போருக்கான நோபல் பரிசு கொ(கெ)டுப்பு! : நோர்வே நக்கீரா

obama-nobel.jpgசுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.

இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.

ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?

அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?

ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.

இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.

இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.

Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • Nackeera
    Nackeera

    நோர்வேக்கு வந்த உபாமாவிடம் பூவா தலையா போட்டுப்பார்த்து நோர்வேசிய தேசியத் தொலைக்காட்சி மட்டும்தான் கேள்விகளைக் கேட்டகலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. கேள்வி” இந்தநோபல்பரிசை எதிர்காலத்தில் எதற்காகப் பயன்படுத்தப் போகிறீர்கள்” இக்கேள்விக்குள்ளும் உபாமா இப்பரிசுக்கு இப்போ தகுதியில்லாதவர் என்ற பூடகம் இருந்தது. இது மொழியாழுமையான கேள்வி என்பதால் சரியாக மொழிபெயர்ப்பது கடினமானது. எதிர்பார்க்காத கேள்வி என்பதால் சிறிது தயங்கியபடி ” என்னை விட வேறு சிலர் இப்பரிசுக்குப் பொருத்தமானவர்கள்” என்று கூறினார். இப்படியான ஒரு வெக்கக்கேட்டை விட முன்கூட்டியே சொல்லியிருக்கலாம் தான் செய்து முடித்தபின் பரிசைத்தாருங்கள் என்று பரிந்துரைத்திருக்கலாம். இப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காரணம் சமாதானத்துக்குரிய செயற்பாடுகளை தன்னால் நிறைவேற்ற முடியுமா? இல்லையா? என்ற தொக்கல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

    Reply
  • Anonymous
    Anonymous

    சமாதானப் பரிசு ஒருபரிசுகேடு என்று ஓபாமாவில்தான் எல்லாருக்கும் தெரிய வரும்.பெரும்பாலோர் அவனைக் கறுப்பனாக பார்க்கிறார்கள்.சிலர் அரை வெள்ளயனாக நோக்குகிறார்கள்.இன்னும் சிலர் அமெரிக்கனாகப் பார்த்து,முற்போக்கு கருத்து விடப் பார்க்கிறார்கள்.

    டைனமைட் உலகில் அமைதியையா ஏற்படுத்தியது? ஒரு பேரழிவின் கர்த்தாவே அமைதிப்பரிசு கொடுப்பது முரண்நகையான விடயம். அதிலும் நோர்வே மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பாலஷ்தீனத்தையும்,தென் கிழக்காசியாவில் தமிழீழத்தையும் சின்னாபின்னப் படுத்தியவர்கள்.
    அவர்கள்தான் அழிவுகளின் பிதாமகர்கள். இந்தப் பரிசு கேடை யாரிடம் சொல்வது? உஙகள் பிள்ளைகள் இராணுவத்தையோ,துப்பாக்கியோ கண்டு பயப்படத்தேவையில்லை. ஏனெனில் அடுத்த நாளே, அந்த துப்பாக்கிகள் எங்கள் பிள்ளைகளின் தோள்களில் தொங்க விடப்படும். நம்பிக்கையோடு இருங்கள்!!

    Reply
  • பல்லி
    பல்லி

    //காரணம் சமாதானத்துக்குரிய செயற்பாடுகளை தன்னால் நிறைவேற்ற முடியுமா? இல்லையா?//
    அது முடியாது என்பது அவருக்கு நல்லாய் தெரியும்; அதனால்தான் கிடைக்கும்போதே அதை பெற்று கொண்டார்என நினைக்கிறேன்; 30000 ராணுவத்தை அனுப்பி தானும் அமெரிக்கா சண்டியந்தான் என்பதை நிருபித்து போட்டார், இதில் இந்த ராணுவம் அனுப்பிய விடயம் பற்றி அல்கெய்தா அமைப்பு கருத்து கூறுகையில் ராணுவத்தை அனுப்புவது மட்டும் அவரது செயல், அந்த ராணுவம் திரும்ப அமெரிக்கா திரும்புவதா இல்லையா என்பதை தமது அமைப்புதான் முடிவு எடுக்கும் என தெரிவித்தனர்; ஆக அவருக்கு கிடைத்த பரிசுக்கு பல உயிர்பலியை ஓபாமா கொடுக்க போகிறார் என்பது மட்டும் உன்மை;

    Reply
  • sinna
    sinna

    Anonymous
    எல்லாவருடைய வீட்டிலும் கத்தி இருக்குது எண்டதிற்காக வீட்டில எல்லோரும் கத்திக்குத்து காயங்களோடயோ இருக்கினம்

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சின்னா நன்றாகச் சொன்னீர்கள்: யார்கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தானே முடிவுகள்.

    Reply
  • Nackeera
    Nackeera

    அநோனிமஸ்! நீங்கள் நினைத்தது சரியானதே .டைனமைட் ஆபத்தானது தான். அதை அறிவுபூர்வமாக பாவித்தால் நன்மையே பயக்கும். நோபல் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். நோர்வேயைப் போல் சுவீடனும் மலையும் மலைசார்ந்த பிரதேசமே ஆகும். இன்நாடுகளில் வீடு கட்ட: தெருப்போட: குகைகள் அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த டைனமெட்டு பெரிதும் பயன்பட்டது. தொடர்ந்து பயன்படுகிறது. டைனமைட்டுக்களை மனிதரை அழிப்பதற்கான வெடிகுண்டுகளாக நோபல் தயாரிக்கவில்லை. மாறாக இராணுவத்தையும் இராணுவப்பலத்தையும் குறைக்கும் நாடுகளுக்கு பரிசளிக்கவும் என்று உயில் எழுதியுள்ளார். பயணம் செய்வதற்குப் பயன்படுத்தும் விமானத்தை இரட்டைக் கோபுரங்களை அழித்து 3000 அமெரிக்கரைக் கொல்ல பின்லாடன் பயன்படுத்துவில்லையா? ஒவ்வொரு பொருளும் ஆபத்தானவைதான். அவற்றைப் பயன் படுத்துபவர்களைப் பொறுத்துத்தான் அவை நன்மை பயப்பதும் விடுவதும்.

    பல்லி! எனது கருத்தும் அதுவே. உபாமா மிகத்திறமையாகப் பேசவல்லவர். பரிசளிப்பு விழாவிலும் திறமாகவே பேசினார். போர் என்பது சிலவேளைகளில் அத்தியாவதியமானது என்றார். இது என்மனதை ஒருதரம் இரணமாக்கியது. சந்திரிகா சொன்னார் சமாதானத்துக்காகப் போர் என்பது போல் எனக்கு இருந்தது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //யார்கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தானே முடிவுகள்//
    மிக உன்மையான நிதர்சனம்; ஒரு முட்டாள் கையில் ஆயுதம் இருந்தால் ஆயுதம் முட்டாளை இயக்கும்; அதே ஆயுதம் ஒரு அறிவாளியிடம் இருந்தால் அவன் ஆயுதத்தை இயக்குவான், அதேபோல் ஒபாமாவின் ஆயுதங்கள் மட்டுமா வெடிக்கும்; பின்லாடனின் ஆயுதங்களும் வெடிக்கும் தானே; அதனால் அழிய போவது ஓபாமாவின் அரசோ அல்லது அவருக்கு கொடுத்த பரிசோ அல்ல, எத்தைனையோ கனவுடன் இருந்தும் ராணுவத்தில் சேர்ந்த பல மனிதர்கள் உயிர்தான்; ஆனால் ஆட்ச்சி காலம் முடிந்ததும் ஓபாமா ஒரு கிராமத்தில் படைகளின் பாதுகாப்புடன் (இன்று புஸ் போல்) வாழ்க்கையை தொடங்குவார், ஆனால் அன்று பல ராணுவவீரர் குடும்பம் நிலை??

    Reply
  • Nackeera
    Nackeera

    //ஆனால் அன்று பல ராணுவவீரர் குடும்பம் நிலை??// இதில் முக்கியமாக இராணுவத்தில் முன்வரிசையில் நின்று சூடுவாங்குவது ஏழை கறுப்பின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இராணுவத்திலும் உயர்பதவிகள் வெள்ளையர்களுக்குத்தான்

    Reply
  • sekaran
    sekaran

    ஒபாமா ஏசு கிறிஸ்து அல்ல. தயவு செய்து அவரிடமிருந்து அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். ஒபாமா ஒரு நல்ல மனசுள்ள அரசியல்வாதி. அவ்வளவு தான். தவிர அமெரிக்காவின் முதலாளித்துவ சக்தி மிகுந்த அரசியல் கட்டமைப்பை சுலபமாய் உடைத்துவிடமுடியாது. மக்களின் பங்களிப்பும் தேவை. நோபல் பரிசை அவர் ரெண்டு நாள் கழித்துத்தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஏன்? (பரிசு கிடைத்த சந்தோஷத்தில் அவர் பெண்டாட்டியோடு வெள்ளை மாளிகையை சுற்றி சுற்றி ஆடியிருப்பார். ஆகவே தான் உடனடியாய் சொல்லவில்லை என்று சிலர் நம்பலாம்.) நோர்வே நேட்டோ கூட்டாளி. அரசியல் பொருளாதாரங்களில் ஒன்றுக்கொன்று தங்கியிருக்க வேண்டிய தேவை. ஒரு பெருமைக்குரிய பரிசை தருகிறோம். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். (அதன் பின்னால் வேறு காரணங்களும் இருக்கலாம். வேண்டாம் என்றால் அவமதிப்பு. மனசங்கடங்கள். ஆகவே ராஜ தந்திர பேச்சுகள். பேரங்கள்.) எப்படியோ ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்திருப்பார் என்றே கருத வேண்டும். ஆகவே அவரை சொல்லி குற்றமில்லை. நோர்வே அரசையும் நோபல் பரிசு குழுவினரையும் ஒரு பிடி பிடியுங்கள். ரசிக்கலாம். நாங்க ரெடி. நீங்க ரெடியா?

    Reply
  • பல்லி
    பல்லி

    // நாங்க ரெடி. நீங்க ரெடியா?//
    நாங்க எப்பவோ ரெடி, அது பிரச்சனை இல்லை; எமது பிரச்சனை அதுவல்ல; ஒரு பரிசை பெறுவதுக்கு ஒரு தகுதி வேண்டும்; இல்லையேல் ஒரு பரிசு தற்செயலாய் கிடைத்து விட்டால் அதுக்கு(பரிசு) தகுந்தாபோல் செயல்பட வேண்டும்; எமது கருத்து இவர் இந்த பரிசை பெற்ற பின்னும்
    ராணுவத்தை நம்புவதே, ஆனால் அவர் என்ன செய்ய முடியும்?
    இது தரமான கேள்வியல்ல; அவரது நாட்டு மக்களே ரானுவ செயல் பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது இவரால் என்ன செய்ய முடியும் என்னும் கேள்வி நியாயமானதா? அமெரிக்கா மற்றய நாடுகளை நம்பி வாளும் ஒரு நாடு, சின்ன சின்ன வியாபாரிகளை நம்பி வியாபாரம் நடத்தும் ஒரு மொத்த வியாபாரி என்பதிலும் எமக்கு கருத்து முரன்பாடு கிடையாது, ஆனால் நோர்வேயை வெள்ளை புறாவுடன் நாடு பூர பறக்கவிட்டு விட்டு ஸ்ரேலை ஆயுதங்களுடன் கண்காணிக்க அனுபுவதையும் உலகம் அறியும்; ஆக அவரால் என்ன செய்ய முடியும் எனபது அனைவரும் அறிந்ததுதான்; சங்கரியர் தனது பரிசை பெற்றுகொண்டு அதன்பின் அவரது செயல்பாடுகள் எப்படி சுயநலன்(பதவி) கருதி உள்ளதோ; அதேபோல் ஓபாமாவின் செயல்பாடும் அவர் தெரிந்தே செய்யும் துரோகதனம்தான் இந்த பரிசை பொறுத்த மட்டில் :
    பல்லி தொடரும்;

    Reply
  • Kusumbo
    Kusumbo

    நானும் ரெடி… சமா போர்வோமா? டெமொகிறட்ஸ்: றிப்பப்ளிகான்ஸ் இரண்டு கட்சிகளையும் அமெரிக்காவில் எடுத்துக் கொண்டால் கிளின்டன் உபாமா பக்கம் சிறு இடதுசாரித்தன்மை இருக்கும். இருந்தாலும் வலதுசாரிக்குள் நிற்கும் இடதுசாரிகள் என்றே கருதவேண்டும். /அமெரிக்காவின் முதலாளித்துவ சக்தி மிகுந்த அரசியல் கட்டமைப்பை சுலபமாய் உடைத்துவிடமுடியாது/ நியாமான கூற்று ஆனாலால் உபாமாவும் வலதுசாரியாகவே நடக்கிறார். ராஜதந்திரம்தான் சமாதானத்துக்கு ஒருவழி எனும் உபாமா. எப்படித் தன் இராணுவத்தை ஆப்பானிஸ்தானுக்கு அனுப்பி விட்டு ராஜதந்திரப் போச்சுவார்த்தைகளை நடத்தமுடியும். எதிரியாக நிற்பது தலிபான். இன்னிலையில் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவார்களா? இராணுவம் என்றாலே பாலியலுடன் கூடிய இயந்திரம்தான். சமாதானப்படை உலகில் எங்கு நின்றதோ அங்கேல்லாம் ராணுவத்தின் வாரிசுகள் இருக்கும் என்பதை இல்லை என்று மறுத்துரைக்க முடியுமா? தனது நோபல்பரிசுப் பேச்சில் ஒபாமா சொன்னார். ஆயுதம் என்பது சிலவேளைகளில் அவசியம் என்று. இதில் இருந்து ஒரு சிறு துளியாவது புரிகிறதா? ஆயுதவன்முறையில் ஒபாமாவுக்கு நம்பிப்கை இருக்கிறது. ஐயா எல்லா அரசியல்வாதிகளும் குட்டை மட்டைகள்தான். அப்பாவி மக்கள்தான் வரியையும் கட்டி அடியையும் வாங்கப்போகிறார்கள்.

    Reply
  • BC
    BC

    //Sekaran- ஒபாமா ஏசு கிறிஸ்து அல்ல. தயவு செய்து அவரிடமிருந்து அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள் //
    அப்போ ஏசு கிறிஸ்து அற்புதங்களை செய்வார் என்று சொல்கிறீர்கள்!
    நடக்க முடியாதவரை எழுந்து நடக்கவைக்கும்படியோ வாய் பேசாதோரை பேச வைக்கும்படியோ ஓபாமாவிடம் யாரும் எதிர்பார்த்தார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /அப்போ ஏசு கிறிஸ்து அற்புதங்களை செய்வார் என்று சொல்கிறீர்கள்!
    நடக்க முடியாதவரை எழுந்து நடக்கவைக்கும்படியோ வாய் பேசாதோரை பேச வைக்கும்படியோ ஓபாமாவிடம் யாரும் எதிர்பார்த்தார்கள் என்று நான் நினைக்கவில்லை./ – அடிசக்கை என்டானாம். சரியான போட்டி.சரியாச் சொன்னீர்கள். அற்புதங்கள் அதிசயங்கள் எமக்கு வேண்டாம். குறைந்த பட்சம் மிருகங்களுக்கு இடைக்கும் சுதந்திரத்தையாவது அனுபவிக்க விடுங்கள். அசையும் உரிமை: உணவுதேடும் உரிமை:கூடிவாழும் உரிமை;

    Reply
  • sekaran
    sekaran

    ஒபாமாவுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் நிர்ப்பந்தப் படுத்தி, கையில் திணித்து பரிசின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது பரிசுக் கமிட்டி என்பதே என் கருத்து. வில்லிருக்க அம்பை நோவதில் பயனில்லை. ஒபாமா ஜனாதிபதி ஆகுமுன்னர், ஈரானோடு பிரியாணி சாப்பிடுவேன். தலிபானை கிழிச்சிருவேன் என்று சொன்னவர் தான். அது அப்போது அவரும் அவர் கூட்டாளிகளும் வகுத்துக்கொண்ட ஒருவிதமான திட்டம். செய்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் நிஜ உலகில் நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே திட்டங்களை மாற்றவேண்டிய சூழ்நிலை. ஒரு உதாரணம். இந்த இடதுசாரித் தன்மையுள்ள வலதுசாரி, இத்தனை நாளாய் தனது Health Insurance Bill ஐ எப்படியாவது நிறைவேற்றிவிட படுகிற பாட்டைப் பார்த்தாலே அமெரிக்க அதிகார வர்க்கத்தின் கடுமை புரியும். (இதனால் சுமார் 45 மில்லியன் அடிமட்டத்து அமெரிக்கர்களுக்கு மருத்துவ நிவாரணம் கிடைக்கும்.)
    பரிசு வாங்கியதன் பின் ஒபாமா சொன்னார்: ஹிட்லரின் படைகளுக்கு முன்னால் காந்தியம் நின்று பிடித்திருக்குமா? இதை இப்படியும் சொல்லலாம். பிரபாகரனுக்கு முன்னால் சத்தியாகிரகம் துவங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? எல்லா முறைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவற்றுக்கென்று கால,நேர, சுற்று சூழல்கள் இருக்கின்றன. இது தான் நிஜ உலகம்.இதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கொஞ்சம் டைம் கொடுப்பது நல்லது. பதவிக்கு வந்து 10 மாசந்தான் ஆகிறது. அதுக்கு முந்தியே .. ம்ம் …அது இது சரிப்படாத கேஸ் என்று முடிவு கட்டுவது சரியில்லை.

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    சேகரன் கூறியபடி உபாமாவின் கையினுள் திணிக்கப்பட்டது என்பது ஒருவகையில் உண்மைதான். இந்த நோவேயிர்களை அவர்களின் வாழ்முறையைப் பார்த்தீர்களானால் தெரியும். சரியான தந்திரசாலிகள். இது உபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு அல்ல பரிசு கெடுக்கச் செய்யப்பட்ட செயலாகவும் கருதலாம். இப்பரிசை வாங்கிவிட்டு சமாதானத்துக்கு எதிராக உபாமா இயங்க இயலாது என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது. ஒருவகையில் இது உபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தமே

    Reply