20க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக இணைத்து மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டு பற்றிய விடயங்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது. நவம்பர் 12ல் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இம்மாநாடு இறுதி நேரத்தில் சுவிஸ்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். இம்மாநாடு பற்றிய பின்னணிகளை அறிந்திராத நிலையில் தங்கள் கட்சித் தலைவர் அதில் பங்கெடுப்பது ஐயத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.
இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வருகின்றது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர்.
ஒரு சாதாரண சட்டத்தரணி 20க்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கட்சிகளுக்குமான விமானச்செலவு, ஒரு வாரத்திற்கான ஹொட்டல் செலவு என்பவற்றை பொறுப்பேற்பது என்பது அதன் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இம்மாநாடுக்குப் பின்னணியில் இந்திய, இலங்கை அரசுகளோ அல்லது புலிகளின் பினாமிகளோ பின்நிற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ரிஎம்விபி உறுப்பினர்களான மனோகரனும் கிருஸ்ணனும் பின்நிற்பதால் இம்மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு உள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
மாநாட்டின் நோக்கம் மாநாடு யாரால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது போன்ற அடிப்படைத் தகவல்கள் இன்றி கட்சிகள் இம்மாநாட்டில் கலந்தகொள்ளுமா என்ற சந்தேகங்களும் உள்ளது.
இதற்கிடையே நவம்பர் நடுப்பகுதி வார விடுமுறையில் இலங்கையரசு புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகெங்கும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கந்தவனமாஸ்டர்
யார் குத்தி எண்டாலும் அரிசி ஆகட்டும் புலி எதிர்த்த எல்லாரையும் அவங்கள் என்னண்டு கவனிக்கிறது. அவர் இவருக்கு திருப்த்தி இல்லாவிடிலும் ஒத்துபோய் வெல்லவேணும் புலியிட்டை முப்பது வருஷம் கேட்டு கேட்டு பார்த்து ஒண்டும் தர அவை சம்மதிக்க இல்லை. அரசுக்கு நாங்கள் நேரம் குடுக்க வேணும். இப்ப தானே ஆறு மாதம் போயிருககு. டக்லஸ், வரதர் எண்டு எத்தினை பேர் எவ்வளவு காலமா பொறுத்து இருந்தவை. கிருஷ்ணன் ஒரு பழைய புள்ளி, விஷயம் தெரிந்தவர் நாங்கள் தனிப்பட சிக்கலை விட்டு விட்டு அரசு எத்தினை குழு, கூட்டம் எண்டு வைத்தாலும் ஒத்து போகவேண்டும். அவங்களுக்கு எங்களிலை நம்பிக்கை வரவேண்டும்.
kovai
எரிகிற வீட்டில பிடுங்கிறது ஆதாயம். புலி எண்டு சொல்லி, இப்ப யாராலும் புடுங்க ஏலுமே. ஒரு சாதாரண சட்டத்தரணி உழைச்சுட்டுப் போகட்டன். டக்லஸ், வரதர், கிருஷ்ணன் என்ட பழைய புள்ளிகள், மகிந்த மாத்தயாவிட்ட வெள்ளி பாக்கட்டன். கடல் வத்தக் காத்திருந்தவையின்ர கனவும் பலிக்கட்டுமன்.
santhanam
குலன், பல்லியிடம் முன்னால் விட்டு பின்னால் சுட்டவர்களின் லிஷ்ட்டை எடுக்க ஒரு கட்டுரை எழுதவும்
மகுடி
அரசுக்கு எதிரானவர்களால் நடத்தப் படுகிறாதா? இல்லை, அரச செலவில் நடத்தப்படுகிறதா? நமக்கும் அழைப்பு வருமா?