தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொழும்பில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்பிற்கும் இரு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
வுழமையாக மேற்கொள்ளப்படும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 6.50 ற்கு பயணமாகும் விசேட ரயில் மறுநாள் அதிகாலை 3.25 மணியளவில் பதுளையை சென்றடையும்.
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்புக்கான விசேட ரயில் சேவையொன்றும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.