வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை

Paramakumarடிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.

இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.

ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.

இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • senthil
    senthil

    ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்……இவரது ரூட்டில் பல முறைகேடுகள் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இவரது நிர்வாகதிறன் இன்மை காரணமாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பொறுப்பிலிருந்த ஒருவர் கீழ்நிலையில் வேலை செய்வதை விரும்பாது விலகி வெளிநாடு வந்தவர். கஸ்ரோ குழுவினரால் அனைத்து வெளிநாடுகளும் பொறுப்பெடுக்கப்பட்டபோது கஸ்ரோவால் பிரித்தானியாவில் தத்தெடுக்கப்பட்டவர். இவரது ஆலோசகராக சிதம்பரநாதன் உள்ளார். இளம்பருதி (சரணடைந்துள்ள) இவரது சகலன்.

    பிரிஎவ் உம் இரண்டு துண்டாக பிளவுபட்டுள்ளது. சென் எதிர் சுரேன் அணியாக இயங்குகிறது. சென் நாடுகடந்த தமிழீழத்துக்கு ஆதரவு. சுரேன் எதிர்ப்பு. ஆனால் குளோபல் தமிழ் போரத்தில் சேர்ந்துவிட்டார்.

    Reply
  • Thirumalai Vasan
    Thirumalai Vasan

    20 வருடங்களுக்கு முந்தி யாழ்ப்பாணத்தில் நடத்திய ரூட் ரவியின் அடாவடித்தனங்களை புலம்பெயர்ந்த பின்னரும் ஒரு ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த லண்டனிலும் தொடர்வாராயின் விளைவுகளை பாதிக்கப்பட்ட சனததிடம் இருந்து பாரதூரமாக எதிர்பார்க்க வேண்டிவரும். யாழ்ப்பாணத்தில்தான் பத்திரிகைகளை வெருட்டி வழிக்குக் கொண்டு வந்தார்கள். கிருஷ்ணானந்த சிவத்துக்கு மொட்டையடித்து அவரது வீட்டிலேயெ வீட்டுக்காவலில் வைத்தார்கள் அதை இங்கும் தொடரலாம் என்று கனவ காண்கிறார் போலும். ரூட் ரவியினதும் அவரது அடாவடிக் கூட்டத்தினரதும் அராஜகப் போக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். சாந்தனுடன் துணைக்கு அனுப்பலாம்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற நாடக அரசை நோர்வே தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடுகடந்த தமிழீழத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை 17,333 (83%) நோர்வே தமிழ்மக்கள் நிராகரித்துள்ளனர். நோர்வேயில் 27,000 தமிழ் மக்கள் வாழ்கின்றபோதும், தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் 20,000 தமிழ் மக்களே வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.. நேற்று முன்தினம் இடம்பெற்ற புலிகளின் நாடுகடந்த தமிழீழத்திற்காக தேர்தலில் 2,677 (17%) தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
    நோர்வேயில் தமிழ்மக்களை புலிகளின் ஒருபகுதியினர் மிரட்டியதனாலேயே தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை என வாக்களிப்பை நடாத்திய புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகளிற்குள் முறுகல்நிலை உள்ளதென்பதை வெளிப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்ட இவ் அறிவிப்பானது நாடு கடந்த தமிழீழம் என்பதை ஆதரிக்கும், புறக்கணிக்கும் மக்களுக்கு தலைவலியை கொடுக்கும் விடயமாகவே அமைந்துள்ளது.

    Reply
  • watch
    watch

    தமிழர்களெ, எப்ப ஒற்றுமைபட்டு எரிச்சல் புகைச்சல் இல்லாது வாழப் போகிறிங்கள்!!

    Reply
  • Sampanthan
    Sampanthan

    Jeyabalan I would like clear some points. You mention your report TNA also participate above meeting. The TNA is an amalgam of four parties namely TELO, EPRLF, ACTC and the TULF.There is no one from TELO didn’t participate any of BTF meeting. We are in the land (North & East of Srilanka) we know what our people needs are.

    Thankyou

    Sam
    UK TELO Branch

    Reply
  • karuna
    karuna

    Hi sam welcome the telo member Mr Charles is running the BTF do not forgot this charles come and gave a spech in the srisaba meeting in the convey hall – what a nonsence you are telling to us.

    how long your telo with the LTTE who killed your leader now the LTTE is gone still LTTE spy within your party if you don’t know this ask sivajilingam.

    Reply
  • David
    David

    Mr Sam do not forgot Vaddukodai Para KADAVUL also telo member – Mr Para went to thimpu talks so you have peoples in vaddukodai group and the BTF also from LTTE what you all planning next vanni trouble

    Reply