‘இலங்கை முகாம் வாசிகள் 58 000 பேர் அடுத்த வாரம் விடுதலை’- தமிழக எம்பிக்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதி

151009.jpgஇலங்கையில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் ஐம்பத்தெட்டாயிரம் பேர், அடுத்த 15 நாட்களுக்குள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10 ஆம் திகதி இலங்கை சென்றனர். அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் உள்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்கள்.

சென்னை திரும்பிய அவர்களை, விமான நிலையம் வரை சென்று தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். பின்னர், இலங்கைப் பயணம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள். அத்துடன், அங்குள்ள நிலவரம் குறித்து முதல்வரிடம் நேரிலும் விளக்கிக் கூறினார்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களில், முதல் கட்டமாக ஐம்பத்தெட்டாயிரம் பேர் அடுத்த 15 தினங்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், அந்தப் பணிகள் நாளை முதல் துவங்கும் என்றும் எம்.பி.க்களிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • appu hammy
    appu hammy

    The C M of Tamilnadu is well known for twisting and turning.It is doubtful as to what report he is going to present to the central govt. He will obviously manupulate the so called report to suit those in Delhi and of course the SL govt. As far as the Idps are concerned, they already have lost any faith in his efforts so far. The tamil people of Sri lanka are not going to get anything constructive from the Indians.

    Reply