பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் தமக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கக்கோரி இன்று முதல் சட்டப்படி வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து மேல்மாகாண ஆளுநரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலானா கருத்து தெரிவிக்கையில் “அரச நிறுவனங்களில் சட்டப்படி வேலை செய்யும் பேராட்டங்களில் முன்னின்று செயற்படுபவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். இப்போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன.