தேசம்நெற் சில மணி நேரங்களாக இயங்காததற்கு எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘தேசம்நெற்’ இன் இணையத்துக்கான சேவைகளை வழங்கும் நிறுவனத்திற்கு ஆண்டுச் சந்தா வழங்க ஏற்பட்ட தாமதத்தால் தேசம்நெற் இணையம் சில மணி நேரங்களாக இயங்கவில்லை. இது தொடர்பாக எம்முடன் பல வழிகளிலும் தொடர்புகொண்ட தேசம்நெற் நண்பர்களுக்கு எமது நன்றிகள். எதிர்காலத்தில் இவ்வாறான தடங்கள்கள் ஏற்படாமலிருக்க முயற்சி செய்கின்றோம்.
– தேசம்நெற் நிர்வாகம்.
கந்தையா
காலைமை எழும்பி தேசம் நெட்டை திறந்தால் அதுக்கு முள்ளிவாய்க்கால் கட்டிப்போட்டாங்கள் போலத்தெரிஞ்சுது சரியெண்டு வெடியும் வாங்கிக் கொண்டு வைச்சிட்டுப் பாத்தால் அது திருப்பி நிற்குது உங்களுக்கு ஆயுள் கெட்டிதாண்டா.
பல்லி
பிடிக்காத விடயத்தை திறந்து பார்க்க நினைக்கும் கந்தையர் தனக்கு பிடித்த விடயத்தை பாதுகாக்க மறந்து விட்டார், அதனால் தான் தன்னை போல் எல்லோரும் திருட்டுதனமாக திறந்து பார்க்க வேண்டுமென நினைக்கிறார், வேண்டிய வெடிகளை வைத்து கொள்ளுங்கள்; தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது உங்களுக்கு வெற்றிதானே, அப்போது குடும்பத்தை தூர விட்டு நீங்கள் மட்டும் வெடியை கொளுத்துங்கள், தேவை ஏற்படின் அதையும் படத்துடன் தேசத்தில் விடலாம்;
பார்த்திபன்
நல்லவேளை தேசம்நெற் தாக்குதலுக்குள்ளானதால், சில மணி நேரம் இயங்கவில்லையென யாழ் இணையம் போல் நீங்களும் கதையளக்காமல் விட்டீர்கள்.