க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 5 லட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நிவாரணக் கிராமம் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி நீங்கலாக நாடு முழுவதும் 3215 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4 லட்சத்து 05 ஆயிரத்து 257 பாடசாலை பரீட்சார்த்திகளும் எஞ்சியவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவிக்கிறது. 4 லட்சத்து 10 ஆயிரத்து 274 மாணவர்கள் புதிய பாடத் திட்டத்தின் கீழும், 1 லட்சத்து 34 ஆயிர த்து 858 மாணவர்கள் பழைய பாடத்திட்ட த்தின் கீழும் தோற்றவுள்ளனர்.
3215 பரீட்சை நிலையங்களுக்கும் 504 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் சுமார் 70,000 பேர் பரீட்சைக் கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.