இலங்கையில் தேசிய போக்குவரத்துக் கொள்கையை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்வைத்திருந்தார்.
உள்ளுரில் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் சேவையில் பாதுகாப்பு, வருமானம் என்பவற்றை உறுதிப்படுத்தல் மற்றும் சூழலுக்கும் நாட்டின் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை முடிந்தவரைக் குறைத்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாகும்.