ஆசிரி யர்களுக்கான நிலுவைச் சம்பளத்தைத் தாமதமின்றி வழங்கு வதற்குக்கல்வயமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கென 400 மில்லியன் ரூபாவை சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கு வழங்கியுள்ளதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாகாணங்களுக்குரிய நிலுவைச் சம்பளம் உரிய மாகாணக் கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அம்மாகாணங்களிலிருந்து கோரப்பட்டிருந்த தொகை முழுமையாக அனுப்பப்பட்டுள்ள தெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.