பிரதிக் கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று; விரைவில் வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது.
வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் கீழ் வட மாகாண கல்வி மேம்பாடு குறித்து ஆராய்வதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் குழு எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்கிறது.
யாழ்ப்பாணத்திற்கான இலவச நூல்வெளியீடு எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாந்திகதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற் கொள்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகுமென்று பிரதியமைச்சர் கூறினார்.