பிலிப்பைன்ஸ் நாட்டில் மாகாண கவர்னர் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குடாடாட்டு பழங்குடியின தலைவர் இஸ்மாயில்கான் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்ய சென்றனர்.
அப்போது இஸ்மாயில் மனைவி ஜெனாலின், அவரது ஆதரவாளர்கள், வக்கில்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 57 பேர் அம்பாட்டுவான் பழங்குடியின அரசியல் கட்சியினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களில் 22 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை தொடர்பாக பலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 20 பேரை நேற்று கைது செய்தனர். மகுயின்டநாவ் மாகாண கவர்னராக உள்ள அண்தால் அம்பாட்டுவான் மகனும் மேயருமான ஜூனியர் அண்தால் என்பவரது தலைமையில்தான் ஆயுதம் தாங்கிய குழு குடாடாட்டு ஆதரவாளர்களை கடத்திச் சென்று படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் இராணுவத்திடம் சரண் அடைந்தார்.