காலஞ் சென்று பிரபல சிங்கள திரைப்பட நடிகர் காமினி பொன்சோகாவின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கின் முன்பாக திரை நீக்கம் செய்து வைத்தார் அமைச்சர்களான மேவின் சில்வா, ஜீவன் குமாரதுங்க, மற்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட பல அரசியல் வாதிகள் இதில் கலந்து கொண்டனர்.
ரவீந்திர ரன்தெனிய, மாலனி பொன்சேகா, உட்பட பிரபல சினிமாக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்
காமினி பொன்சேகா மன்றம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபே குணவர்தன, மற்றும் சிங்கள சினிமா கலைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.