையும் விமர்சிப்பதால் எனது எழுத்துக்கள் சிலருக்கு சினக்ககூடும்; ஆனாலும் நான் ஒரு சராசரி மனிதனாகவே பல்லியாய் எழுதுகிறேன், தவறுகளை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன், பல்லி எழுதாளன் அல்ல;
ஆனந்தன்
இப்படித்தான்… இலங்கையில் சக இடதுசாரித்தோழர்களை தோழர் என்று விளிப்பது வழக்கம். ஒரு காலம் வந்தது சிங்களத்தோழர்களுடனும் சரி, தமிழ் தோழர்களுடனும் சரி “தோழர்” என்று பாவிப்பது பாதுகாப்பு பிரச்சினையாக உணரப்பட்டவேளை அப்பதத்தை தணிக்கைக்கு உள்ளாக்க நேரிட்டது. “தோழர்” என்கிற அழைப்பில் கிடைக்கும் மனவலிமையும், உணர்வும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும்.
இப்படித்தான் ஒரு முறை முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை சந்திப்பதற்காக அவரது அலுகவலகத்திற்கு செல்ல நேரிட்டது. நிறையவே மாறியிருந்தார். உதவியாளர்கள்…, தொடர்ச்சியான தொலைபேசி அழைப்பு, எனது நீண்ட நேர காத்திருப்பைக்கூட அவர் இம்முறை சட்டை செய்யவில்லை. அவரது உதவியாளர் என்னை உள்ளே போகச்சொன்னார். வழமைபோல நான் “சுகமாக இருக்கிறீர்களா தோழர்”! என்று கேட்டது தான் தாமதம்… என்னை கண்டபடி திட்டித்தீர்க்கத் தொடங்கிவிட்டார். யாருக்கு யார் தோழர், ஐசே சேர் என்று கூப்பிடு என்று தொடர்ந்தார்…. இதனை எதிர்பார்க்காத நான் பதறிப்போய்விட்டேன். அப்படியே வெளியேறிவிட்டேன்.
இந்த மீடியா உலகத்தில் பல பதங்கள் அநியாயத்துக்கு கையாண்டு அதன் உண்மை அர்த்தத்தையே இலக்கச் செய்த பணியும் நிறைய அரங்கேறியிருக்கிறது. இப்போதெல்லாம் அந்தப் பதங்களை தேவையான சரியான இடங்களில் பாவிக்கக் கூட தயக்கமாக இருக்கிறது. நமது கீபோர்ட் புரட்சியாளர் றயாவின் எழுத்துக்களுக்கூடாக அப்படி கணிசமான பதங்கள் திரிப்புக்கும், கேலிக்குமுரியதாகியுள்ளன.
இப்போதெல்லாம், பாசிசம், எதிர்புரட்சி, வலதுசாரி, சுயவிமர்சனம்… குறுந்தேசியம்… போன்ற இன்னோரன்ன சொற்கள் பாவிப்பதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்த சொற்கள் பெறுமதி இல்லாத இடங்களில் பாவிக்கப்படும் போதெல்லாம் நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்… இந்த கீபோர்ட் புரட்சியாளர் றயா இவற்றை கண்டபடி கட் என்ட் பேஸ்ட் மூலம் தவறுதலான இடத்தில் பாவித்திருப்பாரோ என்று…
அல்லது குறைந்தபட்சம் அரைநூற்றாண்டு மாக்சிய விஞ்ஞானம் கண்டிருக்கிற கோட்பாட்டு வளர்ச்சியை கண்டுகொள்ளாமல், அதற்காக உழைக்காமல், அரசியல் குருட்டுத்தனத்தினாலும், தேடலற்ற போக்கினாலும் விளைந்ததோ..?
தன்னை மாக்சிய ஏகபோகி என்பதை வலிந்து நிறுவதற்காக ஏனையோரை அதற்கு வெளியில் தள்ளி வைப்பதற்காக பாவிக்க முனையும் சொற்கனைகளோ… எதுவாயினும்…. இது போதும்… இந்த மாக்சிய குத்தகை போதும்… ஏனைய தோழமை சக்திகளுடன் அநியாயத்துக்கு பகைத்துக்கொள்ளாமல் நேச சக்திகளை கொண்டுபோய் எதிரியுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, தனிநபருக்குள் அனைத்து கவனக்குவிப்பையும் செய்வதை நிறுத்தி, ஆதிக்க சொல்லாடல்களைக் களைந்து, நோர்மையான, பிரக்ஞையான அணுகுமுறையை செய்வீர்களானால் உருப்படியாக இலக்கை நோக்கி சேர்ந்து பயணிக்கலாம்…
சக சக்திகளை ஒன்றிணையவிடாமல், வெறும் தனிநபர் வம்புக்குள் அவர்களை இழுத்து, காலத்தை வீணடித்து, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதற்கு ஏகாதிபத்தியம் செய்த சதியோ… அந்த சதிக்கு றயா கைக்கூலியோ…. என்று என்னிடம் வினவிய ஒரு சிலரை இங்கு நினைவுக்கு கொணர்கிறேன்…
Kusumpu
சிவம்- /நீங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 என்று சொல்வது சரி. குழப்பும் நோக்கத்தில் இல்லை. தவறாக எழுதியதற்கு மன்னிக்கவும். இது வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நான் சொல்லும் கருத்துக்களில் ஒரு வித்தியாசத்தையும் ஏற்ப்படுத்தாது/
சிவம் ஆண்டுகள் தவறக்கூடாது வரலாறு பிழையாகக் கணக்கெடுக்கப்படும் என்பதற்காகவே சுட்டிக்காட்டினேன். உங்கள் கருத்துடன் எந்தவித முரண்பாடும் எனக்குக் கிடையாது.
Jeyabalan T
இரயாகரன்
1. மே 18 இயக்கத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழம் போன்று புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாக நீங்கள் குறிப்பிட்டது ஏன் என்பதே இக்கட்டுரையின் மையப் புள்ளி.
2. புலிகள் பற்றிய மிகக் கடுமையான விமர்சனத்தைக் கொண்டுள்ள வியூகம் சஞ்சிகையை பார்வையிட்ட பின்னரும் நீங்கள் எதற்காக அதனை புலிகள் சார்பான அமைப்பு என்று வாதிக்கின்றீர்கள்.
3. உங்களிடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டது எதற்கு.
இந்தக் கேள்விகளையே இக்கட்டுரை எழுப்பி உள்ளது. ஆனால் அரசியல் அறம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் ஒரு மூன்றாம்தர ‘பூர்ஸ்வா’ சட்டத்தரணி போல் சட்டத்தின் ஓட்டைகளைத் தேடுகின்றீர்கள். உங்கள் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதில் ”தகவல் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்ற தகவலும் எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்குகின்றது.” என்று நொண்டி வியாக்கியானம் சொல்கிறீர்கள்.
எங்கு உங்கள் தர்மம் நியாயம் எல்லாம் போய்விட்டது.
//தமிழரங்கம் என்றும் எக்காலத்திலும் விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றது. எனவே தமிழரங்கத்துக்கு இப்படியான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைக்கு அடிப்படையே கிடையாது. இது தொடர்பில் நீங்கள் தொழில் நுட்பச் சான்றுகளை முன்வையுங்கள்.// இரயாகரன்
நீங்கள் குறிப்பிட்டபடி அந்த மின் அஞ்சலின் பின்னணியை நிச்சயமாக ஆராய்ந்து அந்தத் தகவல்களையும் பொதுத்தளத்திலேயே பதிவிடுவோம். அதனைக் கண்டறிவதற்கு எம்மிடமுள்ள தகவல்களையும் உங்களுக்கு கிடைக்கச் செய்வோம். யாராவது இதனை உங்கள் மீது வீண் பழிபோடுவதற்காக திட்டமிட்டு மேற்கொண்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்தவும் தயங்கமாட்டேன். நிற்க.
ஆனால் தயவு செய்து கட்டுரையின் மையப்புள்ளி தொடர்பான எனது கேள்விகளுக்கு உங்களிடம் அறம்சார்ந்த பதில்களை எதிர்பார்க்கின்றேன். அதிலுள்ள ஓட்டைகளுக்குள் ஒழிந்துகொள்ளாமல் பதில்களை முன் வையுங்கள்.
த ஜெயபாலன்.
rajan.R
‘புலிகள் பற்றிய மிகக் கடுமையான விமர்சனத்தைக் கொண்டுள்ள வியூகம் சஞ்சிகையை ‘
ஒரு உளவு அமைப்பு அப்படித்தான் இருக்கும் (மே 18 குறூப் உளவு குறூப்பாக இருந்தால்)
‘மே 18 இயக்கத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழம் போன்று புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாக நீங்கள் குறிப்பிட்டது ‘
(மே 18 குறூப் உளவு குறூப்பாக இருந்தால் பார்வை தவறில்லை)
ஆக தாங்கள் உளவுபார்க்கவேண்டிய அவசியமில்லை தாங்கள் யார் என்பதை இன்னும் தெளிவாக வைக்கவேண்டிய தேவை யான் மாஸ்ரர் குறூ;பிற்கு உண்டு. அதை தங்கள் செயற்பாட்டினூடாக நிறுவக்கேட்பதே நியாமான கேள்வியாக இருக்கும்.
suthakaran
ஈமெயிலை வைத்து இரயாகரன் தனது தொடரை ஆரம்பித்து விட்டார். நான் “காண்டம் கூறுகிறேன்” : ஜெயபாலன் கேள்விகளுக்கு அவரது பேரப்பிள்ளை காலத்திலும் இரயாகரன் பதில் சொல்லமாட்டார். கட்டன் பணம் போலவே கிடப்பில் போய்விடும்.
பார்த்திபன்
தமிழரங்கத்தை பல மாதங்களாக அவதானித்து வரும் ஒரு வாசகனாக, இராயகரனின் சுய தம்பட்டங்களைத்தான் அவதானித்து வருகின்றேன். புலிகள் இருந்தவரை அடக்கி வாசித்துவிட்டு புலிகளின் அழிவின் பின், தன்னை ஏதோ தமிழ் மக்களின் இரட்சகன் போல் காட்ட முயன்று வருகின்றார். இதற்காக இவர் ஆடும் நாடகங்களைப் பார்க்க சிரிப்புத் தான் வருகின்றது. இன்று சரத் பொன்சேகாவின் சதிராட்டங்களுக்கும், இவர் ஆடும் ஆட்டங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. அநியாயங்கள் நடந்த போதெல்லாம் அடக்கி வாசித்து விட்டு, இன்று தன்னை நியாயப்பபடுத்த மற்றவர்களை மட்டும் குறி வைத்துத் தாக்கி, தனது தவறுகளை மறைத்து மக்களை முட்டளாக்கப் பார்க்கின்றார். துரோகிகளைக் கூட நாம் மன்னித்து விடலாம். ஆனால் இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள் விடயத்தில்த் தான் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
Kusumpu
//டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ”
இது எப்பநடந்தது ?? இரயா குழுவில் உள்ளவர்கள் யார் ?/ இதை எப்படிச் சொல்வது சிவப்புத் தொப்பி போட்ட புலி என்றா?
மேளம்
இங்கிருந்துகொண்டு தாயகத்தில் இருப்பவர்களெல்லாம் ஒன்றும் தெரியாத மடையர்கள் என்று நினைத்து எழுதிக்கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நானே ஏதோ ஒன்றால் அடித்துக் கொண்டாலும் பரவாயில்லை போலிருக்கின்றது. ஏனப்பா இங்கிருந்து குப்பை கொட்டுகின்றீர்கள்? ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டிக்கு ஆளில்லாமல் சம்பந்தன் சிவாஜிலிங்கம் எல்லாம் அலைகின்றார்களாம். உங்களைப் போன்ற பொறாமை பிடித்த மாக்கள் இருந்தென்ன? போயென்ன?
பல்லி
மேளம் உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்குதான்; அதில் பல்லியும் உடன்படுகிறேன்; ஆனால் இவர்கள் சொல்லும் விடயங்களை அப்படியே விட்டு விட்டால் இவர்களுக்குதான் எல்லாமே தெரியும்; அதை பார்க்கவோ படிக்கவோதான் நாம் லாயக்கு என்பது போல் ஒரு உணர்வை இவர்கள் எம்மீது செலுத்துவதால் அவர்களுடன் குத்திமுறிய வேண்டி உள்ளது; தேசம்தளம் தவிர்ந்த எல்லா தளத்திலும் எழுத்தாளர்கள் மட்டுமே (அப்படிதானே சொல்லுகினம்) எழுதுகினம்;
தேசத்தில் மட்டுமே பல்லியும் மேளமும் எமது ஆதங்கத்தை எழுத முடிகிறது; ஆனாலும் நாம் அவர்கள் அளவுக்கு வேண்டாத ஆளம்வரை செல்வதில்லை உதாரனத்துக்கு;;;;;
அமெரிக்கா விண்வெளிக்கு ஏதோ அனுப்புகிறது; ரஸியாவோ அமெரிக்கா என்ன அனுப்பியது என கண்டறிய ஒன்றை அனுப்புகிறது; நாம் என்ன குறைந்தவர்களா என சீனா இந்தியாவும் அனுப்புகிறது, ஈரான் அமெரிக்கா மீதும் இஸ்ரேல் மீதும் எதையோ அனுப்பிவிடுவேன் என மிரட்டுகிறது;
கொரியாவோ சொல்லவே வேண்டாம் எங்கு வேண்டுமானாலும் அனுப்புவார்கள் போல் இருக்கு, இதில் நாமோ புலிக்கு பணம் அனுப்புகிறோம் அல்லது குடும்பத்துக்கு பணம் அனுப்புகிறோம்; புலிகளோ போய் சேராத கப்பலை அனுப்புகிறார்கள், எமது அரசோ சர்வதேசத்தை சமாளிக்க தமது சகாக்களை அனுப்புகிறது, ஆனால் இங்கு என்ன என்றால் மைல் அனுப்பி சூ காட்டுகிறார்கள்; அல்லது கண்ணிக்குள் பூச்சியை அனுப்புகிறார்கள்; ஒரு மைலை அனுப்பி எத்தனை பேர் தூக்கத்தை சில அறிவு பித்தர்கள் கெடுத்துவிட்டனர் பாருங்கள்; இதை இப்படியே விட்டால் நாளை என்ன அனுப்புவார்களோ தெரியாது; அதனால் தான் நாமும் இவர்களுடன் இரவு பகலாய் பின்னோட்டம் அனுப்பி புடுங்குபடுகிறோம்; ஆனால் அந்த மக்கள் நிலை???
sakthi
நண்பர்களே! எழுத்துக்களில் அடிப்படை நேர்மை என்பது அவசியமானது. அறியாமல் தவறிழைத்தோர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மேற்செல்வது நேர்மையானது. ரயாகரன் தொப்பியே அணிவதில்லையாம். இப்படி இருக்க சிவப்பு தொப்பி டென்மாரக்கூட்டம். இது எங்கே எப்போ நடந்து என்னகூட்டம் என்பதையாவது தேசம் உறுதிப்படுத்தவேண்டும். இங்கு ராயகரனல்ல முக்கியம். ஒரு பொய்யை தெரியாமல் எழுதி அதற்கு டக்கசையும் பிடலையும் கூùப்பிட்டு நாங்களும் படிச்சு இவ்வளவு பின்னூட்டக்காரரும் அதற்கு அவசரப்பட்ட பின்னூட்டமிட்டு…முடியல.
Appu hammy
தமிழ் மக்களை காப்பாற்ற முடியாமல், அவர்களுடை உணர்வை மத்ததிக்கத் தெரியாமல் இருந்தாலும் பறவாயில்லை. தமிழர்களின் உணர்வுகளை, அவர்களுடைய வீரமிக்க வரலாறுகளை கொச்சைப் படுத்தாமல் இருங்கள்.
எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருங்கள் குறைகூறுபவா்களாயினும் கூறப்படுபவா்களாயினும் ஒரே கூட்டம்தான் வித்தியாசம் எதுவுமில்லை