“மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
தமது கொள்கை விளக்கக் கோவையினை ஐக்கிய தேசிய முன்னணியினர் மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.