தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை அவசியமில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி

140909karuna.jpgதமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு அகதிமுகாம்களில் சுமார் 200,000 இலங்கைத் தமிழ்அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது நிலைமைகள் சுமூகமான சுழ்நிலை காணப்படுவதாகவும்,  இதனால் இந்திய மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லை என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கைக்கு மீள அழைத்துக்கொள்ள இதுவே சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • rajani
    rajani

    அதை சொல்வதற்கு இவர் யார். அதை அங்கெ இருப்பவரெல்லோ முடிவு எடுக்க வேண்டும். இவற்ர குடும்பத்துக்கு மட்டும் இங்கிலாந்தில் குடிஉருமை தேவை.

    Reply
  • Raghavan
    Raghavan

    இதை விட சிறந்த கருத்தை வேறு எவராலும் கூறமுடியாது. புலத்தில் உள்ள மக்களுக்கும் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கக் கூடாது என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

    Reply
  • Thaksan
    Thaksan

    இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே. (உமது முன்னாள் பாசையில் சொல்வதானால் சிங்களத்தின்) ………. ………. அடிமையாகி தற்போதைய எசமானனின் கூற்றுக்கு பெய்யென பெய்யும் அடிமையாக ….. உமக்கும் தமிழர்களின் வாழ்வுக்கும் இனியென்ன சம்பந்தம்??? எதிரியென > துரோகியென தீர்ப்பளித்து எத்தனை உயிர்களை காவுகொண்ட உமது வாழ்வுமொரு வாழ்வா? வார்த்தையும் ஒரு கேடா???

    Reply
  • மாயா
    மாயா

    கருணா , படிக்காமல் புலிகளில் சேர்ந்தவர். இவருக்கு இந்தியாவின் வாழும் குழந்தைகளது கல்வி தேவை குறித்துக் கூட புரியாது. இவர் நாட்டை விட்டு , லண்டனுக்கு சென்றது எதற்கு என்பதை தெரிவிக்க வேண்டும்? அத்தோடு நில்லாது, அவர் முதலில் தனது மனைவி குழந்தைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். அதன் பின்னர் இதை சொல்ல தகுதியானவராவார்.

    Reply
  • appu hammy
    appu hammy

    THERE IS NOT A SINGLE MINISTER WHO IS AT LEAST SYMPATHATIC OF THESE SUFFERING PEPOLE.THEY ARE ALL WORRIED ABOUT NEXT GENERAL ELECTION AND HOW TO MAKE MAKE MONEY USING THESE SUFFERING HUMANS.

    Reply
  • Ralahammy.P
    Ralahammy.P

    Karuna, You left LTTE for your own benefit. You don’t know/have any political knowledge. How can you to talk about the SL Tamils in India. They should decide for themselves. Already 300,000 are suffering because of people like you and you want more to suffer. How can you even think properly, when you are up to all sorts of corruption.
    I am not sure whether you read the EU’s report in the weekend. I think people who are accused of crime away from preaching others util they are proofed they are innocent. Do you want more people in the IDP Camp.You think 200,000 not enough ? Do you want more Tamil people to be killed ? First release the people in the Camp ?
    Then president pramadasa time you killed in one day 600 policemen. thousand and thousand.of tamils and musilem you have to go to jail for life time.

    Reply
  • Meinike.W
    Meinike.W

    Here you go. Why do you open your mouth when your hands are bloodstarined with the murder of thousands of innocent civilians and police cops? When you are out roaming with tax payers money to provide security, how many innocent civilians are still yearning for freedom in the IDP camps. Why did you try and seek asylum and citizenship in the UK? You could have stayed in SL. Remember to worship your god every morning and night that you killed many people and whether a ministerial portfolio is justified to you. You are deceiving yourself. Whom can we blame? Those who kept you in this position.

    Reply
  • S.Sriranjan
    S.Sriranjan

    Minister Vinayagamoorthy Muralitharan needs bullet proof vehicle to travel.But asking Indian government to send back the Tamil refugees.First of all,why shouldn’t he himself bring back his own family from London,England?

    Reply
  • jimmy
    jimmy

    இவ்வளவு நாட்களாக இந்த அகதிகள் பற்றி எதுவுமே பேசாத கருணா இன்றுமட்டும் என்ன அக்கறையாம்? கருணா போன்றவர்கள் மகிந்தாவின் ஆட்சி முடியும் வரையும் இப்படி காலம் ஓட்டலாம் பின்னர் ஒருநாள் சாதாரணமானவர்களாகும் போது உங்கள் கடந்நதகாலம் பற்றிய மறு பரிசீலனை தேவைப்படும்.

    Reply
  • mano
    mano

    இலங்கையின் பிரஜைகளான எந்தவொரு குடிமகனும் இலங்கையில் எந்தப்பாகத்திலும் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ வழி கிடைக்குமென்றால், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தேவையேயில்லை. உண்மையாகவே இலங்கையில் எல்லாப்பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து பலவசதிகளோடும் வாழ்ந்து வருவது உண்மைதான், ஆனால் சகல தமிழ் பகுதிகளிலும் சிங்களமக்கள் வாழ விரும்பினால் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? இந்நிலை என்று மாறுமோ அன்றுதான் நம்நாடு சொர்க்கபூமி. அதன்பின்பு ஏன் அடுத்தநாட்டில் குடியுரிமை? இலங்கையில் இல்லாதது எதுவும் இந்தியாவில் இல்லை.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    அம்மான் விடாதேங்கோ உப்படியே எல்லாத் தமிழரும் வெளிநாட்டு சிற்ரிசன் எடுத்து போயிட்டா நம்ம பிழைப்பு என்னாவது.

    Reply
  • மகுடி
    மகுடி

    இலங்கைத் தமிழனில ஒரு நல்ல குணம். அவன் வெளிநாட்டில சிட்டிசன் எடுப்பான். வெளி நாட்டில படிப்பான். தன் இன பந்தத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவான். ஆனால் , தன்னைத் தவிர, எந்த தமிழனையும் நல்லா வாழ விட மாட்டான். மடையரை வச்சு தன் பிழைப்பை நடத்துவான். தமிழரசுக் கட்சி தொடக்கி புலிகள் மட்டுமென்ன இப்ப உள்ள தமிழர் கட்சிகளும் அமைப்புகளும் கூட அதைத்தான் செய்யினம்.

    தமிழர்களே அடுத்த சகோதர மொழிகளை படிங்கோ. அடுத்தவனோடு சேர்ந்தாவது உங்களை உயர்த்திக்கோங்கோ. இல்லையென்றா , இவங்கள் உங்களை படிக் கல்லாக்கி கொண்டு, ஏறி அவன் மட்டும் உயரத்துக்கு போவான். இவங்களை விட்டு வெளியேறி , வேறு இனங்களோடு சேருங்கோ. இல்லையென்றால் உங்களுக்கு விமோசனமே கிடைக்காது. சும்மா தமிழ் : தமிழ் கோஸம் இனியும் வேண்டாம்.

    Reply