ரணிலை குறை கூறி வந்த மங்கள இன்று அவருடனே இணைந்துள்ளார் – தகவல் ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு

anura_priyadarshana_yapa.jpgகடந்த காலங்களில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கமீது குறை கூறி வந்த மங்கள சமரவீர இன்று அவருடனேயே இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்;. அவர் தொடர்ந்து கூறுகையில். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மங்கள சமரவீரவும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அவர்களின் கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை.

இன்று ரணில் விக்கிரமசிங்கவால் எதையும் சாதிக்க முடியாது என்று குறை கூறி வந்த மங்கள சமரவீர இன்று அவருடனேயே இணைந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவர்கள் இருவரிலும் யாருக்கு வெட்கமில்லை என்பது புரியவில்லை.

மகாவலி போன்ற அபிவிருத்தித் திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என ரணில் கூறுகின்றார். அவர் எந்த உலகத்தில் இருந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றார்?மகாவலி அபிவிருத்திக்கு 5000 கோடி ரூபா செலவாகியது. இன்று நாட்டில் அதற்கும் மேலான பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் காணவில்லையா?

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், துறைமுகங்கள், வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என பல தரப்பட்ட பாரிய அபிவித்தித் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபா செலவாகின்றது. இத்தகைய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் மக்களை திசை திருப்புவதற்காக தவறான கருத்தக்களை அவர் தெரிவிக்கின்றார்.

தேசப்பற்று தேசத் துரோகம் போன்ற வார்த்தைப் பிரயோங்களை அவர் பயன்படுத்தி  வருகின்றார். பயங்கரவாதத் தலைவருடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது ரணிலின் தேசப்பற்றா? பயங்கரவாதிகளுக்கு நவீன தொடர்புசாதன கருவிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து நாட்டின் பேரழிவுக்கு வழிவகுத்தது அவரின் தேசப்பற்றா?

பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்து நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுத்து ஜனநாயத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி தேசத் துரோகியா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அரச பாதுகாப்பை அரசாங்கம் முறையாக செய்து வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடினோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    ஜயோ ஜயோ இவருக்கு என்னும் பளயபுலிதான் கருனா என்னும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்பது தெரியாது போல் இருக்கு;

    ரணிலும் மங்களவும் கட்டிபுடி கட்டிபுடிடா,,,
    மகிந்தாவும் கருனாவும் கண்டபடி கட்டிபுடிடா;;

    இதுகூட புரியாதா ஊடகதுறை செம்மலுக்கு;;

    Reply