புலி நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்ததால் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து – அமைச்சர் டலஸ் கூறுகிறார்

இராணுவச் சீருடையை தற்கொலை அங்கியாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அவரது உயிருக்கு கூடியிருக்கும் கூட்டாளிகளிடமிருந்தே ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  நேற்று கொழும்பில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தனது பாதுகாப்பு மக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது உண்மைதான் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அது வெளியே இருந்து வரப்போவதில்லை. இன்று ஜெனரல் பொன்சேகா விடுதலைப்புலிகளின் நண்பர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ளார். அவர்களிடமிருந்து தான் எந்த நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  எதிரணியினர் அமைத்துள்ள கூட்டமைப்பு புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். புலிகளுக்காக குரல் கொடுத்தவர்களும், பிரபாகரன் கொல்லப்பட்ட போது கண்ணீர் வடித்தவர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்புக்குள் சரத் பொன்சேகா சிக்கியுள்ளார். அங்குதான் அவரது உயிருக்கு ஆபத்து காணப்படுகிறது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகள் எப்போதும் சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்து, காரியம் முடிய கதையை முடித்து விடுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் பிரேமதாசா.

    Reply
  • palli
    palli

    புலியை நண்பாக்கி (கருனா) அரசு புலியை அழித்தது இறந்தகாலம், அரசை எஜமானாக்கி (சேகரா) அரசை கவிழ்க்க நினைப்பது நிகழ்காலம்; சம்பந்தர் ஜனாதிபதியாகி சிங்களவர்களுக்கு ஒரு சிறிய துண்டை (கேக்கைதான்) பிரித்து கொடுக்க போகிறார் எதிகாலத்தில்; எப்படி பார்த்தாலும் எமக்கு கஸ்ரகாலம்தான்,

    Reply
  • VS
    VS

    It is the President who has to face that and decide whether he goes ahead or stops. How do you explain the decision to stop the Wadamarachchi operation despite it being a successful operation during a previous regime? How can you blame that on a weak military leadership when Wadamarachchi was won?

    There were much better leaders in the Army than Gen. Fonseka. Who was he before 2005? Now he’s trying to become a cheap politician. He shouldn’t try to disgrace the military this way. Officers like Chagi Gallage, Shavindra Silva, Jagath Dias or Kamal Gallage were products of Wijeya Wimalaratne. So where is the weak military leadership when he was an excellent officer? We had enough brilliant officers. Who created the Special Forces or the Commanders? They were not done during the last 4 years? If the military leadership was weak how can these happen? They were the ones who made these sacrifices, who trained these officers, who were simply not given the proper political direction because the political will was not there. How can he blame the men of this great Army going back 35 years like this to portray himself as the only good one? He’s ridiculing the entire army.

    LTTE will target the President or any one of the Commanders. But don’t forget that the situation is very different today. The LTTE has been destroyed. But when he removed Gen. Parakrama Pannipitiya from the Eastern Command for whatever the reason, when the war in the North was still on and suicide cadres were in Colombo, Sarath Fonseka removed his security. This was the man who was responsible for clearing the East. And when Gen. Panipitiya filed a FR case Fonseka gave an affidavit agreeing to give only 6 people when there was a definite threat to his life.

    Reply