புலம் பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது. புலம் பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என இணையத்தள செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இணையச் செய்திகள் குறிப்பிடுகின்றன. .
இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee – USTPAC) ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ (Sri Lankan Products Boycott Committee) இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.
“நண்பர்களே… உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’ என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!” டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
london boy
புலிக்குக் காசும் கொடுத்துவிட்டு கூட்டங்களுக்கும் போய்க்கொண்டு இப்படியான இலங்கைச் சாமான் எதிர்ப்புக்காரர்கள்> லொண்டனில் வசிப்பவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்மர் உடுப்புகள் நல்ல ஸ்டைலாயும் சீப்பாயும் கொழும்மிலை இருந்துதான் எடுத்துப் போடுகினம். இந்த கூத்தெல்லாம் சீசனுக்கு விடுகிற பட்டங்கள்தான்.
பார்த்திபன்
உது இன்று நேற்றல்ல பல வருடங்களாயச் செய்யினம். இதிலை என்ன வேடிக்கை என்றால் இந்த இலங்கைப் பொருட்களின் மொத்த இறக்குமதியாளர்கள் யார் என்று போய்ப் பார்த்தால் தலை சுத்துது. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதில் நம்மவர்கள் கில்லாடிகள் தான். எயர் லங்காவை புறக்கணிக்கச் சொல்லி கூப்பாடையும் உந்தக் கூட்டம் தான் போட்டது. ஆனால் கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ரான்சிற்றில் எயர் லங்காவில் பயணிக்க லண்டனுக்கும் பிராங்போர்ட்டுக்கும் வரும் உவர்களை பார்த்தால் உண்மை விளங்கும்.
சந்தனம்
ஐரோப்பா தமிழ் இனம் என்னும் மந்தைகளாகதான் வாழ்கிறார்கள் இந்த புண்ணாக்குகளிற்கு இப்பவும் லண்டனில் பெட்டிகடையுடன் மரக்கறிவியாபாரமும் ஏமாற்றும் பேர்வழிகளாகவும் வாழ்ந்து கொண்டு புலத்து புறகணிப்பு பம்மாத்துகள்.
palli
அங்கே உள்ள மக்களை கூட இவர்கள் மனிதராக பார்ப்பதில்லை; அதனால் அதையும் புறக்கணிக்க சொல்லுமாபோல் தான் பல்லிக்கு படுகுது;
பார்த்திபன்
உந்த புறக்கணிப்புப் போராட்டக் கதைகள் எப்ப வந்தாலும் எனக்கு என் நண்பரொருவரின் நகைச்சுவை தான் உடன் ஞாபகம் வரும். சில வருடங்களின் முன் இவர்கள் தாயகத்திலிருந்து வரும் பொருட்களை புறக்கணியுங்கள் என்று போராட்டம் ஆரம்பித்ததற்கு சிலமாதங்கள் முன்பு தான், நண்பருக்கு தாயகத்திலிருந்து பெண் வந்து திருமணம் நடந்தது. புறக்கணிப்பு அறிவிப்பு வந்தபோது நண்பர் மனைவியைப் பார்த்து, நகைச்சுவையாகச் சொன்னார் “உந்த அறிவிப்பை உவங்கள் சில மாதங்கள் முன் விட்டிருக்கக் கூடாதோ” என்று….