இலங்கை இராணுவத்தின் பவள விழாவை முன்னிட்டு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ள இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. கண்காட்சி ஏற்பாடுகளை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் புலிகளுடனான யுத்தத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றின் வீடியோக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.
இராணுவத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய தகவல்கள், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றனவும் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.