கடந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் 73பேர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவினர்களின் நடவடிக்கைகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது பாதாள உலகக்குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்கு விஷேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களை தடுப்பதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். கடந்த யுத்தகாலத்தில் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
jana
நீங்கள் எங்களுக்கு கேம் விடாதேங்கோ இந்த பாதாளக் கோஸ்டி தமிழர்களை கடத்தி கப்பம் கேட்டு கொலை செய்தவர்களுக்கும் உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏன் சரத் பொன்சேகாவிற்கும் நிச்சமாக தெரியும். இந்த உண்மை வெளிவரும்போது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?