உலக சுகாதார நிறுவனத்தால் சிபாரிசு செய்யப்பட்ட ஏ (எச்1 என்1) வைரஸ¤க்கான புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி செய்யப்படவுள்ளன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 258 பேர் இவ் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனை உடனடியாகத் தடுக்கும் நோக்குடன் புதிய ஏ (எச்1 என்1) தடுப்பூசியை இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய்த்தடுப்பு நோய் அறிகுறி தொடர்பான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏ (எச்1 என்1) வைரஸ் பீடிக்கப்படும் நபர்கள் தொடர்பாக வயதெல்லைகள் பற்றி அறிவித்துள்ளது.
கர்ப்பிணித்தாய்மார், 6 மாதங்களுக்குக் குறைந்த குழந்தைகள், முதல் 24 வயதுடையவர்கள், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோமா நிலையிலுள்ளவர்கள் போன்றோர் இவ்வைரஸால் பீடிக்கப்படக் கூடியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் உண்டாதல், மேல் வலி தலையிடி, என்பவற்றுடன் சிறுவர்களாயின் வயிற் றோட்டம், வாந்தி போன்ற நோய் அறி குறிகள் இருப்பின் உடனடியாக டொக்டர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.