வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் ஊவா பகுதிகளிலும் வடமத்திய பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இடைக்கிடையே இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்வதுடன் கிழக்கு கடல் பகுதி சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதியையும் பாதிக்கும் என தமிழ்நாடு வானிலை அவதான மையமும் அறிவித்துள்ளது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறியதாவது:-
வங்க கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங் களிலும், புதுச்சேரியிலும் இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும், ஒன்று அல்லது 2 இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளார்