எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.
பார்த்திபன்
//எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. //
அறிக்கை என்ற பெயரில் எதையாவது அரைவேக்காட்டுத் தனமாக விடுவதை விட, பேசாமல் இருந்தாலே தமிழ் மக்களுக்குச் செய்யும் உதவியாகவிருக்கும்.
Constantine
Jannani Jananayagam – Original (Old) Version
nimalan
அது அவரது ஜனநாயக உரிமை.பேசாமல் இருப்பது மிகவும் மோசமான வன்முறை.
பார்த்திபன்
நிமலன்,
கூத்தமைப்பினர் மக்களை குளப்பி அறிக்கை விடுவதை விட, மக்களைச் சுயமாக சிந்திக்க விடுவதே தற்போதைய காலத்திற்கு உகந்தது. இவ்வளவு காலமும் மக்களைச் சிந்திக்க விடாது ஆட்டு மந்தைகள் போல் வைத்திருந்தது போதும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களே முடிவெடுக்கட்டும் தாம் என்ன செய்வதென்று. ஜனநாயக உரிமையென்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அது மக்களுக்கும் உரியதென்பதை தாங்கள் மறந்து விடக் கூடாது.
DEMOCRACY
எல்லாம் பம்மாத்து!, பழக்கதோஷத்தை இவர்களால் மாற்ற இயலாது!. அப்படி சுற்றி, இப்படி சுற்றி, இவர்கள்(சம்பந்தன்), யு.என்.பி.யைதான் ஆதரிப்பார்கள்!. புலன் பெயர் இலங்கைத் தமிழர்களின் (இலங்கைத் தமிழர்களின் 80%விகிதத்தினர்)பிரதிநிதிகள் இவர்கள். இலங்கைத் தமிழர்கள் பகுதிகளின் யதார்த்தங்கள் மற்றும் புலன்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் புகுந்து “சுழியோடியதனாலேயே” பிரபாகரன் தலைப் போனது. மேற்குலக!!? சார்பு அரசியலை வரலாறாக கொண்ட யு.என்.பி.,”முல்லிய வாய்க்காலில் கடைசிநேரத்தில் விடுதலைப் புலிகளின் பல தலைவர்களுக்கு, இந்தியா மற்றும் ராஜபக்சே கருத்துகளுக்கு மாறாக, பாதுகாப்பு வழங்கியதாக, வருவதாக, சரத் பொன்சேகா மீது செய்தி அடிப்படுகிறது”, பனையேறி வீழ்ந்தவன் மீது மாடேறி மிதித்தது போல், சணக்கியமாக? பாதுகாப்பு தேடியவர்களை, “மாட்டின் காலடியில் (சரத் பொன்சேகா) கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர், சம்பந்தன் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்!. இலங்கையுலுள்ள தமிழ்மக்களின் யதார்த்தத்தை புரிந்துக் கொள்ளாமல் ,”உதிரி ரவுண்டாக” கடைசி ரவுண்டையும் ஓடுவார்கள் என்று எதிர்பார்கலாம். இதில் சாணக்கியமக தப்பித்தவர்கள் (பெரும் பொருட் செலவில்), மறுபடியும் சாக்கடையில் விழ அவர்களின் அனுபவம் அவர்களுக்கு அனுமதிக்குமா?, அல்லது இன்னும் அவர்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறார்களா!!.
Kusumbo
இந்தச் தமிழ்சாதி எப்பதான் சரியாகச் சிந்திக்குமோ? வோட்டுகளைப் பிரிப்பதால் உ.ம் சம்பந்தனுக்கு விழும் வோட்டுகளால் சரத்பொன்சேகா வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு. பண்டைய அரசியல் தலைவர்களில் இருந்து புலிகள் வரை தமிழ்மக்களின் நலன்கருதி யார் சரியாகச் சிந்தித்தார்கள். சமசமாஜக்கட்சி (தமிழர்கள் அபிலாசையை ஆதரிக்கும் ஒரு இடதுசாரிக்கட்சி) இவர்களுடம் தமிழர்கள் உடன்பட்டாலும் முடிவு தமிழர்களுக்குப் பாதகமாகவே அமையும். இன்று எமக்கு இருக்கும் நிலை யார் வென்றாலும் சரி சரத் பொன்சேகா வெல்லக்கூடாது என்பதே. காரணம் அவர் தனது முகத்தை மிகத்தெளிவாக காட்டியிருந்தார். சிங்களவர் என்பவர்கள் தான் இலங்கையின் குடிமக்கள் நாம் தருவதை வாங்கித் தின்று விட்டு இருங்கள் என்று கூறியது பலருக்கு நினைவிருக்கலாம். தமிழர்களே சிந்தியுங்கள்
palli
பண்ணி காச்சலை கூட கண்டு பிடித்து விடலாம்; ஆனால் இந்த தமிழ் தலமைகளின் தூரநோக்கை கண்டறிய ஏதும் மிஸின் உண்டோ??