இலங்கை அரசாங்கம் – இராணுவத்துக்கு கூடுதல் நிதி

இலங்கையின் நாடாளுமன்றம், இந்த வருடத்தின் மீதமிருக்கும் காலப்பகுதிக்காக, அந்த நாட்டு இராணுவத்துக்கு மேலதிகமாக 20 வீத நிதியை ஒதுக்கியுள்ளது.

நீண்டகாலமாக நடந்த போர், கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும், இராணுவத்துக்கு இந்த நிதியூக்கம் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

இந்த வருடத்தில் என்று மில்லாத வகையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 160 கோடி டாலர்களுக்கு மேலதிகமாக 30 கோடி டாலர்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது

இந்த நிதிக்கு நாடாளுமன்றம் தனது அங்கீகாரத்தை வழங்கியதுடன், போர் முடிந்து 5 மாதகாலம் முடிந்த பின்னரும், மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகாலச் சட்டத்தை நீட்டித்துள்ளது.

இராணுவத்தின் எரிபொருள் மற்றும் மருத்துவ விநியோகத்துக்கும், இறந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினருக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்காகவும் இந்தக் கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *