வன்னிப் பிரதேசத்தில் யோகபுரம், துணுக்காய் ஆகிய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கும் என வடபிராந்திய பிரதி அஞ்சல் மா அதிபதி வீ. குமரகுருபரன் தெரிவித்தார்.
மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகள் வழங்கும் நோக்குடன் தபால் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களிலும் தபால் சேவைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு தபால் அலுவலகங்கள் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ளன. இதற்கு 160 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப் பட்டுள்ளது.