ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க ஜெனரல் பொன்சேகாவிடமிருந்து சமிக்ஞை

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவாலாக நிறுத்தப்படுவாரென்று பரவலான ஊகத்தின் மத்தியில் தனது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடப்போவதாக நேற்று வெள்ளிக்கிழமை சூளுரைத்திருக்கின்றமை வேட்பாளராக தான் நிற்கப்போகிறார் என்பதை அவர் விரைவில் அறிவிக்கும் சாத்தியத்தை அதிகரித்திருக்கிறது.

படையினருக்கு ஜெனரல் பொன்சேகா எழுதியுள்ள பிரியாவிடைக் கடிதத்தில் நிழல்போன்று உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க எவருக்கும் இடமளிக்காதீர்கள். அத்துடன் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தவும் இடமளியாதீர் என்று படைவீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விலாசமிட்டு எழுதிய கடிதத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.குறிப்பிட்ட சிலர் எம்மை அவமதிக்க முயற்சிக்கின்ற போதிலும் யுத்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் நாங்களே என்பதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் துரிதமாக இழந்து கொண்டிருக்கும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நான் உறுதிப்பாட்டுடன் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன் என்று படையினருக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்றுத் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Thamil
    Thamil

    Sarath Fonseka rented out a house for 1 million per month. A former public servant paying 1 million as monthly house rent, tells how much his son-in-law made through shady defense deals.

    Reply
  • mano
    mano

    இராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு உள்ளதை இது சுட்டிக் காட்டுகிறதோ?

    Reply
  • Byran
    Byran

    யுத்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் நாங்களே என்பதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும்// இன்னமும் தமிழரை கொன்றதை வெற்றியாகக் கொண்டாடும் மனம் மனித உரிமையும் ஜனநாயகமும் பற்றிக் கதைக்கிறாராம். இன்றுவரை தன்பிரச்சினைதான் கதைர். தமிழர் உரிமைபற்றி யுத்தம் ஏன் வந்ததென்று ஒரு சொல் எதுவும் கிடையாது யுத்தத்தில் வென்றது நாம் என்று மார்தட்டி பதவிக்கு திரிகிறார்.

    Reply