போராளிகளைத் துரோகிகளாக்கி சுயஇருப்புக்கான பணச்சடங்காக்கிய தினம் : த ஜெயபாலன்

London_Maaveerarnaalதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுள்ள தளபதி ராமின் மாவீரர் தின உரை (தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை)புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம். தற்போது தளபதி ராமின் முழுமையான உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

வே பிரபாகரனது மாவீரர் தின உரையும் தளபதி ராமினால் வழங்கப்பட்ட மாவீரர் தின உரையும் ஒரே நபரினால் தயாரிக்கப்பட்டு உள்ளதைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது. அல்லாவிட்டால் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை ஆராய்ந்து அதே பாணியிலேயே இந்த மாவீரர் தின உரையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வே பிரபாகரனது மாவீரர் தின உரைக்கு மாறாக இந்த மாவீரர் தின உரை யதார்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

தளபதி ராமின் மாவீரர் தின உரையின் முக்கியமான அம்சங்கள்:

1. கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும்,கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இன்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

2. எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த விளைவின் தாக்கங்கள் முற்கம்பி வேலிகளுக்குள்… பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்து…. பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து…… இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும்.. கனவனை இழந்த மனைவியுமாக….

3. இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதறக்காக நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம்.

4. எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீள்வதற்காக தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக  ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

5. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார். இச்சூழலில் இருந்து நாம் மீளமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

இவ்விடயங்களே தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய அம்சங்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கும் அதில் பதில் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசரமான அவசியமான செய்திகளை தளபதி ராமின் மாவீரர் தின உரை கொண்டிருந்தது.

London_Maaveerarnaalஆனால் தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைக்கு பெரும் எரிச்சலாக அமையும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. குறிப்பாக ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்’, ‘தலைவர் லட்சியத்தில் உறுதியாக நின்றது பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது’, ‘ஆயுத வன்முறையை முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்’, ‘முற்றுகைக்குள் இருந்து மீள தேசியத் தலைவர் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினூடாக ஒப்படைக்க முடிவெடுத்தார்’, ‘எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார்’ போன்ற விடயங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையின் நிதி வசூலுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. இதுவரை தாயகத்தில் உள்ள போராளிகளை வீரசாகசங்களுக்கு உள்ளாக்கி வசூல் ராஜக்கள் ஆன இத்தலைமைகள் தற்போது அங்குள்ள போராளிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன் அவர்களுக்கு துரோகிப்பட்டமும் சூட்டி உள்ளன.

தளபதி ராமின் தலைமையை ஏற்காத புலம்பெயர்ந்து வாழும் கஸ்ரோ அணியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமை ராம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாக செய்திகைளக் கசிய விட்டனர்.

தளபதி ராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய கேணல் கிட்டுவின் நெருங்கிய சகாவான ‘ஜக்’ என்பவரை துரோகி எனக் குற்றம்சாட்டி எக்சல் மண்டபத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். ‘கமல்’ ‘தனம்’ என்றழைக்கப்படும் நபர்கள் மண்டப காவலாளிகள் பலரை வரவழைத்து ‘ஜக்’ என்ற முன்னால் போராளியை வெளியேற்றினர். இச்சம்பவம் மாவீர்ர தினத்திற்கு முதல்நாள் நவம்பர் 26ல் ஏற்பாட்டு ஒழுங்குகளின் போது இடம்பெற்றது.

இவ்வாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் புலன்பெயர்ந்த ஆதரவுத்தளமும் உள்ளது. நம்பர் 27ல் தலைவர் உரையாற்றுவார் பொட்டம்மான் உரையாற்றுவார் போன்ற கதைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு திட்மிட்டுப் பரப்பி வந்தது. அதனால் இவ்வாண்டு மாவீரர் தினத்தில் பங்கேற்க தலைவரின் அல்லது பொட்டம்மானின் உரையைக் கேட்க பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எக்சல் மண்டபத்தில் கூடி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.

இதற்கிடையே மண்டபத்தில் இலங்கையில் இருந்து தனது மாவீரர் தின உரையை வழங்கிய தளபதி ராமின் உரையை ஒலிபரப்பும்படி சில கோரிக்கைகள் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள தளபதிகளின் உரையை ஒலிபரப்புவது பயங்கரவாதமாகக் கருதப்படும் என்பதால் அவ்வுரையை ஒலிபரப்ப முடியாது என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தனம்’ கோரிக்கை விட்டவர்களுக்குத் தெரிவித்ததாக எக்சல் மண்டபத்தில் இருந்து தேசம்நெற்க்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.

தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.

‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?

இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.

மாவீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதற்கு இவ்வளவு நிதிச் செலவில் விழா எடுக்க வேண்டியது தேவையல்ல. மாவீரர்களை நினைவு கூரும் ஒவ்வொருவரும் ஒரு மாவீரர்களது படத்தைத் தாங்கி மெழுகு வர்த்தியுடன் அமைதியாக அவரவர் வாழும் தலைநகர் வீதிகளுக்கு வந்து சில மணிநேரம் தங்கள் மெழுகுதிரிக்கு ஒளியேற்றி இருந்தால் அச்செய்தி சர்வதேசத்திற்கே சென்றிருக்கும்.

ஆனால் மூடிய மண்டபத்திற்குள் பணத்தை வாரி இறைத்துச் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் மூலம் பணம் மட்டுமே பண்ண முடியும். அதனையே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைகள் செய்கின்றன. அவர்களது நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் தாயக மக்களது பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளத் தயங்கப் போவதுமில்லை.

._._._._._.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் இருந்து இயங்கும் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரை: தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Comments

  • london boy
    london boy

    இவர்களுக்குள்ளேயே இழுபறி தீரக்காணோம். அதுக்குள்ளே ஒற்றுமைக்குக் கிளாஸ் எடுக்கினமாம். ஒரு குடையின் கீழ் திரள கூப்பிடுங்கோ. திரண்டு கிரண்டு சனங்கள் வரும்

    Reply
  • senthil
    senthil

    தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம்…………

    ஜெயபாலன், சரியாக உறுதிப்படுத்தாமல் ராமின் உரையே சரியானது என இப்போது வெளியிட்டு உள்ளீர்கள். இதற்காக பின்னொரு நாளையில் எப்படி சிறிலங்கா அரசுடன் இருந்து சிறிலங்கா புலனாய்வாளர்கள் கொடுத்த அறிக்கைக்காக வருத்தம் தெரிவிக்கப் போகிறீர்கள்?? இதேபோல் 2004இல் கருணா பிரிந்த போது கொடுத்த முக்கியத்துவம் எப்படி கருணாவை வசைபாட உங்கள் தளமே வெட்கமில்லாமல் முன்னையதை மறந்து பின்னர் செயற்பட்டது என்பதை மீளநினைகொள்ளவும். வெறுமனே புலத்து புலிகளின் தவறான செயற்பாடுகளுக்குநியாயம் கற்பிக்க சிறிலங்கா அரசின் நீண்ட திட்டத்துக்கு தேசத்தில் ராமின் அறிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்பது எனது கருத்து. ராம் சிறிலங்கா அரசின் அறிக்கையினை தான் வாசித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இங்கு ராம் துரோகியென என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒர் திட்டமிட்ட முறையில் கைதாகியுள்ளார் என்பதை கடந்த 25.11.2009 புலிகளின் தலைமை செயலகத்தால் விட்டப்பட்ட ஓர்நீண்ட அறிக்கையில் சம்பவம் நடந்த பின்னணி சொல்லப்பட்டுள்ளது. அடுத்து மே மாதம்18ம் திகதிக்கு பின்னர் ராம் அல்லது அவருடன் காடுகளில் நிற்பதாக சொல்லப்படும் புலிகளை தேடி ஒரு சிறு அளவிலான இராணுவநடவடிக்கை கூட கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை. ஏன்? அது பற்றி நீங்கள் ஏதும் அறிந்திருக்கிறீர்களா? கடந்த 10ம் திகதி ராம் தப்பியோடி கைதானதாக சிங்கள ஊடகங்களில் எப்படி செய்தி வந்தது? இது பற்றி கிஞ்சித்தேனும் நீங்கள் யோசித்ததுண்டா? கடந்த 5மாதமாக ராம் அல்லது நகுலன் ஒரு சிறு குரல் கூட ஊடகங்களில் வராத போது எப்படி அதும் அடர்ந்த காட்டுக்குள் இருந்து சுடச்சுட மெயில் குரல்வழி ஒலியை மிகத்தெளிவான இரைச்சல் இன்றி உலகத்துக்கு கொண்டுவர முடிகிறது? ஸ்கான் பண்ணிய ராமின் கையெழுத்து கடிதங்கள் எப்படி வேகமாக காட்டிலிருந்து அனுப்ப முடிகிறது? இப்படி இன்னோரன்ன சந்தேகங்கள் உள்ளது ஜெயபாலன்.

    இங்கு பிரபாகரன் இறந்துவிட்டார் என ராம் சொல்வது மட்டும் உண்மையானது. ராமின் அறிக்கையில் எந்த இடத்திலாவது சிறிலங்கா அரசை மிகக்கடுமையாக சாடியதாக ஒரு வரியை காட்டவும். ராம் புலிகளின் சர்வெதேச வலையமைப்பை சிதைக்க பாவிக்கப்படுகிறார். அது முடிந்ததும் இன்னொரு புலியை வைத்து ராம் எங்கோ ஒரு இடத்தில் நடந்த பதுங்கி தாக்குதலில் அல்லது சுற்றிவளைப்பில் ராம் விரச்சாவடைந்து விட்டதாக இராணுவமே சுட்டுவிட்டு சொல்ல வைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. புலிகளின் இராணுவ தளபதிகளை அரசு விட்டு வைக்கப் போவதில்லை. அதனால் ராம் இப்பொது வெளிப்பார்வைக்கு காட்டில் உள்ளதாக அரசு காட்டிவிட்டு கொலை செய்துவிடும். இதனை மனித உரிமை மீறல் எனச்சொல்ல யாருக்கும் எந்த சாட்சியும் இல்லை. இதுதான் ராம், நகுலன் ஆகியோருக்கு நடக்கவுள்ளது. அப்போது ஜெயபாலன் யாருக்காக வருந்தப் போகிறீர்கள்>???

    Reply
  • nathan
    nathan

    நவம்பர் 27 – இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
    “இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம். உயிர் நீத்த போராளிகள் மக்களுக்காகவே உயிர் நீத்துள்ளனர். இவர்களை மன்னிக்க முடியும். ஆனால் இதனை ஏவிவிட்டவர்கள் தற்போது இல்லை. இவர்கள் அனைவரும் தங்களை தியாகம் செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

    Reply
  • kovai
    kovai

    “ராமின் அறிக்கையில் எந்த இடத்திலாவது சிறிலங்கா அரசை மிகக்கடுமையாக சாடியதாக ஒரு வரியை காட்டவும். senthil on November 27, 2009 8:17 pm”

    பார்வைகள் பலவிதம்.
    இதில் வேறு கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு விட்டால்…….

    Reply
  • விசுவன்.
    விசுவன்.

    வினைவிதைத்தவன் வினையறுக்க வேண்டும். ராம் ஒரு நல்ல போராளியாக இருந்திருந்தால் புலிகளின் தலைமையில் இவ்வளவு காலம் இருந்திருக்க முடியாது. எனவே ராம் படையினருடன் இருந்தாலும் சரி புலியாக காடுகளில் உலாவினாலும் சரி இவர் ஒரு நடைபிணம்தான்! இவரை வைத்து இலங்கை அரசு புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைப்பதும் நல்ல விடயம் தானே. புலிகளின் சர்வதேச கட்டமைப்பு ஒரு மாபியா கும்பல் என்பதற்கு இன்றைய லண்டன் மாவீரர் தினம் ஒரு நல்ல உதாரணம்.

    இவர் புலியாக காட்டில் இருந்து கொரில்லா தாக்குதல் நடாத்தினால் அது இலங்கை அரசிற்கு தலையிடி எனவே அந்த அழுத்தங்களை வைத்து இலங்கை அரசை இனப்பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வுக்கு வர வைக்க முயற்சிக்கலாம்.

    அது சரி தமிழீழ விடுதலைப்புலகளின் தலைமைச் செயலகம் எங்கையிருக்கெண்டு ஒருக்கா தயவு செய்து சொல்லவும் திரு செந்தில் அவர்களே!

    Reply
  • palli
    palli

    செந்தில் உங்கள் பின்னோட்டத்தை தமிழில் விடவும் பல்லிக்கு புரிய மாட்டெங்கிறது;
    அது சரி நீங்கள்!!
    புலியா?
    புளியா??
    புண்ணாக்கா??

    Reply
  • senthil
    senthil

    பல்லி. முகம் காட்டி புலியா புளியா புண்ணாகோ தவிடோ எனக்கண்டு கொள்ளவும்– செந்தில்

    புலிகளின் தலைமை செயலகம் எங்கிருக்கிறது எனக்கும் தெரியாது. விசுவன் விசுவன் தானா என்பதும் எங்கிருந்து எந்த அடையாளத்துடன் எழுதுகிறீர் என சொல்லிக்கொண்டா எல்லாம் எழுதுகிறீர்.

    Reply
  • padamman
    padamman

    அது சரி தமிழீழ விடுதலைப்புலகளின் தலைமைச் செயலகம் எங்கையிருக்கெண்டு ஒருக்கா தயவு செய்து சொல்லவும்
    அது தெரிந்தால் ஏன்?
    ஓன்று மட்டும் போட்ட முதலுக்கு நல்ல லாபம்

    Reply
  • nadesh
    nadesh

    செந்தில் ஜெயபாலன் யாரெண்டு எல்லாருக்கும் தெரியும். நீங்கள் யாரெண்டு ஜெயபாலனுக்க தெரிஞசபடியால்தான் அப்படிக் கேட்டீங்களா. அல்லது தெரியாமலும் கேட்கலாமா அல்லது தெரிஞகாளை மட்டும் யாரும் கேட்கராமா எனக்கத் தெரியேலை.

    /சிறிலங்கா அரசின் அறிக்கையினை தான் வாசித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இங்கு ராம் துரோகியென என்னால் சொல்லமுடியாது./
    சிறிலங்கா அரசின் அறிக்கையினை வாசித்தால் துரோகிதானே.ராம் சிறிலங்கா அரசின் அறிக்கையைத்தான் வாசித்தார் எனடகிறீங்களா? சிறிலங்கா அரசின் அறிக்கையை வாசிக்கவில்லை என்கிறீங்களா? இராணுவத்திடம் போரிட்டு மடியாமல் அல்லது உயிருடன் பிடிபடாமல்(சயனைட் துணையுடன்)இருக்காது பொது எதிரியிடம் சரணடைது துரோகத்தனமா? இல்லையா?

    Reply
  • nathan
    nathan

    யாரைத்தான் நம்புவதோ பேதைநெஞஞம் அம்மம்மா தமிழனுக்குள் யாவரும் வஞஞகர். ஜெயபாலன் நீங்கள் சொல்வதுபோல் லண்டன் மட்டுமல்ல அய்ரோப்பா முழுவதும் நடந்த செலவை 712 போராளிகளை விடுதலை செய்ய செலவு செய்திருக்கலாம். உண்மை பேசினால் துரோகி என்பார்கள். ஆனாலும் பேசுவோம். சர்வதேச ஆக்கள் என்ற போர்வையில் எனிமேல் எவனாவது காசு கேட்டானோ உடனடியாக தகவல் போலீசுக்குத்தான். எனிமேல் வெளினாட்டில் யாரையும் நம்ப தயாராக இல்லை அவ்வளவுதான் போராட்டமா பிரபாகரன் வரட்டும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    செந்தில் நீங்கள் சொல்லவரும் விடயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
    1: //சரியாக உறுதிப்படுத்தாமல் ராமின் உரையே சரியானது என இப்போது வெளியிட்டு உள்ளீர்கள்.//
    ராமின் உரைதான் சரியானது என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் ராமுடைய உரையை சில ஊடகங்கள் திருத்தியமைத்து வெளியிட்டுள்ளன. ராமுடைய ஒலிப்பதிவு எமக்குக் கிடைத்தது. அந்த ஒலிப்பதிவில் உள்ள குரல் ராமினுடைய குரல் என்பதை ராமைத் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த ஒலிப்பதிவில் உள்ளதன் எழுத்து வடிவத்தையே அவர்கள் ஸ்கான் செய்து அனுப்பி இருந்தனர். அதன் பின்னர் அதனை வேட் டொக்கியுமன்ற்றாக அனுப்பி வைத்தனர்.

    2: //சிறிலங்கா அரசுடன் இருந்து சிறிலங்கா புலனாய்வாளர்கள் கொடுத்த அறிக்கைக்காக வருத்தம் தெரிவிக்கப் போகிறீர்கள்?//
    இதுவரை பிரபாகரன் வெளியிட்ட மாவீரர் தின அறிக்கை சீஐஏ எழுதிக் கொடுத்த அறிக்கை என்றோ அல்லது எம்ஐ-5 எழுதிக்கொடுத்த அறிக்கையென்றோ ஆராயவில்லை. பிரபாகரன் தன்னுடைய அறிக்கை என்று வெளியிடுகிறார். அதனை ஆராய்ந்தோம் விமர்சித்தோம். அதே போல் ராம் அது தன்னுடைய அறிக்கை என்று தன்னுடைய பெயரில் தன்னுடைய ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளார். அதனை ஆராய்ந்தேன். விமர்சித்தேன். நீங்கள் நம்புவது போல் அவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருப்பாரானால அந்த அறிக்கையை வேறு கோணத்தில் (இந்த அறிக்கையை இலங்கையரசு வெளியிட வேண்டியதன் தேவையென்ன, நோக்கம் என்ன என்ற கோணத்தில்)ஆராய வேண்டியிருக்கும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    3: //இதேபோல் 2004இல் கருணா பிரிந்த போது கொடுத்த முக்கியத்துவம் எப்படி கருணாவை வசைபாட உங்கள் தளமே வெட்கமில்லாமல் முன்னையதை மறந்து பின்னர் செயற்பட்டது என்பதை மீளநினைகொள்ளவும்.//
    கருணா பிரிந்தபோது ”புலிக்குள் பூகம்பம் ஈழம் ஈடாட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரையில் கருணா கிழக்கு மக்களின் நலன்கருதி புலிகளில் இருந்து பிரியவில்லை என்பதையும் கருணா தனது சொந்தக் காரணங்களுக்காகவே பிரிந்ததையும் குறிப்பிட்டுள்ளேன். கருணாவின் புகழ் பாடவில்லை. ஆனால் கருணா வைத்த குற்றச்சாட்டுக்களில் நியாயம் இருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அன்று எழுதிய அக்கட்டுரை இன்றும் நியாயமானதாக மட்டுமல்ல அக்கட்டுரையின் எதிர்வு கூறல்களும் நிகழ்ந்துள்ளது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    4: //வெறுமனே புலத்து புலிகளின் தவறான செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க சிறிலங்கா அரசின் நீண்ட திட்டத்துக்கு தேசத்தில் ராமின் அறிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்பது எனது கருத்து.//
    இவ்வாறு குறிப்பிடும் நீங்கள் ”ராம் சிறிலங்கா அரசின் அறிக்கையினை தான் வாசித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டால்” என்று சந்தேகத்தையே எழுப்புகிறீர்கள். எனது கட்டுரை ராம் சிறிலங்கா அரசின் திட்டத்திற்கு உடன்பட்டாரா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாதது. எனது கட்டுரை ராமின் மாவீரர் தின உரையில் உள்ள அந்த 5 அம்சங்கள் பற்றியதே.

    5: //இங்கு ராம் துரோகியென என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒர் திட்டமிட்ட முறையில் கைதாகியுள்ளார் என்பதை கடந்த 25.11.2009 புலிகளின் தலைமை செயலகத்தால் விட்டப்பட்ட ஓர் நீண்ட அறிக்கையில் சம்பவம் நடந்த பின்னணி சொல்லப்பட்டுள்ளது.//
    யார் இந்த தலைமைச் செயலகம்? இவரை யார் அப்பொறுப்பில் அமர்த்தியது. இவர்களுக்கு அவர்களுடைய தேசியத் தலைவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா என்பதனையே கடந்த ஆறு மாதங்களுக்குள் உறுதிப்படுத்த முடியவில்லை. மே 18க்குப் பின் சுயம்பு தலைவர்களும் பொறுப்பாளர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அவை ஒன்றுக்கொன்று முரனாகவும் இருந்துள்ளது.

    இந்த தலைமைச் செயலகங்கள் ஒழிந்திருந்து கல் எறிகின்றனரே அல்லாமல் இதுவரை மக்கள் மத்தியில் வரவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை.குறைந்தபட்சம் ராம் தனது பெயரைக் குறிப்பிட்டு ஒலியைப் பதிவு செய்து ஒரு அறிக்கையையாவது வெளியிட்டுள்ளார். ஆனால் புலத்தில் வாழும் தலைமை செயலகங்களான நெடியவன் ரூட்ரவி தனம் ரெஜி போன்றவர்கள் மேற்கு நாட்டு உளவுநிறுவனங்களால் இயக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது நீரூபிக்கப்படாதவரை அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே ராமின் நிலையும். புலிகள் போன்ற மக்கள் மயப்படாத புலனாய்வு அமைப்புகள் பற்றி இவ்வாறான குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே உள்ளன. பொதுத்தளத்தில் அவர்கள் வைக்கும் அறிக்கைகள் மூலமாகவே நாங்கள் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்காக அவர்களது பின்னணி அம்பலப்படும் போது யாரும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. வெட்கப்பட வேண்டியவர்கள் நாங்கள் அல்ல. அவர்கள்.

    6: ஏனையவை பிரபாகரன் எப்படி உயிர் தப்பினார் கல்லாறு அணையை எப்படி உடைத்து ஆயிரக் கணக்கான இராணுவத்தினரை கொன்றோம் விடுதலைப் புலிகள் தேள் வியூகம் எடுத்து தாக்கியதில் இலங்கை இராணுவம் புறமுதுகிட்டு ஓடியது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்று மக்கள் தங்கள் உயிரையும் உதறித்தள்ளி இலங்கை இராணுவத்தின் குண்டுகளை தங்கள் மார்பில் ஏந்தினர் இலங்கை இராணுவத்தின் அட்டுழியங்கள் பொறுக்க முடியாது சாரைசாரையாக இளைஞர்களும் யுவதிகளும் புலிகளில் இணைந்தனர் இப்படி எத்தினை திரைக்கதை வசனங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். இதே திரைக்கதை வசனகர்த்தாக்கள் தான் ராமின் கதையையும் சொல்லி இருக்கிறார்கள். அதைத்தான் செந்தில் இங்கு நீங்கள் ஒப்புவித்திருக்கிறீர்கள்.

    புலிகளில் இரு பிரதான அணிகள் உண்டு.
    ஒன்று பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டதாகக் கூறும் நாடுகடந்த தமிழீழம் அணி. தாயகத்தில் உள்ள தலைமைச் செயலகம்.ராம் நகுலன் உருத்திரகுமார்.
    இரண்டாவது பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத புலிகளின் பொருளாதாரத்தை தங்கள் கைகளில் வைத்துள்ள சர்வதேச தலைமைச் செயலகம். – நெடியவன் ரூட்ரவி தனம் ரெஜி

    என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளார் என்பதால் அவர்கள் மீது ஒரு மென்போக்கு எப்பொதும் என்னிடம் உண்டு.

    த ஜெயபாலன்

    Reply
  • naane
    naane

    ரூட் ரவி யார்? .நான் வேறு நாட்டில் இருப்பதால் தெரியவில்லை சொந்தப் பெயர் ஆனந்தகுமாரா?யாராவது தெரிந்தால் அறியத்தரவும்

    Reply
  • VS
    VS

    மாவீரர்தினத்திற்கு தலைவர் வருவார் என்று எதிர்பார்த்த புலிகளின் கனவு நனவாகத விரக்தியில் கனடாவின் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு கனேடிய புலிகள் தீவைத்துள்ளனர்.
    ரொறன்ரோ கிழக்கு கிங்ஸ்ரன் வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரை இலங்கையர்களான சிங்கள மக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது, அந்த விகாரைக்கே கனேடிய புலிகள் பெற்றோல் ஊற்றி தமது மாவீரர்தின சாகசத்தை நிலைநாட்டியுள்ளனர். பெற்றோல் கான் ஒன்றினை கைப்பற்றியுள்ளதுடன் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

    Reply
  • VS
    VS

    ‘வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்’ என்ற சுலோகத்தில் தலைவர் படத்துடன் தலைவரை அவமானப்படுத்த எழுதிய சுலோகம் போல் தெரிகின்றது. நந்திக்கடலில் முழந்தாள் இட்டு வீழ்ந்த வீரத்தையும் மண்டியிட்ட மானத்தையும் சுட்டிக்காட்டுவது ‘ரொம்பவும் ஓவராக இல்லை….?’

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    VS,
    நீங்கள் எல்லாவற்றையும் தப்புத் தப்பாய் புரிந்து கொள்ளுகின்றீர்கள். எங்கள் தலைவர் முருகனுக்கு ஒப்பானவர். அவர் நந்திக்கடலில் எடுத்த அவதாரம்(கோவணத்துடன்) பழனி முருகனின் அவதாரம்.

    Reply
  • senthil
    senthil

    தாயகத்தில் உள்ள போராளிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளார் என்பதால் அவர்கள் மீது ஒரு மென்போக்கு எப்பொதும் என்னிடம் உண்டு./ த ஜெயபாலன்.

    எப்போது மே 18க்கு பின்னரா? முன்னரும் இருந்ததா? அப்படியானால் பிரபாகரனும் தாயகத்தில் தானே இருந்தவர்?? அப்போதும் மென்போக்கினையா கொண்டிருந்தீர்கள்?

    தாயகத்தில் இருந்து நேற்று ராம் அறிக்கைவிட்டது என்றால் ஏன் அரசாங்கம் இன்னமும் மிஞ்சியுள்ள தலைவர் சொன்னதை இனி செயற்படுத்தப் போவதாக சொல்லும் ராமையும் அவர் குழுவையும் அரச படைகள் தேடவில்லை (தேடபோவதில்லை ஒப்புக்கு சொல்கிறேன்) அல்லது நீங்கள் நிறுவன மயப்படுத்திய சிறிலங்கா அரசிடம் தொடர்புகொண்டு ராமின் அறிக்கை பற்றி கேட்டு ஒரு செய்தி வெளியிடலாமே?

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    “தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.

    ‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?

    இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.”

    All those above parts are very important. I humbly request DBS.Jeyaraj and those involved in Groundviews please translate these into English as soon as possible and publish. Heaps of money is wasted to save some psychopaths’ interests and ego. It looks like IMF, international court,interpol and the governments of UK and Sri Lanka have a strong criminal case to consider and ( to prepare a charge sheet). How come these LTTE people have so much black money at their disposal?

    Reply
  • VS
    VS

    பொன்னான கத்தி என்பதற்காக பொக்கிளை குத்தி சாகலாமா?

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //எப்போது மே 18க்கு பின்னரா? முன்னரும் இருந்ததா? அப்படியானால் பிரபாகரனும் தாயகத்தில் தானே இருந்தவர்?? அப்போதும் மென்போக்கினையா கொண்டிருந்தீர்கள்?//
    பிரபாகரனை மட்டுமல்ல புலிகளின் தலைமையை போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. அந்தத் தலைமையை பாரபட்சமாக விமர்சிப்பதிலும் தவறுகள் இல்லை. ஆனால் இவர்களால் தவறாக வழிநடாத்தப்பட்ட புலி உறுப்பினர்களே போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்கிக் கொள்ள முடியும். அவர்கள் மீது எப்போதும் எக்காலத்திலும் மென்போக்கு அவசியமானது.

    Reply
  • Murali
    Murali

    யார் நடத்தினான், யார் அறிக்கை விட்டான், யாருக்கு சேர்த்த காசு போகுது என்று ஒன்றுமே தெரியாமல் புலிகளினதும் , அவர்களின் வெளி நாட்டு கோழைகளின் கண்முடித் தனமான நடவடிக்கைகளால் கொல்லப்பட்டும், உயிர் இழந்த அப்பாவி இளைஞர்களுக்கு செய்த பாவம்களுக்கு பரிகாரம் தேடாமல் அறிக்கை வாசித்தது யார், தலைவர் வருவரோ என்று இன்னும் ஆட்டு மந்தைக் கூட்டம் மாதிரி அலையிற அப்பாவிச் சனங்கள் இருக்கும் வரைக்கும் வெளிநாட்டு வியாபாரம் நல்லைத்தான் நடக்கும். புலிகள் சுடச் சுட ஓடி வந்து வன்னி முகாம்களில் இருக்கும் மக்களை பற்றி யாருக்கு என்ன???

    புலிகளின் சர்வதேச கட்டமைப்பு ஒரு மாபியா கும்பல் என்பதற்கு மாவீரர் தினம் ஒரு நல்ல உதாரணம்.

    Reply
  • palli
    palli

    //முகம் காட்டி புலியா புளியா புண்ணாகோ தவிடோ எனக்கண்டு கொள்ளவும்– செந்தில்//
    என்னனது விளையாட்டு முகம் தேடல் ;
    போட்டு கொடுக்கவா?
    போட்டு தள்ளவா??

    Reply
  • senthil
    senthil

    பிரபாகரனை மட்டுமல்ல புலிகளின் தலைமையை போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. ….ஜெயபாலன்

    போராளிகளை எப்படி வரையறுக்கிறீர்கள். வீரவேங்கை தானத்தில் இருப்பவர்களையா? வீரவேங்கை தான் பின்னர் புலித்தலைமைகளாக மாறி மாறி கடந்த மூன்று தசாப்தகாலமாக முன்னோக்கி நகர்ந்துள்ளது. நீங்கள் இன்னும் கிட்டு, விக்டர், குமரப்பா, பொட்டு, கருணா, பாணு காலத்தில் நின்று புலிகளின் தலைமையை பார்க்கிறீர்கள். புலிகளின் தலைமை சாள்ஸ் அன்ரனி வரைக்கும் மாறிவிட்டது. நீங்கள் சொன்ன போராளிகள் தான் வன்னியில் மக்களையும் சுட்டவர்கள். அப்படியானால் போராளிகளுக்கு தலைமை சொன்னதை செய்தார்கள் எனப்போகிறீர்களா?

    Reply
  • palli
    palli

    செந்தில் நீங்கள் சொல்லும் கருத்து ஜெயபாலனின் கருத்துக்கு வலுசேர்க்கிறது, உங்கள் ஏலாமை புரிகிறது (நீங்கள் சொன்ன போராளிகள் தான் வன்னியில் மக்களையும் சுட்டவர்கள். )
    சாள்ஸ் சாவகசேரி பொலிஸ்நிலையத்தை தாக்க சென்று அதில் தோல்வியும் கண்டு தப்பிஓட முடியாத நிலையில் மீசாலை என்னும் இடத்தில் ராணுவத்தால் கொல்லபட்டார்; ஆனால் செல்லகிளியோ தான் தலமை ஏற்று நடத்திய தின்னைவேலி தாக்குதலை வெற்றிகரமாய் முடித்தார், ஆனால் அவர் முடிவு இன்று உங்களுக்கு அவர் பெயர்கூட நினைவுவராத அளவுக்கு இருக்கே;

    நாம் அனைத்து விடுதலை வீரர்களையும் மதிக்க தவறியதில்லை; ஆனால் பல தறுதலைகளை இதுவரை விமர்சிக்க தவறியுள்ளோம் என்பதே ஜெயபாலனின் கருதாக எனக்கு படுகிறது,

    Reply
  • senthil
    senthil

    பல்லி எனது இயலாமையால் புலிகளுக்கோ அல்லது யாருக்குமோ வலு சேர்ப்பதாக கருதிவிடவேண்டாம்.நான் இதில் எழுதும் எல்லோரிலும் பார்க்க உண்மையான போராளிகளை மதிப்பவன். அதேபோல் புலிகளின் தவறான செயற்பாடுகளுக்கு உங்கள் எல்லோரிலும் பார்க்க மிக தீவிர எதிர்ப்பாளன். அதேநேரத்தில் உண்மையான நேர்மையான கருத்துக்களை தகவல்களை சொல்ல முயல்கிறேன்.அவ்வளவுதான்.

    எனக்கு செல்லக்கிளியையும் தெரியும். சாள்ஸ் அன்ரனி என்ற சீலனையும் தெரியும். பிரபாகரனை தலைவனாக்கி அடித்தளமிட்டதே இவர்கள் இருவரும் தான்.

    Reply
  • senthil
    senthil

    Ex-LTTE leader slams Prabhakaran on Heroes’ Day

    A. Ram, a top LTTE leader now in the custody of the Sri Lankan government, has issued a Heroes’ Day message condemning the way Velupillai Prabhakaran had led the LTTE and the Tamil people, the Tamilnet website reports.

    Ram had blamed Prabhakaran’s “uncompromising policy” for the defeat of the Tamil armed struggle and the annihilation of the LTTE in Sri Lanka.

    “The parallel address, without any explanation to circumstances or citation of evidences, came out with a controversial announcement on the array of heroes. Ram’s address contradicted the usual LTTE perspectives by saying that the human catastrophe was a consequence of the ‘uncompromising policies’ of the LTTE leader V. Pirapaharan,” Tamilnet said.

    The alleged message by Ram has not been put out by any of the Sri Lankan government’s websites.

    Ram asked the International Community to come out with a political solution to the ethnic question and had assured that his organisation (the LTTE) was prepared for ‘any compromise’ for that.

    All countries that “adamantly” helped crush the militant struggle should in the same way ensure the democratic rights of the Tamils, Ram’s address said. He also asked the Sri Lankan government to place before the Tamils, a “solid and permanent solution.”

    A couple of days ago, Ram had made a statement saying that LTTE members and activists in the Diaspora were ignorant of the current field realities .He criticised them for taking a political stand not conducive to the welfare of the 12,000 incarcerated cadre of the LTTE and the Tamil people suffering in various ways in Sri Lanka.

    Tamilnet charged that the Sri Lankan government was running a ‘parallel’ LTTE with the help of Tiger members in its custody. (Express News)
    http://www.lankasri.eu/ta/link.php?33I6C232TS

    Reply
  • Anonymous
    Anonymous

    //சாள்ஸ் சாவகசேரி பொலிஸ்நிலையத்தை தாக்க சென்று அதில் தோல்வியும் கண்டு தப்பிஓட முடியாத நிலையில் மீசாலை என்னும் இடத்தில் ராணுவத்தால் கொல்லபட்டார்; ஆனால் செல்லகிளியோ தான் தலமை ஏற்று நடத்திய தின்னைவேலி தாக்குதலை வெற்றிகரமாய் முடித்தார். palli on November 28,200910:49 pm//
    //எனக்கு செல்லக்கிளியையும் தெரியும். சாள்ஸ் அன்ரனி என்ற சீலனையும் தெரியும். பிரபாகரனை தலைவனாக்கி அடித்தளமிட்டதே இவர்கள் இருவரும் தான். senthil on November 29, 2009 1:32 pm //
    கேள்வி செவியர்கள் ஊரைக் கெடுப்பார்கள் என்பது உங்கள் இருவரினது செய்திகளில் தெரிகிறது.

    Reply
  • palli
    palli

    உங்கள் நினைப்பால்தான் குலனின் கட்டுரை ஒன்று 300 பின்னோட்டத்தை எட்டுகிறது உங்களுக்கு தெரியாது என்பதால் நாமும் குப்பற படுக்க வேண்டுமா.,? இதைதான் சொல்லுவது தானும்;;;;;;;;

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /நவம்பர் 27 – இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்// இதைச்சொல்ல டக்ளஸ் யார்? இவர் எந்தக் கொலையும் செய்யவில்லை என்று சொல்வாரா? இந்தியாவில் சுட்டுவிட்டு ஓடிவந்தது தெரியாதோ?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    வி.எஸ்: பிரபாகரனும் இப்படித்தான் நெல்லியடியில் பஸ்சைக் கொழுத்தி ஆரம்பித்தர். 30 வருடங்களுக்குப்பிறகு கனடாவில் தொடர்கிறது. இனி கனடாவும் சரி. இன்னுமொரு 30வருடத்தின் பின் புதிய பிரபாகரன் கனடாவில் சுடப்படுவார்.
    கேபியை நியாயப்படுத்தியவர் ராம். இந்தக் கேபியும் இராமும் சேர்ந்துதான் பிரபாகரனுக்கு வஞ்சகவலை வீசி அவருடைய சாவை ஒரு சாதாரண நிகழ்வாக்கியவர்கள். இவர்கள் பின்னால் ஏதோ ஒருமாஸ்டர் மைண் நின்றதை பலர் உணரத்தவறவில்லை. இறுதிக்காலங்களில் பிரபாகரனைச் சுற்றி அரசின் வலைப்பின்னல் மிக நெருக்கமாக இருந்தது. இதனால்தான் பிரபா வெளியேற முடியாத நிலை உருவானது. வெளிவிவகாரத் தொடர்வை பிரபா கே.பி யிடம் கொடுத்ததே இவர்களின் நெருக்குவாரங்களாலும் வேறு வழியின்றியுமே. கருணா பிரந்தபின் கருணாவை வைத்து உள்ளே உள்ள ஓட்டைஒடிசல்களைத் தெரிந்து கொண்ட அரசு புத்திசாலித்தனாமாக கடல்தொடர்வை அடைக்கத் தொடங்கி இராணுவாத்தளபாட உள்னுளைவுகளை மட்டுப்படுத்தியது கே.பி மூலம். கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் தெரியும் கே.பி தாயிலாந்தில் முதல்தடவை பிடிபட்டு விடுபட்டதன் பின் புலிகளின் அத்தனை கப்பல்களும் கடலினுள் தாழ்கப்பட்டுன ஏன்? புலிகளின் கப்பல்தான் என்று துல்லிதமாக அதை அறிந்து ஏவுகளைகளை அனுப்ப எப்படி இராணுவத்தால் முடிந்தது. பிரபாவுக்கு செய்தி போகும் பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதம் வருகிறது என்று அது வழியில் தாழ்க்கப்படும். கப்பலினுள் ஆயுதமே இருந்திருக்காது. என்கணிப்பில் கே.பியை வாங்குவதனூடே பிரபாகரன் முடக்கப்பட்டார். மயிலிட்டியைச் சேர்ந்து கே.பி மகாஜனக்கல்லூரியில் படித்துவர். பல்கலைக்கழகம் நுளைந்தவர். பிரபாவுடன் ஒப்பிடும்போது எல்லாவகையிலும் உயர்ந்தவர். அதை அரசு சரியாகப் பயன்படுத்தியது. இலத்தினியல் நுட்பங்கள் உள்ள ஐரொப்பாவில் சர்வசாதாரணமாக சென்று பேட்டிகள் கொடுத்த கே.பி எப்படி எந்தப்பிரச்சனையும் எதிர்ப்புக்களும் இல்லாமல் பிடிபட்டார்? அடுத்து ஜனாதிபதி மகிந்தவாக இருந்தால் கே.பிக்கு மந்திரி பதவி உறுதி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அடுத்து ஜனாதிபதி மகிந்தவாக இருந்தால் கே.பிக்கு மந்திரி பதவி உறுதி. -குசும்பு //

    குசும்புத் தனமாக சிந்தித்தாலும் உங்களின் இந்த கடைசி வரி எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொட்டிவிட்டது. ஏன் கருணாவிற்கு மந்திரிப்பதவி கொடுத்த மகிந்த கே.பிக்கு கொடுக்க மாட்டாரா என குசும்புத் தனமாக நீங்கள் யோசிக்கலாம். அன்று புலிகளை வீழ்த்த மகிந்தவிற்கு கருணாவின் கருணை தேவைப்பட்டது. இன்று கே.பி தன்னைக் காப்பாற்ற மகிந்த அரசிற்கு உண்மைகளைக் கொட்டியே ஆக வேண்டிய நிலை. இதனால் கே.பிக்கு தண்டனைகள் வேண்டுமானால் குறையலாம். மற்றும்படி மந்திரிப்பதவி என்பது அதீத கற்பனை.

    Reply
  • jalpani
    jalpani

    “அடுத்து ஜனாதிபதி மகிந்தவாக இருந்தால் கே.பிக்கு மந்திரி பதவி உறுதி”

    அப்போ தோழரின் நிலை என்ன? பிள்ளையான் கருணா இவர்களின் நிலை என்ன? இணக்கப்பாட்டுடன் செயற்படுவார்களாக்கும்!

    Reply
  • பல்லி
    பல்லி

    :://அன்று புலிகளை வீழ்த்த மகிந்தவிற்கு கருணாவின் கருணை தேவைப்பட்டது.//
    அதேபோல் கேபி யின் உதவியும் அரசுக்கு கிடைத்தது பார்த்திபன்,
    ஆக மந்திரி பதவியோ அல்லது மாவீரர் பதவியோ கே பி க்கு உறுதி; கருனா சிலவேளை கட்சி தலைவர் ஆகலாம்; அப்போ இவர்கள் எல்லாம்
    அவர் சொல்லை கேட்டு ஓடி திரியலாம்; காரனம் மகிந்தா கட்சி தலமை பொறுப்பை இழக்க நேரிடலாம் என கொழும்பு செய்தி;

    Reply
  • பல்லி
    பல்லி

    ///நவம்பர் 27 – இன்றைய தினம் கொலைகாரர்களின் தினம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்// இதைச்சொல்ல டக்ளஸ் யார்? இவர் எந்தக் கொலையும் செய்யவில்லை என்று சொல்வாரா? இந்தியாவில் சுட்டுவிட்டு ஓடிவந்தது தெரியாதோ?//
    இதை பல்லி சொன்னால் பல்லிக்கு பல கல்லுகள், என்ன உலகமிது. உன்மையை சொல்ல முடியாத உலகம்; யாராவது குசும்புவின் கேள்விக்கு
    பதில் தாருங்கள்;

    Reply
  • jalpani
    jalpani

    இந்தியாவில் சுட்டுவிட்டு ஓடிவந்தது தெரியாதோ?//”

    டக்ளஸ் சுட்டு விட்டு ஓடி வந்தாரா உடன் இருந்த உறுப்பினர் சுட்டதற்கு டக்ளஸ் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்றாரா? புலியைப் போல் பேசாதீங்கப்பா! உண்மையை கண்டடையுங்கள்.

    Reply
  • rathan markandan
    rathan markandan

    K.P had anything to do with LTTE’s defeat and the death of Prabha. This rumour that KP is the one who masterminded the demise of LTTE is originally crafted by KP’s opponents in the LTTE’s international wing( Nediyawan, Reggie, santhan etc). They wanted to sideline KP so that they can share the fortunes of LTTE. Unfortunately now some of the well informed and well thought LTTE’s critics also playing into the hands of the rumour that was crafted by Nediyawan gang. Even Eelamaran in his commical Heroes day speech imply that KP is the one who was a informer of SL govt.

    Reply