தென்மாகாண சபை தேர்தலின் பின்னர் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தென் மாகாணசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, நிசாந்த முதுஹெட்டிகம, மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை இன்று தீர்மானித்துள்ளது.
தமக்கு அதிக விருப்பு வாக்குகள் கிடைத்த போதும் மேலிடத்து உத்தரவு காரணமாக தமது வாக்குகள் ஏனையவர்களுக்கும் பகிரப்பட்டதாக முதுஹெட்டிகம குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக கூறியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், தம்மீது ஒழுங்காற்று விசாரணை நடத்தப்படுமானால் அதற்கு உரிய வகையில் பதிலளிக்கப் போவதாக முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.