மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

maanada_mayiladaஇது என்னடா தலையங்கம் வித்தியாசமாய் இருக்குதென்று யோசிக்காதையுங்கோ. புலம்பெயர் மக்களிடம் வட்டுக்கோட்டையிலும் பார்க்க முள்ளிவாய்க்காலிலும் பார்க்க இதுதான் பொப்பியூலர். விடயத்திற்கு வருவம்.

பிரபாகரனோடை முடிந்தது இராணுவ மாயை மட்டும்தான். அரசியல் இன்னும் சாகவில்லை. ஆனால் அவர்கள் சிங்கள முற்போக்கு சக்திகளைப் பிரித்தார்கள், இந்தியாவைப் பிரித்தார்கள், உலக நாடுகளைப் பிரித்தார்கள் எம் மக்களிடமிருந்து. இதிலிருந்து தமிழ் சமூகத்தை விடுவிக்க வேண்டுமாயின் முதலில் அறிவு ஜீவிகள் தொடக்கம் பத்திரிகைகள் வானொலிகள் ரிவீக்கள் இன்ரநெற்றுகள் வரை உண்மையை பேசுவோம். உண்மையை எழுதுவோம். மனித உரிமைகளை மதிப்போம். சகிப்புத் தன்மையை வளர்ப்போம். அரசியல் நாகரீகத்தை வளர்ப்போம். விமர்சனங்களை செய்வோம். ஆக்கபூர்வமாக தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கி இல்லாமல் எதைப்பற்றியும் கதைப்போம். யாருடனும் கதைப்போம். இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்தது. இதனை வீணடிக்காமல் பயன்படுத்துவோம்.

நிமிர்ந்து வாழ்ந்த சமுதாயம் பிச்சைக்கார நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு உடனடித்தேவை பசித்த வயிற்றுக்கு உணவு, இருக்க இடம், வேலை, பிள்ளைகளின் கல்வி இதை புலம்பெயர் தமிழர்கள் உணருவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்கும் நீண்ட இடைவெளி கொண்டதான உறவு உண்டாகியுள்ளது. யதார்த்தத்தை புரியாமல் தேவையற்ற ஒன்றுகூடல், மறியல்ப் போராட்டம், கவனயீர்ப்புப் போராட்டம், வட்டுக்கோட்டைத் தேர்தல் இவற்றால் அம்மக்களுக்கு என்னத்தைச் செய்யப் போகிறோம்.

முகாமில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்தான் அதில் யாவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் உண்மையில் பல மக்களுக்க போக இடமில்லை. வேலை இல்லை பணம் இல்லை, அவர்கள் எங்கே போவார்கள். எப்படிச் சாப்பிடுவார்கள். அங்குள்ள சிலருடன் கதைக்கையில் முகாமில் உணவும் தங்க இடமாவது கிடைக்குதே என்ற நிலையில் இருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதல்ல உண்மைநிலை. எப்படித் தீர்ப்பது என்பதுதான் உணரப்பட வேண்டியது.

மகிந்தா மீது நாம் தற்சமயம் நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டியது அவசியம். இதுவரை யாருமே செய்யாத அதிரடி மாற்றங்கள் புலிகளில் இருந்து பாதாளக் கோஷ்டிவரை அடக்குகிறார்தான். முன்பிருந்த தலைவர்களுடன் ஒப்பிட்டால் இது சாதனைதான். ஓத்துக் கொள்ளத்தான் வேணும். அரசியல் தீர்வுகள் வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கினம். அப்படி இல்லையாயின் உலகின் சந்தேகப் பார்வை அரசின் மீது விழும். இதனை மழுங்கடிக்காமல் அவர்கள் கையில் பந்தைக் கொடுப்போம். அதை விட்டுவிட்டு ஈழநாடு பாலச்சந்திரனும் ஜிரிவியும் லங்காசிறீயும் ஜபிசியும் தங்களையே விக்கிற மாதிரி கட்டுரையும் செய்தியும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆரம்ப காலங்களில் பாலச்சந்திரன் நாட்டுப் பற்றுள்ளவர்தான். இயக்க பேரணிகளுக்கு உதவி செய்தவர்தான். ஆனால் இப்ப சீமானை மிஞ்சி கட்டுரை எழுதி தன்னையே விற்கக் கூடாது. ஜெகனும் தான் படித்த நல்ல கல்லூரியை நாறடிக்காமல் நடந்தால் நல்லது.

எல்லாவற்றையும் மீறி தமிழக சஞ்சிகைகள் (உதாரணமாக ஆனந்தவிகடன்) பத்திரிகை விற்பதற்காக பிரபாகரன் போய் இப்ப பொட்டு வாறாராம் மாவீரர் உரைக்கு. இதற்கு பேட்டி வேற. பொட்டருக்கு ஏன் பொட்டு பெயர் வந்ததென்றே தெரியாத இவர்கள் அடேல் புத்தகத்தை சாட்சிக்கு வைத்து கதை விடுகிறார்கள். பழைய கூட்டணிகாரருக்கு கையை வெட்டி இரத்தப் பொட்டு வைத்ததால்தான் அவருக்கு பொட்டு பெயர்.

இதைவிட வேடிக்கை வடபகுதி பத்திரிகையாளர்கள் யு என் பி கூட்டணி கூட்டாக முடிவெடுக்க இருக்கினமாம். இதில் உதயன் பத்திரிகை இந்தியாவையும் கருணாநிதியையும் தாழ்த்தி எழுதி எதைச் சாதிக்கப் போகிறார்கள். இவர்களால் 100 கோடி ரூபாய் கொடுக்க முடியுமா திரும்பத் திரும்ப ஏனைய்யா இடைவெளியைக் கூட்டிறியள். பார்ப்பதற்கு செய்தியா இல்லை. இலங்கையில் R K Hottelல் வடிவேலு வடை சுட்டார் என்று எழுதுகிற உதயன் ஏதும் ஆரோக்கியமாய் எழுதலாமே. கருத்து அறிவுப் பஞ்ஞமென்றால் நீங்கள் தேனீயிலிருந்து தேசம்வரை போய்ப் பாருங்களேன்.

எல்லோரையும் அரவணைப்பது என்பதை விட்டுவிட்டு விஜய் ராகுலோட கதைத்தா குற்றம் சூர்யா சிங்களப் படத்தில் நடித்தா குற்றம். (ஆனால் ஆங்கிலப் படம் நடிக்கலாம்.) அவர்கள் எல்லாம் எங்கள்பால் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த சீமான் நெடுமாறன் வைகோவிலும் பார்க்க. இந்த மூன்று பேரும் இந்தியாவில் ஒரு பிரச்சினைகளும் இல்லாத மாதிரியும் சேரியில் சனங்கள் சந்தோசமாக வாழ்கின்ற மாதிரியும் ஏனய்யா எங்களிட்டை வந்து எங்கடை பிரச்சினைகளுக்குள் தலையிடுகிறீர்கள்.

பத்திரிகைகள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும், எழுத வேண்டும். உதாரணமாக தற்போதைய சூழலில் டக்ளஸ் என்ன செய்கிறார் என்ன செய்ய வேணும் என்ன பிழை செய்கிறார் எப்படி அணுக வேண்டும் என்று எழுதலாமே, விமர்சனங்களை செய்யலாமே. புலத்தில் இருந்து அந்த மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது. அந்த மக்கள்தான் தங்களுக்கான தலைமையை தெரிவுசெய்ய வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தங்களாலான பங்களிப்பை செய்யலாம். தற்போதைய நிலையில் சூளைமேட்டு டக்ளஸ் அல்ல இப்ப இருக்கும் டக்ளஸ். 25 வருட அனுபவம் பாதிப்புக்கள் 13 தடவைகள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது மட்டுமல்லாது பங்கருக்குள் வாழவில்லை. தன்னால் முடிந்தவற்றை அங்குள்ளோரிலும் பார்க்க ஏதோ செய்கிறார். நேடியாக யாரும் கதைக்க முடிகிறது. பிரபாகரனையோ பொட்டரையோ அன்ரன் பாலசிங்கத்துடனோ நாங்கள் அணுகத்தான் முடிந்ததா. கனடா பாரிஸ் சுவிஸ் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள் போய் கைத்தொலைபேசியில் படம் எடுத்து இங்குவந்து புலுடா விட்டார்கள். இதைத்தானே இவ்வளவு காலமும் பார்த்தோம்.

லங்காசிறீக்கு செய்தி இல்லாட்டி (புதினம் இல்லைத்தான்) நிருபமாக்கு நாலு பேர் கொடி கட்டினார்கள், கடல்கன்னி கண்டுபிடிப்பு, மாவடிவேம்பு கிராமத்தில் அதிசயம் உங்களுக்கு சொரணையே இல்லையா. தயவுசெய்து இனியாவது மனச்சாட்சிப்படி உண்மையை எழுதுங்கள். உண்மையைப் பேசுங்கள்.

அந்த மக்களை மீண்டும் முகாமுக்குள் கொண்டுபோய் அடைக்காதேங்கோ. அவர்களும் சந்தோசமாக இருக்கட்டுமே. அவர்கள் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் மாதிரி படிக்கட்டுமே. அவர்களும் மானாட மயிலாட பார்க்கட்டுமே. நாங்களும் அதைப் பார்த்த பின்புதானே ஏதோவெல்லாம் எழுதித் தள்ளுறம்.

எங்களுக்கு வட்டுக்கோட்டையும் வேண்டாம். முள்ளிவாய்க்காலும் வேண்டாம். முதலில் கொசுவுக்கு மருந்தடிப்போம். பிறகு கொசோவா பற்றிக் கதைப்போம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

 • palli
  palli

  கட்டுரையாளர் புதிதாக ஏதோ சொல்ல போறார் என பார்த்தால்; அவர் இன்ற அரசியல் போக்கை தனது பாணியில் திட்டிஉள்ளார், பொட்டரின் பேர் பொருத்தம் மானாட மயிலாட நமிதா மாதிரி அழகாக இருந்தாலும் அதுசரியான காரனமாய் இல்லை; அதுக்கு வேறு காரனம் உண்டு, ஆனால் கட்டுரையாளர் மகிந்தாவின் பிறந்தநாள் வாழ்த்துமடலாய் இந்த கட்டுரையை எழுதினாரோ என சில இடங்களில் எண்ண தோன்றுகிறது,

  //மகிந்தா மீது நாம் தற்சமயம் நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டியது அவசியம்.//
  மகிந்தா மீதா? அல்லது இன்றய அரசு மீதா? இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு,

  //அதைப் பார்த்த பின்புதானே ஏதோவெல்லாம் எழுதித் தள்ளுறம்.//
  தங்களை போல் எல்லோரையும் நினைப்பது மகிழ்ச்சியளிக்கிறது;

  //தற்போதைய சூழலில் டக்ளஸ் என்ன செய்கிறார் என்ன செய்ய வேணும் என்ன பிழை செய்கிறார் எப்படி அணுக வேண்டும் என்று எழுதலாமே,//
  எழுதினால் உடனடியாய் கவனத்தில் எடுத்துவிடுவாரா? அப்படியாயின் மகிந்தாவுக்கு வடக்கில் ஒரு கோவில் கட்ட ஏற்பாடு செய்யுங்கள் என தான் எழுத வேண்டும்;

  //சூளைமேட்டு டக்ளஸ் அல்ல இப்ப இருக்கும் டக்ளஸ். 25 வருட அனுபவம் பாதிப்புக்கள் 13 தடவைகள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது மட்டுமல்லாது பங்கருக்குள் வாழவில்லை//
  ஆனால் சங்கரியர் வேறுமாதியல்லவா சொல்லுகிறார், எங்களுக்கும் தோழர் பற்றி தெரியுமல்லே;

  //அரசியல் தீர்வுகள் வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கினம். அப்படி இல்லையாயின் உலகின் சந்தேகப் பார்வை அரசின் மீது விழும்//
  அது விழுந்து பல மாதமாகி விட்டது;

  அருமயான விடயங்களை எழுதி அதில் சில தவறுகளையும் சுட்டிகாட்டி மகிந்தா&டக்கிளஸ் புகழ்பாடி கட்டுரையை முடித்ததால் பல்லியும் உங்களை சீண்ட வேண்டி வந்தது; மற்றபடி தங்களைபோல் எனக்கும் மானாட மயிலாட என்பதுபோல் மகிந்தா ஆட தோழர் பாட என்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மக்கள் பற்றி உங்கள் நிலையில் தான் பல்லியும்;

  Reply
 • Saturn
  Saturn

  ஜெயராசா தேடுவதை பொறுத்து தான் தெரிவதும் இருக்கும்
  உதயன் பத்திரிகையில் வந்த கட்டுரை.
  http://www.uthayan.com/Welcome/afull.php?id=182&L=T&1258634424
  மஹிந்தவும் 3 சகோதரர்களும்!

  இலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை “லக்ருவணி மெதகம” என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய “இருதின” பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.

  இன்று, ‘மஹிந்த சகோதர’ நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் “சகோதர நிறுவனத்தின்” உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும்.

  அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர. அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமைக்குக் காரணம் உள்ளது. இன்று அரசினுள் போன்றே அரசுக்கு வெளியிலும் சகோதர நிறுவனமானது எந்தளவு தூரத்துக்கு வலுவாகக் காலூன்றிக் கொண்டுள்ளது என்பதை நாட்டுக்குப் புலப்படுத்திவிடுவதே அவரது அக்கருத்து வெளிப்பாட்டுக்கான காரணமாகும்.

  மங்கள சமரவீரவின் கூற்று முற்றிலும் உண்மையானதேயாகும். அதாவது அரசும், அரசோடு சம்பந்தப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் என்ற அனைத்தையும் நிர்வகித்து வருவோர் “பரசூட்களின்” மூலம் உயர் பதவிக் கதிரைகளில் வந்தமர்ந்து கொண்டுள்ள சகோதர நிறுவனத்தின் உறுப்பினர்களேயாவர்.

  ஜனாதிபதியின் செலவு
  இந்த அரசைப் பொறுத்தவரையில் ………

  அண்ணன், தம்பிக்களின் அதிகார “ஆதிக்கம்”
  அது இவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்ஷ இவ்விதமான………

  “பொம்மை” அமைச்சர்கள்!
  இது, சகோதர நிறுவனத்தின் செயற்பாடுகளின் ஒரு பக்கம்………………… .

  மன்னராட்சிக்கு செல்கிறோமா?
  இவை மட்டுமல்ல, எதிர்காலத்தில்……………..

  பண்டா குடும்பம் பரவாயில்லை!
  ஏதோ ஒரு தரப்பினர் இவ்வாறு வினாவெழுப்பி……………

  இது போன்று,சகோதர நிறுவனங்களை நாட்டில் கட்டமைத்து அரசைத் தமக்குரிய சொத்தாக உரிமைப் பத்திரம் எழுதிக்கொண்ட அரச நிர்வாகிகளோ உலகில் தாராளமாகவே காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் ரஷ்யாவின் சார் மன்னர் குடும்பமும், பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ் குடும்பமும் அவ்விதமாக சகோதர நிறுவனங்களை நாடளாவிய ரீதியில் கட்டமைத்து நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் விதத்தில் செயற்பட்டுள்ளன. ஆனாலும் இறுதிக்கட்டத்தில் அவர்களும்கூட நாட்டு மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. அவர்களது இறுதி முடிவாக நாட்டு மக்களாலேயே அவர்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். அவைபோன்ற நிகழ்வுகள் எமது நாட்டில் முன்னொருபோதும் இடம்பெற்றதில்லை யென்றாலும்கூட, இந்த வரலாற்றுப் பாடங்கள் எமது நிர்வாகிகளுக்கும் கூட பெறுமதிமிக்க பாடங்களாகும்.

  Reply
 • BC
  BC

  தேசம்நெற் வாசகர் ஜெயராஜா,
  கட்டுரை சூப்பர். வாழ்த்துக்கள். எங்கள் பிள்ளைகள் மாதிரி அவர்கள் பிள்ளைகளும் படிக்கட்டுமே. அவர்களும் மானாட மயிலாட பார்க்கட்டுமே. நியாயமான ஆதங்கம். புலம் பெயர்ந்தவர்களுக்கு மனம் வருமா??

  Reply
 • Ravi
  Ravi

  கட்டுரையாளர் யதார்த்தத்தை மட்டும் அல்லது இன்றைய தேவையையும் மிகவும் இலகுவான தமிழில் எல்லோருக்கும் புரியக்கூடிய விதத்தில் சொன்னதுக்கு பாராட்டுக்கள்.

  Reply
 • pandiyan
  pandiyan

  ஜிரிவி லங்காசிறி ஜபிசி தீபம் போன்ற ஊடக வல்லுனர்களை உங்களால் ஒருபோதும் திருத்த முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அது சோற்றுப் பிரச்சனை. எங்கேயும் சுப்பமாக்கற்றில் போய் பேணி அடுக்கியோ பேக்கரி வெம்மையில் பாண் சுட்டோ சம்பளம் வாங்கி வாழ முடியாது. மக்களின் இரத்தத்தில் (தமிழ்+சிங்கள) தங்கள் வயிற்றை நிரப்புபவர்கள். அவ்வளவு லேசில் இந்த பொய் மூட்டை அவிழ்க்கும் பிழைப்பை விட மாட்டார்கள். எனினும் புலம்பெயர்ந்த மக்களில் இவர்கள் மிகச் சிறிய பகுதியினர் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

  சரி! இவ்வாறானவர்களை எவ்வாறு களைந்து எறிவது? இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் தமிழ் மக்களை குழப்பிக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் வாய்க்கு அவ்வப்போது அரசும் அரசு சார்ந்தவர்களும் அவல் போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதை இலங்கை வரலாற்றை பார்ப்பவர்களுக்கு புரியும்.

  எங்களைப் போன்ற ஏராளமானவர்கள் புலிகளின் கொடுமைகளுக்கு எதிராக போராடி தமிழ்மக்களை சரியான பக்கம் அழைத்து செல்ல முயன்ற போது தொடர்ந்து வந்த அரசுகளின் நடவடிக்கைகளால் தமிழ்மக்கள் புலிகளின் பக்கம் சார்ந்து விட்டார்கள் என்பதே உண்மையாகும். இது ஒரு இடியப்ப சிக்கல் என்பது உங்களுக்கு புரியும்.

  சரி எந்த அடிப்படையில் மகிந்தாவை நம்பச் சொல்லுகிறீர்கள? புலிகளின் தவறுகளும் இந்தியா சீனா மற்றும் புலிகளின் தறுதலைத் தனத்தினால் சீண்டப்பட்டு கோபமடைந்த சர்வதேச அரசுகளும் புலிகளை அழிக்க மகிந்தவிற்கு உதவி செய்தன. இருப்பினும் வெற்றியின் வெகுமதியை அவருக்கு கொடுப்போம். மற்றுமபடி அவர் ஒரு அரசியல் ஆளுமையும் விடாப்படியான உறுதியும் நிறைந்த தலைவர் அல்ல. அவர் ஒரு தீர்வுப் பொதியை வைத்து விட்டு தேர்தல் நடத்தினால் வெற்றியடையலாம். ஆனால் அவர் அங்கனம் செய்ய மாட்டார். தான் கொடுக்கும் தீர்வினால் அதிருப்தி அடைந்து சிங்கள மக்களும் (தமிழருக்கு அதிக உரிமைகள் கொடுத்து விட்டதாக) தமக்கு குறைந்தளவு உரிமைகள் தந்து விட்டதாக தமிழ் மக்களும் வாக்குபோட மாட்டார்கள் என பயப்படுகின்றார். (என் மனசிலே தீர்வு இருக்கிறது. தேர்தலுக்கு பின்புதான் சொல்லுவேன் என்கிறார்) ஒரு தடவை அவரை சந்தித்தபோது (தனியாக அல்ல) இதை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

  எனவே ஜபிசி லங்காசிறி வகையறாக்களை நாம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்ற வேண்டுமாயின் அவர்களின் உணர்ச்சி ஊட்டக் கூடிய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் நம்பும் அரசு உதவ வேண்டும்.

  கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?
  மேலும் சிலர் நான் பந்தை அடுத்த பக்கம் தட்டி விடுவதாக நினைக்கக் கூடும் நினைக்க கூடும். தொடர்ந்து வரும் அரசுகளுக்கு எந்த விதமான அரசியல் ஸ்திரமும் இல்லை என்பதை காட்டவே இதை எழுதினேன். தயவு செய்து தமிழருக்கு ஒரு பிரபாகரனும் சிங்களவருக்கு ஒரு ரோகண விஜயவீரவும் தோன்ற இடம் அளியாதீர்கள். நாடும் மக்களும் தாங்கமாட்டார்கள் என்பதற்காகவே கூறுகின்றேன்.

  பாண்டியன்.

  Reply
 • manimaran
  manimaran

  கட்டுரையாளர் யதார்த்தத்தை மட்டும் அல்லது இன்றைய தேவையையும் மிகவும் இலகுவான தமிழில் எல்லோருக்கும் புரியக்கூடிய விதத்தில் சொன்னதுக்கு பாராட்டுக்கள்.

  Reply
 • chola
  chola

  தயவு செய்து எல்லாரும் ஒருக்கா ஜிரிவி பக்கமும் வாருங்கோ. ஜிரிவி ல ஜெகன்ர கொள்கை விளக்ககங்கள் தாங்கமுடியேல்ல. யாரவாது வந்து பவுத்திரமா மற்றக்கருத்துக்களையும் சொன்னாத்தானே கேக்கிற அப்பாவிச்சனங்களுக்கு கொஞ்சமாவது விளங்கும். சுத்திச்சுத்தி எங்களுக்க நாங்கள் சொன்னா யாருக்கு லாபம்? வீண் சக்தி விரயம்தான். ஒரு அறிவார்ந்த சமூகம்தான் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியும். உண்மையான மக்கள் விடுதலை விரும்பிகளுக்கு ஜிரிவி ஐபிசி போன்ற தளங்களிலதான் வேலை கிடக்கு. எங்கட சோம்பேறித் தனங்களையும் பயங்களையும் மறைக்க தயவுசெய்து காரணங்கள் தேடவேண்டாம்.

  Reply
 • jalpani
  jalpani

  உண்மைதான் சோழா. ஆனால் மனிதர்களுடன் தான் பேசலாம். இல்லையா?

  Reply
 • param
  param

  /எங்களைப் போன்ற ஏராளமானவர்கள் புலிகளின் கொடுமைகளுக்கு எதிராக போராடி தமிழ்மக்களை சரியான பக்கம் அழைத்து செல்ல முயன்ற போது//பாண்டியன் தயவுசெய்து இதை கொஞ்சம் விபரமாக வருவீர்களா.

  ஒரு தடவை அவரை(மகிந்தா) சந்தித்தபோது (தனியாக அல்ல) இதை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது/ இச்சந்திப்பு பற்றிய விபரங்களையும் தருவீர்களா.என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே கேட்கிறேன்

  Reply
 • palli
  palli

  //ஒரு தடவை அவரை சந்தித்தபோது (தனியாக அல்ல) இதை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. //
  பாண்டியன் நீங்க அந்த குழுவா சொல்லவே இல்லை;

  Reply
 • Sarana
  Sarana

  கட்டுரையாளாpன் பெரும் பகுதியோடு ஒத்துப் போகலாம். பாண்டியனின் கருத்தில் ஊடகங்கள் பற்றிய பார்வை சாp. எந்த அடிப்படையில் மகிந்தாவை நம்புவது? நாட்டின் அரசியந்திரம் பாராளுமன்ற முகாமைக்குள் உள்ளது. பாராளுமன்ற ஆசனங்களை இலக்காக வைத்துப் பயணிக்கும் யாருமே வெற்றியில் மண்போட விரும்புவதில்லை. இதற்கு மகிந்த மட்டுமென்ன விதிவிலக்கா?
  மக்களுக்கு முன் உள்ள ஒரே களஞ்சியம் பாராளுமன்றம் வேறு தேர்வில்லை இதன் முகாமைத்துவம் யாரிடம் கொடுக்கப்பட வேண்டும். மூன்று தொpவு தான். இனவெறியும் இராணுவவெறியும் கலந்த கலவையான பொன்சேகாவிடமா? காலத்தக்கக் காலம் இனவெறிக் கொலைகளை ஆரங்கேற்றித் தேர்தல் வெற்றியைத் தேடிக்கொண்டு முழு நாட்டையும் விற்றுப் பிழைப்பு நடத்திய யூஎனபி யிடமா? தேசியத்தையும் சிறு சிறு அபிவிருத்திகளையும் செய்துகொண்டு துணிச்சலாக ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் மகிந்தாவிடமா? முகாமைத்துவம் சேரவேண்டும்?

  Reply
 • palli
  palli

  சரனா உங்கள் நிலமை புரிகிறது; ஆனால் பொன்சேகரா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் மிகஉயர் பதவியில் இருந்தவர், ரணில் கட்ச்சியோடும் குப்பை கொட்டினோம்; ஆனால் உங்கள் கட்டிட காரன் வந்த பின் புலியை அழித்தார் உன்மைதான், அதுக்காக தமிழர் இழந்த உயிர்கள் எத்தனை என்பது இன்று வரை தெரியாது, இறந்த ராணுவம் கூட தொலைந்து போனார்கள் என கணக்கு காட்ட படுகிறது; இத்தனைக்கும் காரனம் குடும்ப அரசியலேதான், புலி அழிவுக்கு மகிந்தாதான் காரனம் என யாரும் சொன்னால் அது தவறாக எனக்கு படுகிறது, (குசும்பு இது கவிதையல்ல)

  (1) புலியின் தான் என்னும் ஆணவம்:
  (2) தம்மை யாரும் வெல்ல முடியாதென்னும் நொம்பிக்கை;
  (3) கருனாவின் வெளியேற்றம்;
  (4) கருனாவிடம் ராணுவம் பெற்ற புலி ரகசியங்கள்;
  (5) விமான படையென பட்டம் விட்டது;
  (6) வன்னியில் போய் கூடு கட்டியது;
  (7) பொட்டரின் பொல்லாப்பான உளவு;
  (8) புலம்பெயர் புண்ணாக்குகளின் புளுகு;
  (9) தமிழ் செல்வனின் மறைவு;
  (10 இந்தியாவை பகைத்தமை:
  இவைகளுடன் இந்த புலம்பெயர் இளசுகள் ஆடிய சதிராட்டம், விரதம்; விறகு வெட்டு; வேலியடைப்பு இப்படி பல அத்துடன் ராணுவத்தின் இழப்பு இதை வைத்து சொல்லுங்கள் மகிந்தாவின் குடும்பமா தமிழரை காப்பாற்றியது, கான்ஸர் வருத்தகாரன் வயுத்து வலியால் செத்தான் என்பதுபோல் புலிக்கு மகிந்தா வைத்த வேட்டு, போராட்ட வெற்றி தோல்விக்கு அப்பால் நாட்டையும் மக்களையும் (அனைத்து) நேசிக்காவிட்டாலும் வழம்பெற நினைப்பவர்களே நாட்டின் பொறுப்பில் இருப்பது அவசியம், குடும்ப பதவியில் மோகம் கொண்டவர்களோ அல்லது பழி தீர்பவர்களோ வருவது நாட்டுக்கு உகந்ததல்ல, இது மகிந்தாவுக்கு மட்டுமல்ல பொன்சேகராவுக்கும்தான்,

  Reply