மீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னதாக இடம் பெயர்ந்துள்ள மற்றும் மீளக் குடியமர்த்தப் பட்ட பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க பணிப்புரை விடுத்தார்.
நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சை தொடர்பாகவும் இடம் பெயர்ந்த மற்றும் நிவாரணக் கிராமங்களி லுள்ள மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பரீட்சை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போதே ஆணையாளர் அநுர எதிரிசிங்க மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.