கனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார்.