ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும்.

slmcraufhakeem.jpgஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென எமது கட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது.அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம். முதலில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன் பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றார். இதன் போது புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர விளக்கமளிக்கையில் கூறியதாவது; எமது பொது வேட்பாளர் இராணுவ சீருடையை களைந்து அரசுக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாகவுள்ளார். சமையல் அறையிலிருந்த திருமதி பண்டாரநாயக்கவால் நாட்டை நிர்வகிக்க முடியுமாயின் ஏன் சரத் பொன்சேகாவக்கு முடியாது.

ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பொது வேட்பாளர் மீதும் புலி மற்றும் தேசத்துரோகியென முத்திரை குத்த முற்படவேண்டாமென அரச கோருகின்றேன். இதை மீறினால் நாம் கையைத் தூக்கி பேச வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்பாவிப் பொதுமகன்: ஒருவேளை சரத் பொன்சேகா தோல்வியைத் தழுவி, மகிந்த மீண்டும் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள்.

    நிசாம் காரியப்பர்: இதென்ன கேள்வி. அப்படியொன்று நடந்தால், உடனே மகிந்தவிடம் பின்கதவால் சென்று பேரம் பேசி ஒட்டிக் கொள்ள மாட்டோமா என்ன??

    அப்பாவிப் பொதுமகன்: அப்படீன்னா நீங்க?? ……….

    நிசாம் காரியப்பர்: என்ன முழிக்கிறாய், அரசியலில் இது ரொம்ப சகசமப்பா….

    Reply
  • VS
    VS

    இலங்கைவாழ் மக்களின் அதிநம்பிக்கைக்குரியவர்கள் நாங்களே என முழக்கமிட்ட ஐ.தே கட்சியினர் ஏறக்குறைய கடந்த முப்பத்தி நான்கு (34) ஆண்டுகள் ஆட்சிபீடத்தில் அமந்திருந்தார்கள். (1947—52, 1952—56, 1965—70, 1977—94) மற்றும் 2001 டிசம்பர் –2004 ஏப்ரல்வரை. மேற்படி அவர்களின் ஆட்சியின்போது நடந்து முடிந்த சுவாரஸ்யமான இரு சம்பவங்கள

    (1) ஜனநாயக மரபுகளுக்கமைய தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தினை இராணுவத்தினரின் துணையுடன் கைப்பற்ற முயன்ற ஐ.தே.கட்சியினர் அன்றைய தேசாதிபதியான சேர் ஒலிவர் குணதிலகா அவர்களின் உதவியையும்பெற்று 1962 ஜனவரி மாதம் 27 ந் திகதி மேற்கொண்ட சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்டது.

    (2) 1977 ம் ஆண்டு 5/6 பெரும்பான்மையுடன் ஆட்சியிலமர்ந்த ஐ.தே கட்சியினர் (1983) ல் நடாத்தவேண்டிய பொதுத் தேர்தலினை நடாதுவதற்கு அஞ்சிய நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு என்னும் பெயரில் ஒரு தேர்தலினை நடாத்தி 12 ஆண்டுகள் (1977—1989) எதிர்க்கட்சி ஒன்றில்லாத அரசாங்கத்தினை தொடர்ந்தனர். இந்நிலையிலேயே இன்று சுயமான வேட்பாளர் ஒருவரை ஐ.தே.கட்சியின்சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முடியாதவர்கள் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரின் தயவினைப்பெற்று சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முன்வந்துள்ளனர்.
    மேற்படி நடவடிக்கைகளின்மூலம் ஐ.தே கட்சியினர்மீது மக்கள் வைத்திருக்கும் செல்வாக்கு நிரூபணமாகியுள்ளது. கடந்த 14 தேர்தல்களில் கட்சியின் இன்றைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வழிநடாத்தலில் தோல்வியுற்ற ஐ.தே கட்சியினருக்கு புத்துயிர் கொடுத்து அவர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என தம்பட்டமடிக்கும் சில செல்லாக்காசுகளான தமிழ் அரசியல்வாதிகளும், ஏகாதிபத்தியங்களுக்கு முண்டுகொடுக்கும் சில முகவரியற்ற அரசியல் ஆய்வாளர்களும் முயல்வது வேடிக்கையானதே!

    Reply
  • VS
    VS

    மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹ¤ம் அஷ்ரஃப் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சியுடன் கூட்டே கிடையாது என்றார். ஆனால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமோ ரணிலிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றது.

    ‘பொன்னான கத்தி என்பதற்காக பொக்கிளை குத்தி சாகலாமா’ என்பது முதியோர் கூற்று. அதே போன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதற்காக தங்களுடைய எதிர்காலத்தை முஸ்லிம்கள் குழிதோண்டி புதைக்கலாமா? என்ற கேள்வி புத்திஜீவிகளிடத்தில் எழாமல் இல்லை. கட்சி என்பது காலத்தின் தேவை. இனவாதம் பேசி மக்களை முட்டாள்களாக்குவது வங்குரோத்து அரசியல்வாதிகளின் கைவந்த கலையாகிவிட்டது. தொடர்ந்து இவ்வாறு செய்வதால் மக்கள் மட்டும் ஏமாறவில்லை மக்களை ஏமாற்றுபவர்களும் ஏமாறத்தான் போகிறார்கள்.

    மர்ஹம் அஷ்ரஃப் அவர்கள் பிரியாவிடை சொன்ன கட்சியை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டால் அமைச்சர் அதாஉல்லாவில் தொடங்கி அமைச்சர்களான றிசாட் பதியுதீன், நஜீம் ஏ. மஜீத், அமீர் அலி, பிரதி அமைச்சர்களான ஹ¤சைன் பைலா, நிஜாமுத்தீன், பாயிஸ் ஆகியோரும் அவர்களின் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு ஓடியே போய்விட்டனர்.

    இவ்வாறு சென்றவர்கள் பல அரசியல் கட்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு எதிராக உருவாக்கியும் விட்டனர். இதற்கு முக்கிய காரணம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சுற்றியிருப்பவர்கள் அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முற்பட்டவர்கள் என்பது உண்மையிலும் உண்மை. அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ரணிலுடன் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றது- இதனால் பேரம் பேசும் சக்தியை இழந்து கட்சி ரணிலிடம் சோரம் போய்விட்டதோ என மக்கள் விசனப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது-

    மர்ஹம் அஷ்ரஃப் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை வெறுத்ததில் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது 1996ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய அன்றைய பொதுசன ஐக்கிய முன்னணி தீர்வுப் பொதியொன்றை தயாரித்து அரசின் சார்பாக அமைச்சர் அஷ்ரஃப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் பிரதிகளை பாராளுமன்றத்திற்குள்ளேயே தீயிட்டு எரித்தபோது அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் தனது இரண்டு கைகளையும் முகத்தில் புதைத்துக் கொண்டு மெளனியாக இருந்தார்.

    இச்செயல் மர்ஹ¤ம் அஷ்ரஃப் அவர்களை மட்டும் அவ மானப்படுத்தவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவமானப்படுத்தியது. 1989ஆம் ஆண்டு அஷ்ரஃப் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாஸாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து தேர்தல் சட்டத்தில் சிறிய கட்சிகளை இல்லாதொழிக்கும் 12.5% வெட்டுப் புள்ளியை 5% மாகக் குறைக்கச் செய்து அக்கட்சிகளைக் காப்பாற்றினார். ஆனால் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ரணிலுடன் பலமுறை கூட்டுச் சேர்ந்து எதைத்தான் சாதித்தது?

    Reply
  • VS
    VS

    எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சரத் பொன்சகாவுக்கு கட்சி எதுவும் கிடையாதாம். கழுத்தில்லாமல் தாலி கட்ட புறப்பட்ட கதைதான் இது.
    சரத் பொன்சேகா இளம் வயதில் இராணுவத்தில் மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்தார். பின்னாளில் மற்றவர்களுக்கு கட்டளையிட்டே வாழ்ந்தார். இவருக்கு சமூக பொது வாழ்வில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பணியாற்றுவது முடியாத காரியம். முள்ளை முள்ளால் எடுக்க கோத்தபாய கொண்டுவந்த நபர்தான் இந்த சரத் பொன்சேகா. ஏற்கனவே இராணுவத்தில் பாலியல் வல்லுறவு முதல் பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன இவர் தனது மருமகனின் நிறுவனத்திற்கூடாக ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்து கோடிகணக்கான டாலர்கள் அமெரிக்காவில் வைத்திருக்கிறார்.
    மாவிலாற்றில் சண்டையை ராஜபக்சே தொடங்கும் போதும் இறுதியாக முள்ளிவாய்காலில் சண்டை முடியும் போதும் இவர் நாட்டில் இருக்கவில்லை. இப்போ தான்தான் சண்டையை வென்றதுக்கு ஒரே காரணம் என்று சகஇராணுவத்தினரின் தியாகங்களையும் கடற்படையினரதும் விமானபபடையினரதும் பங்களிப்புகளையும் மறைத்து தன்னை பற்றி புளுகிவருகிறார்.

    Reply
  • palli
    palli

    //சரத் பொன்சகாவுக்கு கட்சி எதுவும் கிடையாதாம். கழுத்தில்லாமல் தாலி கட்ட புறப்பட்ட கதைதான் இது.//

    காட்ச்சியே இல்லாமல் எம் தலைவர்கள் நடிப்பு;
    கதையே இல்லாமல் புலிகளின் மாவீரர் உரை;
    கடனே இல்லாத மகிந்தாவின் ஆட்ச்சி;
    பொறுப்பே இல்லாத புண்ணாக்குகளின் ஆதரவு;
    கணக்கே இல்லாத புனர்வாழ்வின் வாழ்வு;
    வெக்கமே இல்லாத நாடு கெட்ட ஈழம்;
    பயமே இல்லாத தேசத்தின் கட்டுரைகள்,
    முடிவே இல்லாத பல்லியின் பின்னோட்டம்;
    அப்படி பல விடயங்கள் இல்லாததை நம்பியே நம்பிக்கையுடன் செயல்படும் போது ஏன் அந்த சேகராமட்டும் கட்ச்சி இல்லாமல் களத்தில் இறங்க கூடாதெங்கிறன்;

    Reply
  • accu
    accu

    பல்லி தயவு செய்து சாதாரண நடைமுறையில் எழுதுங்கள். அதுதான் உண்மையை வெளிப்படுத்துகிறது. எமக்கும் விளங்கும்படியாய் உள்ளது. நன்றி. அக்கு

    Reply
  • VS
    VS

    Sarath Fonseka joined the army on Feb 5, 1970 and was commissioned on June 1, 1971. He was made Commander in Chief of the Sri Lanka Army on Dec 6, 2005. Many women soldiers were molested by Sarath Fonseka. A case in point is of Nanda Menike. Sarath Fonseka repeatedly raped this woman solider and fathered two children. Before leaving from the Army he arranged pension and other benefits to her. As a Lieutenant, Sarath Fonseka was charge sheeted and punished. The offence: rape of a domestic (servant woman) on 25 December 1975, at the Army Training centre in Diayatalawa.
    Foneska was given a severe reprimand on Feb 20, 1976
    The order reads: “WOAS (Whilst On Active Service) being an officer of the Regular Force charged for the conduct to the prejudice of good order and military discipline that he on 25th December 1975 at the Army Training centre at the station officers mess Diayatalawa did become in a manner unbecoming the character of an officer and a gentleman and thereby punished under Army Act Section 129 (1).
    Names of witnesses:
    1. Lieut Ham Perrera 1/SLLI (O/ 50618)
    2. 2/Lieut. C.J. Kottahachchi SL AOC O/50671
    Severely Reprimanded
    By S.C. Ranatunga Colonel.
    One has to recall the allegation made by US Secretary of State Hillary Clinton in her address to UN Security Council. She spoke about allegation of rape against the armed forces. Such allegations must have been prompted by ‘sexcapades’ of General Sarath Fonseka.
    It was learnt that Sarath Fonseka was charge sheeted for several offences during his career. He had a serious brawl at an airport once.
    To accommodate Sarath Fonseka as the new Army Commander the Government retired the serving commander Lieutenant General Shantha Kotegoda by giving him a two-day notice.
    Fonseka’s elevation as Army Commander took place when he was packing for his retirement due in another couple of weeks. His first annual extension of service was granted on 18 December 2005.
    From that day onwards up to his retirement on Nov 12, 2009, Foneska received as many four extensions.
    All because the President of Sri Lanka and the Secretary of Defence were very considerate towards him.
    The same Sarath Fonseka has now filed a fundamental rights petition in the Supreme Court, stating that “the President is entitled to a security force of 2000; the Defense Secretary has 500; former Navy Chief has 120 and the Army commander has a security detail of 600. While so much security officers are provided to them, Gen. Fonseka whose security detail was drastically curtailed has only 10 Commando soldiers, two unofficial security officers, 50 soldiers and a bullet proof vehicle”.
    In his petition Sarath Fonseka requested the Court to direct the authorities to provide him with 600 soldiers, 10 vehicles and two bullet proof vehicles as security cover. His contention was that as an Army Commander he faced with the biggest threat from the LTTE and cut backs on his security after the war was won, is ‘unjustifiable and unreasonable’.
    The retired general who has filed for his ‘fundamental’ rights has a dismal track record in respecting fundamental rights of others, particularly fellow generals particularly to his immediate predecessor, General Shantha Kottagoda (2004 to Dec 6, 2009).
    Within two days of his retirement as Army Commander, General Shantha Kottagoda was evicted from his quarters at the Army Headquarters. Subsequently within a month he was driven out of the General’s House located at the Bullers Road. He was deprived of his personal body guards. He was left high and dry without any security cover. Remember General Shantha Kottagoda had also fought against the LTTE. He was also a Tigers’ target.
    Fonseka, as army commander, also trampled on the security of some other former army chiefs as well. He called back all the security guards and vehicles provided to General L.P. Ballagalle (2000 to 2004), General C.S.Weerasuriya (1998 to 2000), General R.De. S. Dulwatte (1996 to 2000) and many retired senior generals of the Sri Lanka Army.
    Because Sarath Fonseka was charge sheeted on several occasions he was denied of the USB – Uthama Serva Pathakkam and also VSV Vishita Seva Vibushana. Subsequently when he became the commander of the army he amended the regulation in respect of the award of USB in order to qualify himself for the award of VSV and subsequently recommended for himself these very honours and received the awards.
    In 2002 when Sarath Fonseka was the Commandant of Jaffna, the Government decided to allow the Tamil land owners on a staggered basis to occupy their lands that came under security zone in the Jaffna Peninsula. But he refused to implement the order. He refused cooperation. The matter went up before Ranil Wickremasinghe, the then all-powerful Prime Minister. Ranil moved Fonseka out of Jaffna and posted him as the Wanni Commander.
    As Commander of Jaffna, Fonseka was provided with a satellite phone (Sat Phone) for communication purpose.
    He used the Satphone for personal purposes mostly talking to his US based daughters and friends in foreign lands. He took it along with him when he moved to Vavuniya; he took along with him the satellite phone. The Army wanted to court-martialled Fonseka for the abuse of the official telephone. Fonseka’s Satphone bill was a staggering Rs. 8.5 million. He settled the bill after he became the commander of the army by drawing money from the Army Welfare Fund.

    Reply
  • VS
    VS

    When the battle was raging Fonseka left on a holiday to China on 11 May. The trip was sponsored by a leading Chinese arms manufacturer, China North Industries Corporation, NORINCO. The entire family joined him in the holiday. Wife Anoma, two daughters Aspara, Aparna and the son-in law cum arms dealer Danuna Tilakaratne stayed with the General along with his ADC and a few other relatives and friends.
    NORINCO played the role of host to perfection. It provided the Air Tickets. When Sarath Fonseka’s Party landed in China, the factory representatives received him with full honours that are reserved to a privileged few.
    Sarath Fonseka and his ‘group’ were conducted on a sightseeing tour of Chongquing city and Xian where they saw the terracotta warriors, the Great Wall of China as well to the Olympic stadium.
    The General received a fat cheque towards the services he had rendered to please his hosts – bulk orders for military hardware for which he was responsible. The goodwill money shorn of all honorific is pure and unadulterated commission, kick back.
    The Arms dealer son-in-law used the occasion of the visit to China at the invitation of NORINCO to meet its rival, Poly Technologists. Danuna Tilakaratne met the Poly Technologists representatives with the full knowledge and blessings of his father-in-law. The meeting was a hush-hush affair. It resulted in some orders to Poly Technologists and the ordinance factory was asked to quickly ferry the ordered weapons to Sri Lanka. Poly Technologists also is rumoured to have showered the Sri Lanka Star general and his starry son-in-law with its version of goodwill money.
    All these discreet arms deals took place when the Sri Lankan forces – Army, Navy and air force were engaged in a pitched battle with the Tiger terrorists in Wanni.
    The holiday party lingered on in mainland China for a little while. By the time the General and his family and friends returned home with spirits rejuvenated, Sri Lanka’s war against terrorism on its very own soil ended by the 18 May.
    During the final stages of the war, as the army commander was not on hand, the Defence secretary Gotabaya Rajapaksa along with Vanni Commander and other forces commanders steered the campaign that culminated in the elimination of Pribakaran and his terrorists group.
    Sarath Fonseka used to long for power and authority like a megalomaniac. As commander of the army, he used to beseech the Defence secretary to vest with him the authority of controlling the Navy, Air Force and the Police. His argument was that such authority would give him the freedom to marshal all resources for effective deployment for best results in the war theatre. The Secretary to Defence refused to yield to Sarath Fonseka, thereby making him nurse a grievance against the Rajapaksas.
    Army officers who worked with Foneska told that the General always nursed the ambition of becoming supreme power in the country.
    On May 18, Government of Sri Lanka declared that the humanitarian campaign to liberate the Tamils was over and by that time more than 280,000 innocent Tamil civilians who were held as human shield by Prabhakaran ended up as internally displaced persons at the welfare centres.
    However, unbelievable it may be the truth is as Army Commander, Sarath Fonseka never visited any of the theatres of war when the battle was raging between the Sri Lankan forces and the Tamil Tigers. He never ventured out into the front line until Kilinochchi was liberated.
    When the troops had pushed out Tamil Tigers from Kilinochchi, President Mahinda Rajapaksa decided to visit the area on April 16, 2009. He wanted to celebrate the Sinhala and Hindu New Years with the troops stationed in Kilinochchi, IDPs and other civilians.
    The President invited the Army Commander to accompany him. But Fonseka showed reluctance saying that the war with the LTTE was still raging and as such on and no risks should be taken. Army Commander lacked the courage to go to the frontline.
    But the President kept his date with the front line. On his arrival at the proposed new hospital complex in the heart of Kilinochchi town on 16 April 2009, morning, the President and his entourage were received by Defence Secretary Gotabaya Rajapaksa, Chief of Defence Staff Air Chief Marshal Donald Perera, Commander of the Navy Vice Admiral Wasantha Karannagoda, and Commander of the Air Force Air Marshal Roshan Goonatilake. The Inspector General of Police Jayantha Wickaramratne was also present. He reached Kilinochchi a day ahead of President’s visit. That was the first time General Sarath Fonseka set his foot in the war ravaged region.
    Interestingly both when the war was declared and when the war ended, Gen Fonseka was no where in the scene. When President Rajapaksa declared war on the LTTE after the Mavil-Aru incident, the star general was away in Singapore. During the final days of the war, he was away in China with his arms dealer son-in-law collecting commission money and conniving with his son-law to order for another shipment of arms and ammunition.
    On 20 August 2009, the Defence Secretariat was informed of the arrival of the Mechanized Vessel Lily from China with 206, 20ft containers and 3 containers of 40 ft with arms and ammunition from China. The arrival came as a surprise. After Mahinda Rajapaksa became the President, the practice adopted is to order and regularize imports of military hardware through Lanka Logistics.
    Earlier the import orders used to be placed by forces commanders in a haphazard manner. Defence Secretary streamlined the import procedure and set up Lanka Logistics as the agency to handle all imports of military equipment.
    Lanka Logistics is presently headed by Nimal Perera. He is a former Director of Noritake Lanka Porcelain. Jayanth Wickremasinghe is the Chief Executive of Lanka Logistics. Normally arms and ammunitions are imported after asset drill and opening up of the Letters of Credit for the ordnance factory which would send the military hardware. Instead of going through these procedures, MV Lilly arrived at Colombo Port from China with Poly Technologists’s hardware – RPGs’ artillery ammunitions, small arms ammunitions, and spares for artilleries. According to Lanka Logistics they have not opened up the necessary Letter of Credit for the ‘cargo’ that came. This was the hardware that was indented during Gen Fonseka’s holiday to China. His son-in-law, who was on the holiday trip, is the agent of Poly Technologists. According to the Defence Ministry there is no need for the Poly Technologists’s hardware that came aboard MV Lilly. The ship was accordingly sent back to China. This decision created a big wedge in the relations between Sarath Fonseka and Gotabaya Rajapaksa, who are good friends otherwise. In fact it was the Defence Secretary who promoted Fonseka. . It was because of Gotabya’s insistence President Rajapaksa appointed Fonseka as the commander in Chief. Many generals don’t think Fonseka displayed any great talent in winning the Wanni war credit to Fonseka.

    Reply
  • lamba
    lamba

    பல்லியின் அடியொற்றி…..

    கொள்கைகள் இல்லாத பேப்பர் மாக்ஸ்ட்டுக்கள்
    எப்பபாரத்தாலும் அரசை எதிர்கும் தமிழர் ராஜ தந்திரம்
    டக்ளஸ்யை பாவித்து எண்டாலும் ஏதும் பெறத் தெரியாத ராஜதந்திரம்
    எப்படியாவது காசு கறக்கும் புலிவியாபாரம்
    தொலைந்து போகும் தமிழர் வாழ்வு
    நிர்க்கதியாகும் தமிழ் பிள்ளைகள் விதவைகள்
    எக்எல்லில் மட்டும் கோடி குவித்து மா.வி தினம்
    எல்லாம் கொமிசன் ஆன போராட்டம்

    ஒன்று மட்டும் சரி புலி தொலைந்தது மகிந்தா இல்லாமல் நடந்திருக்குமா? இதை இன்றும் கத்துவார்கள் நாளை தமிழீழம் போய்த்துப் போனவர்களய் நம்புவார்கள் இன்னுமொரு 30 வருடம் தப்பிட்டோம்

    Reply
  • palli
    palli

    //பல்லி தயவு செய்து சாதாரண நடைமுறையில் எழுதுங்கள்//அக்கு
    பல்லி எழுதுவது அக்குவுக்கு புரியவில்லையா?? புரியாதவரியை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்; என் எண்ணமே எனது எழுத்து அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதுவே, ஆக அக்குவுக்கு புரியாவிட்டால் அது பல்லியின் தவறே, அதனால் அந்த தவறான இடத்தை சுட்டி காட்டினால் பல்லி திரித்திகொள்ள இலகுவாக இருக்கும், நன்றி அக்கு;

    Reply