கல்குடாவில் அரிய ‘காட்டு அணுங்கு’ விலங்கினம்

111109batti.jpgகல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி தெரிவித்தார்.

111109batti.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Constantine
    Constantine

    Its ok as long as its not a Tiger

    Reply
  • விசுவன் 1
    விசுவன் 1

    Its ok as long as its not a Tiger/Constantine

    Sorry its a tiger see carefully, stripes, tail and …NO HEAD!

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    அண்மைக்காலமாக பல புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தெற்குப்பகுதியில் டைனோசார்கள் இருந்ததிற்கான ஆதாரங்களும், இந்தியாவிலும் ஆதிக்குடிகள் எரித்தீரியாவில் மட்டுமல்ல போன்ற செய்திகளும் வெளிவருகின்றன. இந்த எறும்புதின்னியும் கூட பார்வைக்கு டைனோசார் இனத்தின் உறவுகள்போல் இருக்கிறது. ஏற்கனவே கவரகொயா, முதலைகள் இலங்கையில் உள்ளன. இந்த புதிய விலங்கும் புதிய தகவல்களை வெளிக்கொணரலாம் நசனல் ஜியோகிராபிக்கல் ஆய்வு நிறுவனத்தினரிடம் இது பற்றி தெரியப்படுத்தப்படுத்தியுள்ளேன் விபரங்கள் தெரியவரின் அறியத்தருகிறேன்.

    Reply
  • sumithra
    sumithra

    இப்படத்திலுள்ள பிராணியை நான் சிறுவயதில் ஏற்கனவே மடுப்பகுதியில் பார்த்திருக்கிறேன். அச்சமயம் அதை அவர்கள் “அழுங்கு” என்று அழைத்தார்கள். அதற்கான ஒரு சிறு கதையே இருக்கின்றது. ஆனால் எதற்காக தற்போது அதை “அணுங்கு” என்று பெயரிட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லையே. இது எவருடைய அழுங்குப்பிடி—–பிராணி ஒன்றுதான் பெயர்கள் மட்டும் மாறியுள்ளதேன்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சந்தேகப்பட்டு நானும் சொல்லாமல் விட்டுவிட்டேன். இது “அழுங்கு”கே தான். 1969-70 இடைப்பட்ட காலப்பகுதியில் தர்மபுரத்து வேட்டைக்காரருடன் இரவு வேட்டைக்கு போனபோது வெளிச்சத்திற்கு கண்குடுக்க வெடி வைத்தார். சுட்டபிறகுதான் தெரிந்தது அழுங்கென்று.
    இதன் செதில் எல்லாம் சிப்பி வடித்தில் இருக்கும். இதன் செதிலை(சிப்பிவடிவம்) ஓடும் வாய்காலில் விட்டால் எதிர்த்து ஓடும் என்றார்கள். சீமெந்து வாய்காலில் ஓடவிட்டு பார்த்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை.

    Reply