யாழ் தேவி ரயில் சேவை யாழ்ப்பாணம் வரை விஸ்தரிப்பு

train0000.jpgயாழ் தேவி ரயில் சேவையை யாழ்ப் பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன்துறை வரையான 14 ரயில் நிலையங்களை மீளமைக்கும் பொறுப்புகள் அரச மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இதன்படி புளியங்குளம் ரயில் நிலைய பகுதிகளை அமைச்சர் ரி.பி. ஏக்கநாயகவும் மாங்குளம் ரயில் நிலையத்தை முதலமைச்சர் பேர்டி பிரேமலாலும் ஆனையிறவு ரயில் நிலைய பணிகளை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தும் சாவகச்சேரி ரயில் நிலைய பணிகளை அமைச்சர் நிமல் சிரிபாலவும் ஏற்றுள்ளனர்.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான 154.87 கிலோ மீட்டர் தூரத்திற்கு 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றை நிர்மாணிக்கும் பணிகளை 27 நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதோடு 14 நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்பந்தக் கடிதங்கள் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலஹப் பெருமவினால் வழங்கப்பட்டது.

இதன்படி வவுனியா ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணியை களனி கேபள் கம்பனி யும் தாண்டிக்குளம் ரயில் நிலைய பணி களை ரயில்வே திணைக்களமும் ஓமந்தை ரயில் நிலைய பணிகளை சமூக சேவைகள் பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிரியும் புளியங்குள ரயில் நிலைய பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி. ஏக்க நாயக்கவும் மாங்குள ரயில் நிலைய பணிகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவும் ஏற்றுள்ளனர்.

ஏனைய ரயில் நிலையங்களை பொறுப் பேற்றுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு முறிகண்டி-இன்டர்நெசனல் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், கிளிநொச்சி-சிலோன் புகையிலை கம்பனி, பரந்தன்-கைத்தொழில் அமைச்சர் குமார் வெல்கம, ஆனையிறவு-கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த், பலாலி-மக்கள் வங்கி, எழுதுமட்டுவால்- திம்பு லாகல பிரதேச செயலகம், மிருசுவில்- இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட் டுத்தாபனம், கொடிகாமம்- வீ ஸ்ரீலங்கா, சாவகச்சேரி- சுகாதார அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *