அமைச்சர் டக்ளஸ் மன்னார் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

011109dag.jpgசமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை குறித்து ஆராய்ந்தார்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. சமாதான சூழலில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு நேற்று அமைச்சர் அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளுககு சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கணனி இயந்திரங்கள், தளபாடங்கள், மற்றும் அலுமாரிகள் ஆகிய பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். மன்னார் மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli
    palli

    மனதுடன் செயல் பட்டால் நாமும் மனதார பாராட்டலாம்; பாராட்டுவோம்;

    Reply
  • accu
    accu

    இதைத்தான் பல்லி நானும் விரும்புகிறேன். டக்லஸ் செய்வதை பார்ப்போம்.அதைவிடுத்து சூளைமேட்டை உடனே இழுப்பது நல்லதல்ல.

    Reply
  • palli
    palli

    //டக்லஸ் செய்வதை பார்ப்போம்.அதைவிடுத்து சூளைமேட்டை உடனே இழுப்பது நல்லதல்ல.//
    அதுக்காக ஒற்றுமைக்காக சுவிஸ்சில் கூட வந்து அதை குழப்பிய பெருமையும் தோழரைதான் சாரும் என்பதை எப்படி நாம் எழுதாமல் இருக்க முடியும் எம்மினத்துக்கு நல்லது செய்தால் என்றுமே பல்லி பாராட்டாமல் விட்டதில்லை, அதேபோல் மகிந்தாவுக்கு விசுவாசம் காட்ட எம்மின மக்களை காவு கொடுக்க நினைப்பதையும் அம்பலபடுத்துவோம்; அது தோழரோ அல்லது தேசமோ பல்லிக்கு எல்லாமே ஒன்றுதான்,

    Reply
  • lamba
    lamba

    பல்லி நீங்கள் எப்படி டக்ளஸ் சுவிஸ் மாநாட்டை குழப்பியது என்று எழுதுகிறீர்கள். டக்ளஸ் கேட்டது மூன்று விடயங்கள் முதலாவது தேசம் நெற்றில் வந்த கட்டுரை பற்றியது இதற்கான பதில் என்ன என்பது. இரண்டாவது தமிழர் ஒற்றுமை மாநாட்டை எப்படி தமிழர் அல்லாதவர் தலைமை தாங்குவது எனக் கேட்டது மூன்றாவது தமிழர் ஒற்றுமைபற்றிய மாநாட்டை தமிழில் நடாத்த வேண்டும் என்பது.

    அடுத்தது மிக முக்கியமான விடயம் பல்லி நீங்கள் மறந்து விட்டீர்கள் தற்போது இலங்கை அரசில் இருக்கும் அந்த அரசின் அமைச்சரை வைத்தே இதை நடாத்தினோம். இதில் இந்த அமைச்சர் வெள்ளைக்கு ஆமா போட்டுத்தான் இந்த மாநாட்டை நடாத்த வேண்டுமா? ஏன் வரதகுமார் மாநாட்டை தலைமை தாங்கி நடாத்தியிருக்க முடியாது

    ஏற்கனவே தேசம்நெற்றுடன் இப்படி ஒரு மாநாட்டை நடாத்தி ஒற்றுமை ஏற்ப்படுத்தும் முயற்ச்சியில் தமிழர் தகவல் நடுவம் வரகுமார் சேர்ந்து இயங்கிவருகிறார் இது டக்ளஸ்க்கும் தெரியும் இந்த கூட்டத்தை வரதர் தலைமை ஏற்றிருக்கலாம் அல்லாவா?

    டக்ளஸ் சரியாகத்தான் கேள்வி எழுப்பியுள்ளார் இல்லையா?

    தயவு செய்து டக்ளஸ்ஜ விமர்சிக்கலாம் பிரச்சினையில்லை ஏற்றுக்கொள்ளுவார் பல கடந்தகாலங்களில் செய்துள்ளோம் ஆனால் தவறாக திரிவுபடுத்தி விமர்சிக்க வேண்டுமா? டக்ளஸ் பிழை விட்டிருந்தால் தகவல் நடுவம் அல்லது மற்றவர்கள் அறிக்ககையில் விட்டிருப்பார்கள் அல்லவா.

    பல்லி டக்ளஸ் இடையே வேறு கூட்டதிற்கு போன போது இந்த மாநாடு ஆங்கிலத்தில் நடந்ததாம். கூட்டத்தில் இருந்தவர் தனக்கு விளங்கவில்லை என்றாராம். 2 வெள்ளைக்காக ஆங்கிலக் கூட்டம், பங்குபற்ற வந்த தமிழர் அமைப்பினருக்கு ஆங்கிலம் விளங்கவில்லை. யாருக்காக இந்த கூட்டம் நடாத்தப்பட்டது பல்லி

    நோர்வேயில் வெள்ளையன் தமிழரின் பிரதிநிதியாக தெரிவாம்.
    மாவீரர் தினத்தில் பல வெள்ளையர்களின் பேச்சை கேட்டீரோ. எல்லாரும் சொல்வது தமிழர் போராட்டம் 30 வருடங்களின் பின்னரும் மேற்கில் உளவு படைகளின் வசம் தமிழர் போராட்டம் உள்ளதையே இது வெளிக்காட்டுகிறது

    இதில் டக்ளஸ் என்ன மகிந்தா கூட தேறும்

    Reply
  • palli
    palli

    லம்பா சரியான விவாதத்தின் (நட்புடன்) போதுதான் ஒரு உன்மையான புரிதலை காண முடியும்; அதனால் தங்கள் கேள்விகளுகு பதில் தேடுகிறேன்,(நட்புடனே)

    //பல்லி நீங்கள் எப்படி டக்ளஸ் சுவிஸ் மாநாட்டை குழப்பியது என்று எழுதுகிறீர்கள்.//
    லம்பா இதுக்கு அமெரிக்கா பல்கலைகழகத்தில் படிக்கவா வேண்டும்;அன்றாட எமது மக்கள் பற்றி பலர் செய்யும் அரசியலை கவனித்தாலே போதுமே, அதையும் விட இப்போதுதான் தமெக்கென எல்லோரும் தளம் வைத்திருக்கினம், அதையும் ஒரு முறை வலம் வந்தால் போச்சு,

    // டக்ளஸ் கேட்டது மூன்று விடயங்கள் முதலாவது தேசம் நெற்றில் வந்த கட்டுரை பற்றியது இதற்கான பதில் என்ன என்பது. இரண்டாவது தமிழர் ஒற்றுமை மாநாட்டை எப்படி தமிழர் அல்லாதவர் தலைமை தாங்குவது எனக் கேட்டது மூன்றாவது தமிழர் ஒற்றுமைபற்றிய மாநாட்டை தமிழில் நடாத்த வேண்டும் என்பது.//
    இந்த மூன்று கேள்விகளையும் கேக்கதான் தோழர் அங்கிருந்து இங்கு வந்தாரா?? என்பதுகூட எனது குற்றசாட்டின் ஒரு பகுதிதான்; காரனம் இதை கொழும்பில் கேட்டிருக்கலாம், அல்லது தனது பயண செலவையாவது குறைத்திருக்கலாமல்லவா? இங்கு வரும்வரை அவருக்கு இது தெரியாது என சொல்லி அவரை சிறுவனாக்கி விடாதீர்கள்;

    //இதில் இந்த அமைச்சர் வெள்ளைக்கு ஆமா போட்டுத்தான் இந்த மாநாட்டை நடாத்த வேண்டுமா? ஏன் வரதகுமார் மாநாட்டை தலைமை தாங்கி நடாத்தியிருக்க முடியாது//
    இது பல்லியின் தவறா? லம்பாவின் ஆதங்கமா? மகநாட்டாளர்களின் வெற்றியா?? தேடுங்கள் விடை கிடைக்கும், எனது பதில் வெற்றியே,

    //ஏற்கனவே தேசம்நெற்றுடன் இப்படி ஒரு மாநாட்டை நடாத்தி ஒற்றுமை ஏற்ப்படுத்தும் முயற்ச்சியில் தமிழர் தகவல் நடுவம் வரகுமார் சேர்ந்து இயங்கிவருகிறார் இது டக்ளஸ்க்கும் தெரியும் இந்த கூட்டத்தை வரதர் தலைமை ஏற்றிருக்கலாம் அல்லாவா?//
    மாங்கயின் விலை கேட்டால் தேங்காயின் விலை சொல்லகூடாது; லம்பா;

    //டக்ளஸ் சரியாகத்தான் கேள்வி எழுப்பியுள்ளார் இல்லையா?//
    ஆம் ஒருக்கிணைப்பு சீர்கெடும் வகையிலும் மகாநாடு முடிவுக்குவர இதுவே சரியான செயல் என்பது அவருக்கு தெரியாதா என்ன;

    //தயவு செய்து டக்ளஸ்ஜ விமர்சிக்கலாம் பிரச்சினையில்லை ஏற்றுக்கொள்ளுவார் பல கடந்தகாலங்களில் செய்துள்ளோம் ஆனால் தவறாக திரிவுபடுத்தி விமர்சிக்க வேண்டுமா?//
    பல இடத்தில் தோழரை பாராட்டியுள்ளேன், இது பல்லியின் கருத்துதானே; அதனால் பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ பின்வாங்க மாட்டேன், அவருடன் எனக்கு பகை இல்லை நட்ப்பு உண்டு, இதை பலமுறை சொல்லி உள்ளேன்;

    //டக்ளஸ் பிழை விட்டிருந்தால் தகவல் நடுவம் அல்லது மற்றவர்கள் அறிக்ககையில் விட்டிருப்பார்கள் அல்லவா//
    ஏன் மக்களாகிய எமக்கு அந்த உரிமை இல்லையா? பாதிக்க போவது யார் நாமா? அல்லது தகவல் நடுவமா??

    ://பல்லி டக்ளஸ் இடையே வேறு கூட்டதிற்கு போன போது இந்த மாநாடு ஆங்கிலத்தில் நடந்ததாம். கூட்டத்தில் இருந்தவர் தனக்கு விளங்கவில்லை என்றாராம். 2 வெள்ளைக்காக ஆங்கிலக் கூட்டம், பங்குபற்ற வந்த தமிழர் அமைப்பினருக்கு ஆங்கிலம் விளங்கவில்லை. யாருக்காக இந்த கூட்டம் நடாத்தப்பட்டது பல்லி//
    இதை சுட்டி காட்டி தமிழில் நடத்தகூடிய தகுதி தோழருக்கோ அல்லது வந்திருந்த தமிழருக்கோ இல்லை என்பது இவர்களும் இவர்களுடைய அமைப்புகளும் என பலர் ஏளனம் செய்ய வைத்துவிடும்; எம்மால் முடியாததை மற்றவர் செயலை குற்றம்சாட்டி தப்ப நினைப்பது தோழருக்கு மட்டுமல்ல அவரது பதவிக்கும் களங்கம்;

    //நோர்வேயில் வெள்ளையன் தமிழரின் பிரதிநிதியாக தெரிவாம். மாவீரர் தினத்தில் பல வெள்ளையர்களின் பேச்சை கேட்டீரோ. எல்லாரும் சொல்வது தமிழர் போராட்டம் 30 வருடங்களின் பின்னரும் மேற்கில் உளவு படைகளின் வசம் தமிழர் போராட்டம் உள்ளதையே இது வெளிக்காட்டுகிறது//
    மிக சரியான கருத்து, அதனால் தான் கேக்கிறேன் இந்த சுவிஸ் அமைப்பினர் 22பேரும் கொழும்பிலோ அல்லது வன்னியிலோ அல்லது வடக்கே, கிழக்கே, மலயகத்தில், தமிழகத்தில் இப்படி பல இடம் இருக்க வெள்ளயர் நாட்டை தெரிவு செய்தது நல்லாவா இருக்கு, இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பது மாயவனுக்கு மட்டும் தெரிந்த மந்திரமாமே;

    //இதில் டக்ளஸ் என்ன மகிந்தா கூட தேறும்:://
    இதிலாவது லம்பாவின் கருத்துடன் இனைந்து போகிறேன்;

    லம்பா என்னுடய எழுத்து விமர்சனம்தான் கோரிக்கையல்ல.
    பல்லி தொடரும்,,,,,,,,

    Reply