ஏறாவூர் – மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் போஷாக்கு மாத்திரை உட்கொண்டதால் சுகவீனமடைந்த மேலும் 15 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மீராகேணி பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போஷாக்கு மாத்திரைகள் உட்கொண்டதையடுத்து சுகவீனம் அடைந்ததால் இப்பாடசாலையைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் புதன் கிழமை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தனர். சிகிச்சையின் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.
எனினும் சிகிச்சை பெற்றுத் திரும் பிய 09 மாணவர்கள் புதன்கிழமை இரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று பாடசாலை ஆரம்பிக்கப் பட்டபோது மேலும் 06 மாணவர்கள் மயக்கமுற்றதையடுத்து ஏறாவூர் மாவ ட்ட வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக இவர்கள் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் பாடசாலையில் மீண்டும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை, போஷாக்கு மாத்திரை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கமளிப்பதற்காக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். இஸட். ஆப்தீன், அதிபர் கே. காலிதீன் உட்பட பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எனினும் கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மாணவியொருவர் திடீ ரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.
இதனால் இப்பாட சாலையில் நேற்று இரண்டாவது நாளா கவும் கல்வி நடவடிக்கைகள் பாதிக் கப்பட்டன. பிரதேசத்தில் பதற்றநிலை நீடித்தது. பாடசாலை வளாகத்தில் பொலி ஸாரும், இராணுவத்தினரும் கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர். இதேவேளை, சுகவீன மடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட மாணவர்களை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அ
மீர்அலி, வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெயினுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வீ. அமீர்தீன் ஆகியோர் வைத்தியசா லைக்குச் சென்று பார்வையிட்டனர்.