இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாகக் கூறுவாராயின் அவருக்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தால், அவருக்கு ஆதரவு வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாதென மனோ கணேசன் கூறினார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (24) மாலை நடைபெற்ற மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை அறிவித்தார்.
எமக்கு உள்ளது ஒரே நாடும் ஒரே அரசும்தான். நாம் தற்போது அரசாங்கத்தில் பங்காளர்களாக இல்லாவிட்டாலும் அரசில் இருக்கின்றோம். அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இனங்களின் தனித்துவத்தைப் பேணும் அதேநேரம் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். ஜனா திபதியின் தலைமையிலான அரசாங்கத் திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், இனப் பிரச்சினை குறித்த உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேல் மாகாண கலை, கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப் பினர் எஸ். இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
VS
Mano Gonason is very good at saying something to attract Colombo Tamil vote bank.
பார்த்திபன்
மனோ கணேசன் எத்தனை தடவைதான் இப்படி மாற்றி மாற்றி கதைப்பார்?? இவங்களெல்லாம் தமிழரைக் காக்கவல்ல அரசியல்வாதியல்ல. சந்தர்பத்திற்கேற்ற பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன்.