2011ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. சென்னையில் இந்தியா ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் நடக்கிறது. 10 வது உலக கோப்பை ஒரு நாள் கிரிக் கெட் போடியை 2011ம் ஆண்டில் நடத் தும் உரிமையை ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பெற்றன.
பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதால் அந்த நாடு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இழப்பீடு தொகை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் இந்தியாவுக்க கூடுதலாக 8 ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது மொத்தம் 49 ஆட்டங்களில் இந்தியாவில் 29 ஆட்டமும், இலங்கையில் 12 ஆட்டமும், பங்களாதேஷில் 8 ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை முடிவு செய்ய உள்ளூர் போட்டி அமைப்பு குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என். சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், மொகாலியில் ஒரு அரை இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், அகமதாபாத்தில் ஒரு கால் இறுதிப் போடி மற்றும் 2 ஆட்டங்களும், டில்லியில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடைபெறுகிறது.
சென்னையில் இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், பெங்களூரில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், நாக்பூரில் இந்திய அணி மோதும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், கொல்கத்தாவில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.